இலங்கையின் மிகப் பெரிய மற்றும் மிகவும் புகழ்பெற்ற விரைவு சேவை உணவகச் சங்கிலியான Perera & Sons Bakers (Private) Limited (P&S), கிராமப்புற சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான மற்றொரு ஊக்கமளிக்கும் திட்டத்தை நிறைவு செய்துள்ளது.
இலங்கையர்களை மகிழ்விக்கும் அதன் 120 வருட பாரம்பரியத்தையும், பெருநிறுவன சமூகப் பொறுப்புக்கான உறுதியான அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கும் வகையில், இம்முறை P&S ஆனது குருநாகல் மாவட்டத்தில் உள்ள பஹல கொங்கடவல, வீரபொகுண கிராமத்தின் கிராமப்புற சமூகத்திற்கு உதவிக் கரம் நீட்டியுள்ளது.
இதன் விளைவாக, கிராம மக்களுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், இலங்கை கடற்படையுடன் இணைந்து, அதிநவீன ரிவர்ஸ் ஓஸ்மோசிஸ் (RO) ஆலையை நிறுவியுள்ளது.
தினமும் சுமார் 1,000 கிராம மக்களுக்கு சேவை செய்து வரும் இந்த RO ஆலை தற்போது சமூகத்தின் அன்றாட நல்வாழ்வை மேம்படுத்தும் ஒரு சின்ன நம்பிக்கையாக உள்ளது.
P&S ஆல் வழிநடத்தப்படும் இந்தத் திட்டமானது இலங்கையின் கிராமப்புறங்களில் சுத்தமான தண்ணீருக்கான அடிப்படைத் தேவையை நிவர்த்தி செய்வதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
P&S இன் நன்கொடை பிரிவான Manu Mehewara வின் கீழ் நடத்தப்பட்ட இத்திட்டம், திருகோணமலை ஆதார வைத்தியசாலை மற்றும் திருகோணமலை மாவட்ட வைத்தியசாலை போன்ற நிறுவனங்களில் வெற்றிகரமாக நிறுவப்பட்டதைத் தொடர்ந்து இப்போது இங்கும் நிறுவப்பட்டுள்ளது.இது P&S இன் நான்காவது RO நன்கொடைஆலையாகும்.
நிகழ்வில் கலந்துகொண்ட P&S இன் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.கிஹான் பெரேரா இலங்கை கடற்படைக்கு தனது நன்றியையும் கிராம மக்களுக்கு தனது ஆதரவையும் தெரிவித்தார்.
” கிராம மக்களின் வாழ்வில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தமையானது பெருமையாகவுள்ளது.இத்திட்டத்துக்கும் கடந்த காலங்களில் இதுபோன்ற பல திட்டங்களுக்கும் எங்களுடன் இணைந்து ஒத்துழைத்த இலங்கை கடற்படையினருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
”இந்தப் பூர்வாங்க முயற்சியானது ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்குகள்-6 [ UN SDG 6 ] என்ற அனைவருக்கும் சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம் என்ற திட்டத்துடன் ஒத்துப்போகிறது என்பதைக் குறிப்பிடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
”எங்கள் சமூகங்களை கவனிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற பல திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம்.”-என்றார்.
Manu Mehewaraவின் கீழ் P&S இன் நன்கொடை முயற்சிகள், கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் சமூக நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கியது.
1902 ஆம் ஆண்டிலிருந்து ஒரு செழுமையான பாரம்பரியத்துடன், அனைத்து இலங்கையர்களின் இதயங்கள், மனம் மற்றும் சுவை அரும்புகள் ஆகியவற்றில் P&S தொடர்ந்து ஒரு அழியாத அடையாளத்தை விட்டுச் செல்கிறது.இது அக்கறையுள்ள உள்நாட்டு வணிகத்தின் சாரத்தை உள்ளடக்கியது.