MCA சுப்பர் பிரீமியர் லீக் 2022 இல் CDB வெற்றி

Share with your friend

MCA சுப்பர் பிரீமியர் லீக் 2022 போட்டியின் லீக் சம்பியன்சிப் போட்டிகளில் சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB) வெற்றியை பதிவு செய்திருந்தது. 15 போட்டிகளைக் கொண்ட லீக் சுற்றின் நிறைவில் 21 புள்ளிகளுடன் CDB முன்னிலையில் திகழ்ந்தது. இதில் போட்டியிட்ட ஏனைய போட்டியாளர்கள் இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களில் 13.5 மற்றும் 13 புள்ளிகளுடன் காணப்பட்டன.

ஒதுக்கப்பட்ட ஓவர்களின் அரைப்பங்கு மீதமிருந்த நிலையில், ஹற்றன் நஷனல் வங்கி அணியை வெற்றியீட்டியிருந்ததனூடாக CDB வெற்றியை சுவீகரித்திருந்தது. Mode Engineering, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் சம்பத் வங்கி ஆகிய அணிகளுக்கெதிராகவும் வெற்றியை பதிவு செய்திருந்தது. CDB அணியைச் சேர்ந்த தனுஷ்க தர்மசிறி போட்டித் தொடரின் அதிக ஓட்டங்களான 121 ஐ பதிவு செய்திருந்தார். போட்டித் தொடரின் அதிகளவு விக்கட்களான 7 ஐ லக்சித மனசிங்க பெற்றுக் கொண்டார்.

போட்டிகளில் தொடர் வெற்றியை பதிவு செய்திருந்த CDB அணியில்  லஹிரு மதுசங்க (தலைவர்), லஹிரு உதான (உப தலைவர்), சிதார கிம்ஹான, ஹசித பெரேரா, அஞ்ஜலோ பெரேரா, தனுஷ்க தர்மகீர்த்தி, முதித லக்சான், சவின் குணசேகர, தரிந்து ரத்நாயக்க, ரொஹான் சஞ்ஜய, கேஷான் விஜேரட்ன, லக்சித மனசிங்க, வனிந்து ஹசரங்க, சரித் அசலங்க, சதுரங்க டில்ஷான், பெத்தும் நிஸ்சங்க, காமிந்து மென்டிஸ், சச்சிந்து கொலம்பகே, அசித பெர்னான்டோ, டெஹான் சாஃப்ட்டர், தேவிந்து சேனாரட்ன மற்றும் சச்சிந்த பீரிஸ் ஆகியோர் அடங்கியிருந்தனர்.


Share with your friend