செலான் வங்கி, Kedalla Art of Living 2024 உடன் தொடர்ந்து 12ஆவது தடவையாக Title Partnerஆக இணைவதில் பெருமிதம் கொள்கிறது. Asia Exhibition and Conventions Pvt Ltdஆல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Kedella Art of Living Expo, தொடர்ந்து 18 ஆண்டுகளாக வாழ்க்கை முறை சாந்த இலங்கையின் முதற்தர கண்காட்சியாக இருந்து வருகிறது. இவ்வாண்டிற்கான கண்காட்சி நவம்பர் 29 முதல் டிசம்பர் 1, 2024 வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இது பார்வையாளர்களுக்கு கட்டுமானம், வீட்டு மேம்பாடு அல்லது உட்புற வடிவமைப்பிற்கு தேவையான பல்வேறு வகையான வாழ்க்கை முறை சார்ந்த தயாரிப்புகள், சேவைகள் மற்றும் பொருட்களை ஆராய ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.
செலான் வங்கியானது இந்நிகழ்வில் பல தரப்பட்ட வங்கித் தீர்வுகளை தனிப்பயனாக்கப்பட்ட விதத்தில் வழங்கும் ஓர் ஆலோசகராக கலந்துகொள்ளும். வீடமைப்பு மற்றும் தனிநபர் கடன்கள், குத்தகை வசதிகள், கடனட்டைகள், நடைமுறை மற்றும் சேமிப்பு கணக்குகள், மற்றும் சூரிய மின்சக்தி கடன்கள் (solar loans) ஆகியவை இதில் உள்ளடங்கும். வாடிக்கையாளர்களின் தேவையை நிவர்த்தி செய்து, ஒப்பிடமுடியாத வாடிக்கையாளர் சேவையுடன் கூடிய எளிமையான தீர்வுகளை வழங்கும் வங்கியின் நோக்கத்தை இந்நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.
Kedella Art of Living 2024 Expo, வீடமைப்பு மற்றும் real estate நிபுணர்களை ஒன்றிணைக்கும் தளம் ஆகும். இங்கு 200இற்கும் மேற்பட்ட வர்த்தக காட்சிக்கூடங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் அலங்காரப் பொருட்களை உள்ளடக்கிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தும். காட்சிக்கூடங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிலவடிவமைப்பு தெரிவுகள், தளபாடங்கள், சமையலறைப் பொருட்கள், டைல்கள், கிரனைட் மற்றும் குளியலறை பொருத்துதல்கள் போன்றவற்றை ஆராய்வதற்கான வாய்ப்பை வழங்கும். மின்சாதனப் பொருட்கள், வண்ணப்பூச்சுகள், wallpapers, உட்கூரை பொருத்துதல்கள் மற்றும் விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு வீட்டு மேம்பாடு மற்றும் உட்புற வடிவமைப்பு தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் கூடங்களையும் வாடிக்கையாளர்கள் பார்வையிடலாம். இந்நிகழ்வில் காப்பீட்டு நிறுவனங்களும் பங்குபெறும். Kedellaவுடனான தனது இணைவு தொடர்பாக பெருமை கொள்ளும் செலான் வங்கி நாடு முழுவதும் உள்ள வீட்டு உரிமையாளர்களை ஆதரிப்பதில் இக்கண்காட்சியின் தனித்துவமான பங்கை எடுத்துக்காட்டுகிறது.
Kedella – Art of Living Expo உடனான செலான் வங்கியின் பங்காளித்துவத்தின் தொடர்ச்சியான வெற்றி குறித்து பேசிய, சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை உதவி பொது முகாமையாளர் ஆசிரி அபயரத்ன, “Kedella உடனான எங்கள் கூட்டாண்மையின் புதிய அத்தியாயத்தில் காலடி எடுத்து வைப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இது வீடுகளை கட்ட அல்லது புதுப்பிக்க மற்றும் விஸ்தரிக்க நிலைபேறான மாற்றுவழிகளை பின்பற்ற விழையும் எந்தவொரு வயதிலுள்ள சொத்து உரிமையாளர்களையும் ஊக்கப்படுத்தி வாடிக்கையாளர் சேவைக்கான எங்கள் அர்ப்பணிப்பை இணைக்கும் முயற்சி ஆகும். இதன் பொருட்டு, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எளிமையான, தனிப்பயனாக்கப்பட்ட நிதித் தீர்வுகளை தொடர்ந்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.” என்றார்.
இக் கண்காட்சியின் போது வங்கியின் அர்ப்பணிப்புள்ள வீடமைப்பு கடன் நிபுணர்கள் கொண்ட குழுவொன்று தமது நிபுணத்துவ வழிகாட்டல் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு ஆதரவு அளிக்கவும் அவர்கள் போட்டிமிகு வட்டி விகிதங்களுடனான வீடமைப்புக் கடன்களை பெறுவதை உறுதி செய்யவும் தயாராக உள்ளது. மேலும் இக்குழு தனிப்பயனாக்கபட்ட சேவை மற்றும் திறமையான தொடர்பாடல் ஊடாக வாடிக்கையாளர்கள் கடன் விண்ணப்ப படிவத்தை எவ்வித தடங்கலுமின்றி பூர்த்தி செய்ய உதவுவதுடன் கடனை வாடிக்கையாளர்கள் பெறும் வரை அவர்களின் தேவைகளை ஆராய்ந்து அதற்குரிய ஆலோசனைகளை வழங்கி அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று சேவைகளை வழங்கி கடன் வசதிகளையும் பெற்றுத் தருகிறார்கள். மேலும் இக்கண்காட்சியின் நிமித்தம் செலான் வங்கி, வாடிக்கையாளரின் நலன் கருதி அங்கே வந்து விண்ணப்பிப்பவர்களுக்கு விசேட வட்டி வீதங்களையும் சிறப்பு சலுகைகளையும் வழங்கவிருக்கிறது.
இந்நிகழ்விற்கான Title partnership உடன்படிக்கை செலான் வங்கி மற்றும் Asia Exhibition & Convention Pvt Ltd ஆகியவற்றுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டது. வீடு அல்லது காணி வாங்குவதற்கு, கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு அல்லது வீட்டைப் புனரமைப்பதற்கு நிதி உதவி கோரும் வாடிக்கையாளர்கள் இந் நிகழ்வில் இத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட செலான் வங்கியின் சிறப்புச் சலுகைகளிலிருந்து பயனடைவார்கள்.