JL Euro Solutions மற்றும் Pharmaceris முடி மற்றும் தோல் பராமரிப்புத் தீர்வுகள் தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியது

Share with your friend

இலங்கையில் Pharmaceris Haircare மற்றும் Skincare தயாரிப்புகளின் ஒரே அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியான JL Euro Solutions, சமீபத்தில் ஹில்டன் கொழும்பு ரெசிடென்ஸில் தலைமுடி மற்றும் தோல் பராமரிப்புத்; தீர்வுகள் பற்றிய செயலமர்வை நடத்தியது.

இந்த நிகழ்வின் போது, Pharmaceris ஐச் சேர்ந்த நிபுணர்கள், அலோபீசியாவுக்காக இலங்கையில் உள்ள சிகிச்சை முறைகள் தொடர்பில் தங்களது அறிவு மற்றும் நிபுணத்துவம் என்பவற்றை பகிர்ந்து கொண்டனர். அலோபீசியா என்பது பொதுவாக முடி உதிர்தல் பிரச்சனையாகும். இது இலங்கையர்களிடையே நடுத்தர மற்றும் வயதானவர்களிடம் அதிகளவில் வளர்ந்து வரும் ஒரு பிரச்சினையாகும். முடி உதிர்தல் ஆனது ஒரு நபரின் உள மற்றும் உணர்வின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஏனெனில் முடி உதிர்வதால் கவர்ச்சியற்ற தன்மை ஏற்படுமோ என்கின்ற  உணர்வுப் போராட்டங்களால் சில சமயங்களில் அது மனச்சோர்வுக்கு கூட வழிவகுக்கலாம். மேலும் இது சுயமரியாதை பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடியதால்  தனிநபரின் வாழ்க்கை முறையையும் பெரிதும் சீர்குலைக்கலாம்.

Pharmaceris என்பது, உலகம் முழுவதும் உள்ள முடி மற்றும் தோல் பிரச்சனைகளுக்கு நீண்டகால தீர்வுகளை வழங்கி வரும், போலந்தைச் சேர்ந்த உலகின் முன்னணி ஆராய்ச்சி அடிப்படையிலான முடி பராமரிப்பு மற்றும் தோல் பராமரிப்பு உற்பத்தியாளர் ஆவர். Pharmaceris உற்பத்திகள், உலகளாவிய தரத்தில் மிக உயர்ந்த அளவில் தயாரிக்கப்பட்டு, குறிப்பாக தோல் பராமரிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், உலகளவில் காணப்படும் சில பொதுவான தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பான சிறந்த தோல் அழகுசாதனப் பொருட்களை வழங்குகிறது. 

நோயாளிகளில் காணப்படும் பல்வேறு கடினமான தோல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக, திறன் கொண்ட தயாரிப்புகளை உருவாக்குவதற்காக சமீபத்தில்; உயர் தகுதி வாய்ந்த நிபுணர்களின் குழுவால்  மேம்பட்ட ஒப்பனை சூத்திரங்களைப் பயன்படுத்தி Pharmaceris dermocosmetics உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தயாரிப்புகள் நிரூபிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் பாதுகாப்புடன் விரிவான தோல் பராமரிப்பு திட்டங்களை உருவாக்க பங்களிக்கின்றன. அனைத்து சூத்திரங்களும் சுயாதீன ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளால் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான விசுவாசமான நுகர்வோர் ஏற்கனவே Pharmaceris பிராண்ட் தயாரிப்புகளின் உயர் செயல்திறன், தரம் மற்றும் பாதுகாப்பை அங்கீகரித்துள்ளனர். பல ஆண்டுகளாக, தோல் மருத்துவர்கள், குழந்தை மருத்துவர்கள், மகப்பேற்று மருத்துவர்கள், மருந்தாளர்கள் மற்றும் மருத்துவச்சிகள் உட்பட அனைத்து வகையான மருத்துவ நிபுணர்களிடமிருந்தும் இந்த வர்த்தகநாமம் அங்கீகாரம் பெற்றுள்ளது.

வெற்றிகரமான இந்த நிகழ்வைப் பற்றி தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட JL Euro Solutions நிர்வாக இயக்குநர் செர்வின் மரியோ லிண்ட்சே – “JL Euro Solutions ஒப்பீட்டளவில் புதிய நிறுவனமாக இருந்தாலும், குறுகிய காலத்திற்குள் சந்தையில் முதல்தரமான முடி பராமரிப்பு மற்றும் தோல் பராமரிப்பு பொருட்களை வழங்கும் நிறுவனம் என்ற நற்பெயருடன் எங்களின் இருப்பை உணரவும், உருவாக்கவும் முடிந்தது. போலந்தைச் சேர்ந்த உலகின் முன்னணி ஆராய்ச்சி நிறுவனமான Pharmaceris, அவர்களின் உயர்தர முடி பராமரிப்பு மற்றும் தோல் பராமரிப்புப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான ஒரே அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது என்பது சந்தையில் எங்களின் நற்சான்றிதழ்களை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. Pharmaceris ன் ஆராய்ச்சி அடிப்படையிலான தயாரிப்புகள் மிக உயர்ந்த தரம் வாய்ந்தவை மற்றும் உலகம் முழுவதும் நம்பகத்தன்மை கொண்டவை என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வானது, முடி பராமரிப்பு மற்றும் தோல் பராமரிப்புக்கு மருந்தக தயாரிப்புகள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை உள்ளுர் நுகர்வோருக்கு எடுத்துக்காட்டும் எங்கள் ஒட்டுமொத்த இலக்கின் ஒரு பகுதியாகும்.”

JL Euro Solutions 2021 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அதன் பரந்த அளவிலான உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளுக்காக நாடு முழுவதும் உள்ள முன்னணி முடி பராமரிப்பு மற்றும் தோல் பராமரிப்பு நிபுணர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. நிறுவனத்தின் விரிவடையும் தயாரிப்பு போர்ட்ஃபோலியோவில், முடி உதிர்தல், நரை முடி, பலவீனமான மற்றும் மெல்லிய கூந்தல், பொடுகு, தோல் பளபளப்பு, ஹைப்பர் பிக்மென்டேசன் (தோலில் கருமையான திட்டுகள்), உணர்திறன் வாய்ந்த சருமம் (ஒவ்வாமைக்கு ஆளாகும் சருமம்) மற்றும் சூரிய பாதுகாப்பு ஆகியவற்றுக்கான உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகநாமங்கள் அடங்கும்.

ஆரம்பத்தில் இருந்து பெற்றுள்ள வெற்றியைக் கருத்தில் கொண்டு, JL Euro Solutions இலங்கையில் பல பிராந்தியங்களுக்கு விரிவடைவதற்குத் திட்டமிட்டு வருகிறது. இதனால், பெருவாரியான மக்கள் அவர்களது வளர்ந்து வரும் தயாரிப்புத் தொகுப்பை எளிதாக அணுக முடியும். Pharmaceris தயாரிப்புகளின் தொடர்ச்சியை அதிகரிப்பதற்கான புதிய வாய்ப்புகளையும் நிறுவனம் ஆராய்ந்து வருகின்றது மற்றும் 360° கவரேஜுடன் இலங்கையில் முன்னணி முடி பராமரிப்பு மற்றும் தோல் பராமரிப்பு வழங்குனராக மாறுவதிலும் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.


Share with your friend