Microsoft இனால் 2023 Imagine Cup தென்கிழக்காசிய புதிய சந்தைகள் போட்டி அறிமுகம் 

Share with your friend

Microsoft தனது 2023 Imagine Cup தென்கிழக்காசிய புதிய சந்தைகள் (SEANM) பிராந்திய போட்டியை மெய்நிகர் நிகழ்வில் அறிமுகம் செய்திருந்தது.  இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தவர்கள் மத்தியில் Microsoft இன் சிரேஷ்ட பிராந்திய பிரதிநிதிகள் உரையாற்றியிருந்ததுடன், மாணவர்களை வரவேற்றிருந்ததுடன், நவீன தொழில்நுட்ப தீர்வுகளை கட்டியெழுப்புவது தொடர்பான தமது ஈடுபாட்டையும் நோக்கையும் வெளிப்படுத்துமாறு கோரியிருந்தனர்.

முன்னணி சர்வதேச மாணவர் தொழில்நுட்ப போட்டியாக 21 வருடங்களை பூர்த்தி செய்துள்ளதுடன், Imagine Cup இனூடாக மாணவர்களுக்கு தமது தொழில்முயற்சியாண்மை தொடர்பான வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதுடன், இன்றைய உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான தொழில்நுட்ப தீர்வை கட்டியெழுப்ப வாய்ப்பை வழங்குவதாகவும் அமைந்திருக்கும். மாணவர்களுக்கு புதிய திறன்களை பெற்றுக் கொள்வதற்கும், ஒரே சிந்தனையுடைய மக்களுடன் இணைப்பதற்கும், பிரத்தியேகமான பயிற்சிகளை அணுகுவது, ஆலோசனை வழங்கலை பெற்றுக் கொள்ளல், சிறந்த பரிசுகளை வெல்வதற்கு வாய்ப்பளிப்பது மற்றும் உலகில் மாற்றத்தை ஏற்படுத்துவது போன்றவற்றை பெற்றுக் கொள்ள முடியும்.

போட்டியை அறிமுகம் செய்து Microsoft SEANM இன் பொது முகாமையாளர் சூக் ஹுன் செயா கருத்துத் தெரிவிக்கையில், “Imagine Cup என்பது மாணவர்களை பாரியளவில் சிந்திக்கச் செய்யவும், வாய்ப்புகளை இனங்காண உதவவும் புத்தாக்கமான சிந்தனைகளை வெளிப்படுத்தி, உலகின் மாபெரும் சமூக, சூழல் மற்றும் சுகாதார சவால்களை சமாளிப்பதற்கு முகங்கொடுக்கச் செய்வதற்கான சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. மாணவர்களுக்கு தமது தொழில்நிலையில் முன்னேற்றத்தை எய்துவதற்கான சிறந்த ஆரம்பப் புள்ளியாக இந்த போட்டி அமைந்திருப்பதுடன், Microsoft இடமிருந்து பயிற்சிகள் மற்றும் வழிகாட்டல்கள் போன்ற வாய்ப்புகளையும் பெற்றுக் கொள்ள முடிவதுடன், புதிய, விறுவிறுப்பான மற்றும் வெற்றிகரமான எதிர்கால வழிகாட்டல்களை ஏற்படுத்திக் கொள்ளலாம்.” என்றார்.

இரண்டு தசாப்த காலப்பகுதிக்கு முன்னர் இந்த போட்டி ஆரம்பமாகியது முதல், 163 க்கு அதிகமான நாடுகளைச் சேர்ந்த சுமார் இரண்டு மில்லியனுக்கு அதிகமான மாணவர்கள் Microsoft தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பங்கேற்று, பெறுமதியான மற்றும் வினைத்திறனான திட்டங்களை உருவாக்கியிருந்தனர். இந்த ஆண்டின் போட்டியின் வெற்றியாளர்களுக்கு Microsoft for Startups Founders Hub நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு விண்ணப்பிக்கும் தகைமை கிடைக்கும். அதனூடாக, சிறந்த சிந்தனையைக் கொண்டிருக்கும் எந்தவொரு மாணவருக்கும் தொழில்முயற்சியாளராவதற்கான வாய்ப்புக் கிடைக்கும்.

கடந்த ஆண்டில் Imagine Cup உலக சம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டாமிடத்துக்கு தெரிவாகியிருந்த Nana Shilpa உடன் குழுநிலை கலந்துரையாடலொன்றும் இந்த நிகழ்வில் உள்ளடங்கியிருந்தது. உள்நாட்டு மொழிகளைப் பயன்படுத்தி ஆரம்ப பாடசாலை மாணவர்கள் மத்தியில் பயிலல் மாற்றுத்திறன்களை தோற்றுவித்த dyscalculia மற்றும் dysgraphia போன்றவற்றை இனங்காணும் மொபைல் app ஐ வடிவமைத்தமைக்காக Nana Shilpa க்கு வெற்றி கிடைத்திருந்தது.

Microsoft இலங்கை மற்றும் மாலைதீவுகள் முகாமையாளர் ஹர்ஷ ரந்தெனி கருத்துத் தெரிவிக்கையில், “Microsoft Imagine Cup என்பது தென்கிழக்காசிய புதிய சந்தைகளின் மாணவர்களுக்கு சர்வதேச போட்டியில் பங்கேற்றும் சிறந்த வாய்ப்பை வழங்குகின்றது. Nana Shilpa அணியின் மைல்கல் சாதனையினூடாக, புத்தாக்கத்துக்கான மையமாக இலங்கையை வெளிப்படுத்தியிருந்ததுடன், உலகளாவிய ரீதியில் போட்டியிடக் கூடிய, உலகத் தரம் வாய்ந்த மாணவர்களின் பிரசன்னத்தை வெளிப்படுத்தியிருந்தது. இந்த வெற்றியானது, இளம் தலைமுறையினருக்கு, தமது தொழில்முயற்சியாண்மை சார் பிரிவை பற்றி ஆராய ஊக்குவிப்பதாக அமைந்திருக்கும் என நான் நம்புகின்றேன்.” என்றார்.

Microsoft தென்கிழக்காசிய புதிய சந்தைகள் பிராந்திய போட்டியில் வெற்றியீட்டும் நான்கு அணிகளும், உலகளாவிய ரீதியில் இடம்பெறும் மாபெரும் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறும். இந்த நான்கு அணிகளைச் சேர்ந்தவர்களுக்கும் தமது திறமைகளை உலகளாவிய ரீதியில் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புக் கிடைக்கும். உலகளாவிய ரீதியில் இடம்பெறும் போட்டியில் வெற்றியீட்டுவோருக்கு 100,000 அமெரிக்க டொலர்களை வெற்றியீட்டும் வாய்ப்புக் கிடைப்பதுடன், Microsoft தவிசாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சத்யா நாதெல்லாவின் வழிகாட்டலின் கீழ் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளவும் முடியும்.

2023 Imagine Cup தென்கிழக்காசிய புதிய சந்தைகள் பிராந்திய போட்டிக்காக மாணவர்கள் 20 ஜனவரி 2023 வரையில் imaginecup.microsoft.com/SEANM எனும் இணையத்தளத்தினூடாக பதிவு செய்து கொள்ளலாம்.

Microsoft பற்றி

மதிநுட்பமான cloud யுகத்துக்கு டிஜிட்டல் மாற்றியமைப்பை Microsoft செயற்படுத்துவதுடன், உலகிலுள்ள ஒவ்வொரு நபரையும், நிறுவனத்தையும் அதிகளவு எய்தச் செய்யக்கூடிய வகையில் வலுவூட்டுவது அதன் நோக்காகும்.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply