LMD இன் வாடிக்கையாளர் சிறப்பு கருத்துக் கணிப்பில் தொடர்ச்சியாக 4ஆவது வருடமாகவும் தனது 1ஆம் ஸ்தானத்தை செலான் வங்கி தன்வசப்படுத்தியது

Share with your friend

இலங்கையில் வங்கியியல் மற்றும் நிதிச் சேவைகளில், சேவைத் தரத்தில் சிறந்த ஸ்தானத்தைக் கொண்டிருக்கும் அன்புடன் அரவணைக்கும் வங்கியான செலான் வங்கி, தனது நிலையை மேலும் உறுதி செய்யும் வகையில், LMD இன் வாடிக்கையாளர் சிறப்பு கருத்துக் கணிப்பில் தொடர்ச்சியாக நான்காவது வருடமாகவும் முதல் நிலையில் தரப்படுத்தப்பட்டிருந்தது.

வங்கியின் 34 வருட கால செயற்பாடுகளில் வாடிக்கையாளர் சேவையில் காண்பிக்கப்பட்டு வரும் கரிசனைக்கு எடுத்துக் காட்டாக இந்த சாதனை அமைந்துள்ளது. கடந்த காலங்களில், அன்புடன் அரவணைக்கும் வங்கி எனும் தனது தொனிப்பொருளுக்கமைவாக, வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்து கொண்டு, அவர்களுக்கு பொருத்தமான நிதித் தீர்வுகளை வழங்கிய வண்ணமுள்ளது.

இந்த மைல்கல் சாதனை தொடர்பில் செலான் வங்கியின் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி ரமேஷ் ஜயசேகர கருத்துத் தெரிவிக்கையில், “வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சகல தீர்வுகளும், ஒப்பீட்டளவில் ஒரே மாதிரியானவையாக காணப்படும் நிலையில், வங்கித் தீர்வுகளைப் பொறுத்தமட்டில் சேவை என்பது பிரதான மாறுபடுத்தும் காரணியாக அமைந்துள்ளது. செலான் வங்கியில், வாடிக்கையாளருக்கு முன்னுரிமை எனும் கொள்கையின் பிரகாரம், ஒவ்வொரு ஊழியரும் செயலாற்றுவதுடன், எமது DNA இல் ஒரு அங்கமாக இது அமைந்துள்ளது. வாடிக்கையாளர் சேவைக்காக நாம் காண்பிக்கும் முயற்சிகளுக்கு, தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாகவும், ஒவ்வொரு ஆண்டிலும் கௌரவிப்பைப் பெற்றுக் கொள்வதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.” என்றார். 

செலான் வங்கி வாடிக்கையாளர் சேவைத் தரம் என்பதை மாத்திரம் கொண்டிருக்காமல், பல்வேறு செயற்பாடுகளினூடாக, வாடிக்கையாளர் அனுபவ முகாமைத்துவத்தையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு படியிலும் வாடிக்கையாளர் அனுபவப் பயணத்தை நிர்வகித்து கட்டமைப்பதனூடாக, நீண்ட கால அடிப்படையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பை ஏற்படுத்திக் கொள்வதை உறுதி செய்கின்றது.

அர்ப்பணிப்பான வாடிக்கையாளர் அனுபவ முகாமைத்துவ அணியினால், வாடிக்கையாளர் சேவைத் தரத்தை மேம்படுத்துவதற்கு வங்கியின் 360 பாகை அணுகுமுறையை வினைத்திறனான வகையில் மேற்கொள்வதற்கு பங்களிப்பு வழங்கப்படுகின்றது. கருத்தாய்வுகளிலிருந்து, போட்டியாளர்களை அடையாளப்படுத்துவது மற்றும் உள்ளக மீளாய்வுகள் போன்றவற்றினூடாக, வாடிக்கையாளர் அனுபவங்களில் உயர்ந்த நியமங்களைப் பேணுவதற்கான சகல முயற்சிகளையும் செலான் வங்கி தொடர்ந்து முன்னெடுத்த வண்ணமுள்ளது.

நம்பிக்கையூட்டும் எதிர்காலத்தில் செலான் வங்கி கவனம் செலுத்தும் நிலையில், சிறந்த சேவையை வழங்குவது மாத்திரமன்றி, தீர்வுகளை விற்பனை செய்வதற்கு மாறாக, பொருத்தமான தீர்வுகளை வழங்குவதில் கவனம் செலுத்தும். வங்கி தொடர்ந்தும் நேர்த்தியாக காணப்படுவதுடன், நிர்வாகத்தினால் களத்தில் துரித தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவதுடன், பொருளாதாரத்துக்கு ஆதரவளிக்கக்கூடிய பகுதிகளுக்கு வியாபிக்கக்கூடிய வகையிலும், நிறுவனத்தின் இலாபகரத்தன்மையை உறுதி செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

நாட்டில் முன்னெடுக்கப்படும் பிரதான வர்த்தக நாம சேவை கருத்தாய்வுகளில் ஒன்றாக அமைந்துள்ள LMD இன் ஒன்லைன் வாடிக்கையாளர் சேவை சிறப்பு கருத்தாய்வில், சுமார் 2,800 பதில்கள் 2022 ஜுலை 15 முதல் செப்டெம்பர் 15 வரை பெறப்பட்டிருந்தன. சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் 22 பிரிவுகளை இந்தக் கருத்தாய்வு உள்வாங்கியிருந்தது. ஒவ்வொரு பிரிவிலும் சேவைச் சிறப்பு தொடர்பில் பெயரிடுமாறு பங்குபற்றுநர்களிடம் கோரப்பட்டிருந்தது. வழங்கப்பட்ட மொத்த வாக்குகளிலிருந்து, சிறந்த 20 நிறுவனங்களின் பெறுபேறுகள் நிரல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செலான் வங்கி பற்றி

அன்புடன் அரவணைக்கும் வங்கி, செலான் வங்கி, அதிநவீன தொழில்நுட்பம், புதுமையான கணக்குகள் மற்றும் வகுப்பில் சிறந்த சேவைகள் மூலம் அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு உன்னத வங்கி அனுபவத்தை வழங்குவதற்கான தொலைநோக்குடன் செயல்படுகிறது. சிறிய மற்றும் நடுத்தர, சில்லறை மற்றும் நிறுவனங்கள் என வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள வங்கி, நாடு முழுவதிலும் 540 க்கும் அதிகமான வாடிக்கையாளர் தொடர்பு கொள்ளும் அலகுகளைக் கொண்டுள்ளது. பிற்ச் மதிப்பீடுகளால் செலான் வங்கி, தேசிய நீண்டகால மதிப்பீடு ‘A(LKA)’ ஆக தரப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதனூடாக செயல்திறன் சிறப்பைக் கொண்ட நிதி ரீதியாக நிலையான அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனைகள் செலான் வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்குவதற்கான உறுதியான அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.


Share with your friend