INSEE சங்ஸ்தா சீமெந்து தொடர்ந்து 11 ஆவது ஆண்டாக 2022 இற்கான SLIM Kantar People’s Award விருதை வென்றுள்ளது

Share with your friend

இலங்கையில் Portland-Composite-Cement (போர்ட்லன்ட்-கலப்பு-சீமெந்து) இனைப் பொறுத்தவரையில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் விரும்பப்படும் வர்த்தகநாமமான INSEE சங்ஸ்தா சீமெந்து, அண்மையில் இடம்பெற்ற “SLIM Kantar People’s Awards 2022” நிகழ்வில் நுகர்வோரின் நம்பிக்கையை வென்று அவர்களின் அமோக வாக்குகளைச் சம்பாதித்து, தொடர்ந்து 11 ஆவது ஆண்டாக “People’s Housing and Construction Brand of the Year” (மக்களின் அபிமானத்தை வென்ற வருடத்தின் மிகச் சிறந்த வீடமைப்பு மற்றும் கட்டுமான வர்த்தகநாமம்) என்ற விருதைச் சம்பாதித்துள்ளது. இலங்கையின் வர்த்தகநாமங்கள் மற்றும் சந்தைப்படுத்தல் சமூகம் ஆகிய இரண்டினாலும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு நிகழ்வான SLIM Kantar People’s Awards விருதுகள், இலங்கை சந்தைப்படுத்தல் கற்கை நிலையத்தால் (SLIM) ஏற்பாடு செய்யப்படுகின்றது. மக்கள் விருதுகள் பல்வேறு தொழில் துறைகள் மற்றும் சேவைகளில் நுகர்வோரின் விருப்பங்களையும், அபிமானத்தையும் கொண்டாடும் மற்றும் அங்கீகரிக்கும் ஒரு விருது வழங்கல் திட்டம் என்ற வகையில், குறிப்பாக இது தனித்துவம் மிக்கது.

SLIM Kantar People’s Awards 2022 விருதுகள் நிகழ்வானது 2022 மார்ச் 21 அன்று மொனார்க் இம்பீரியல் நிகழ்வு மண்டபத்தில் இடம்பெற்றதுடன், இதில் வர்த்தகநாமங்கள் மற்றும் விளம்பர முகவர் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட சந்தைப்படுத்தல் தொழில்துறையினர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். SLIM Kantar People’s Award 2022 க்கான வீடமைப்பு மற்றும் கட்டுமான வர்த்தகநாமத்திற்கான இந்த வருடத்திற்கான விருதை INSEE Cement நிறுவனத்தின் சார்பாக, அதன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட துணைத் தலைமை அதிகாரியும், சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் புத்தாக்கத் துறை பணிப்பாளருமான ஜான் குனிக் ஏற்றுக்கொண்டார்.

INSEE Cement நிறுவனத்தின் சார்பாக, அதன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட துணைத் தலைமை அதிகாரியும், சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் புத்தாக்கத் துறை பணிப்பாளருமான ஜான் குனிக் அவர்கள் அணியின் கூட்டு மகிழ்ச்சி தொடர்பில் தனது கருத்துக்களை வெளிப்படுத்துகையில், “தொடர்ந்து 11 ஆவது ஆண்டாக இந்த விருதைப் பெற்றுக்கொள்வதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம். வீடமைப்பு மற்றும் கட்டுமானத்துறையில் சிறந்த வர்த்தகநாமமாக ஒவ்வொரு வருடமும் இலங்கை நுகர்வோரால் நாம் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்டு வருவது என்பது எமது உற்பத்தியின் தரத்தை மட்டுமன்றி, எமது நுகர்வோர், விநியோகஸ்தர்கள் மற்றும் தொடர்புபட்ட அனைத்து தரப்பினரதும் வலையமைப்பு ஆகியவற்றுடன் நாம் கட்டியெழுப்பியுள்ள மற்றும் பேணிவருகின்ற தலைசிறந்த உறவுகளையும் உறுதிப்படுத்துகிறது. மற்ற பங்குதாரர்கள். INSEE சங்ஸ்தா சீமெந்தினை மிகச் சிறந்ததாக அங்கீகரித்தமைக்காக அனைத்து இலங்கையர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், எங்கள் தயாரிப்புகள் மற்றும் எங்கள் சேவைகள் எப்போதும் மிகச் சிறந்த தரத்தில் இருப்பதை உறுதி செய்வதற்கான எங்கள் அர்ப்பணிப்பைப் புதுப்பிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறோம்,” என்று குறிப்பிட்டார்.

INSEE சங்ஸ்தா சீமெந்து இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட முதன்முதல் போர்ட்லன்ட்-கலப்பு-சீமெந்து என்பதுடன், அந்த வகையில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஒரேயொரு சீமெந்து ஆகும். “Super S” தூள் கட்டமைப்பின் விளைவாக இந்த சீமெந்து அதிக வலிமை, அதிகம் நீடித்துழைத்தல் மற்றும் சிறந்த மேசன் வேலைத்திறன் காரணமாக, இலங்கையின் கட்டுமானத் துறையில் முதலிடம் வகிக்கின்றது. இந்த தலைசிறந்த பண்புகளுக்கு மேலதிகமாக, INSEE சங்ஸ்தா சீமெந்து, மழைநீர் ஊடுருவல் மற்றும் உட்புகுவதைத் தடுப்பதற்கான விசேட நீர் பாதுகாப்பு தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்பதுடன், பசுமை கட்டிட சபையிடமிருந்து “பசுமை சீமெந்து” சான்று அங்கீகாரம் பெற்றுள்ளது. இது வீட்டு உரிமையாளர்களுக்கும், பூமிக்கும் சிறந்த முதலீடாக உள்ளது. INSEE சங்ஸ்தா சீமெந்து எப்பொழுதும் புத்தம்புதியது என்பதுடன், தரத்திலும் சீரானது. இலங்கையில் உள்ள மற்ற சீமெந்து தயாரிப்புக்களை விட எப்போதும் மிகவும் வலுவான கட்டமைப்புகளை தோற்றுவிக்கின்றது.

INSEE சங்ஸ்தா சீமெந்து அதன் கலைநயம் மிக்க பூச்சுக்காகவும், சாதாரண சீமெந்தினைக் காட்டிலும் குறைவான அளவில் நீர் கலக்க வேண்டும் என்பதற்காகவும் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உண்மையில், INSEE சங்ஸ்தா சீமெந்து பையொன்றுக்கு 25 லீட்டர் தண்ணீர் மட்டுமே தேவைப்படுகிறது. இது மற்ற வர்த்தகநாமங்களை விடவும் கணிசமான அளவில் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பண்புக்கூறுகள் இலங்கையில் நிர்மாணிக்கப்படுகின்ற வீடுகளில் 3 இற்கு 2 என்ற அடிப்படையில் INSEE சங்ஸ்தா சீமெந்தினைப் பயன்படுத்தி நிர்மாணிக்கப்படுவதற்கு வழிவகுத்தன. இந்த வர்த்தகநாமமானது நாட்டில் உள்ள பொறியியலாளர்கள் மற்றும் நிர்மாணிப்பாளர்களின் அபிமானத்தை மிகத் தெளிவாக வென்றுள்ளதுடன், இது இலங்கையின் அபிமானம் பெற்ற சீமெந்துத் தெரிவாகவும் மாறியுள்ளது.


Share with your friend