NIBM REACH 2025: வளர்ந்து வரும் திறமை மற்றும் படைப்பாற்றல் திறனுக்கான ஒரு அற்புதமான மேடையாகும்

Share with your friend

தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனமானது (NIBM) அதன் வளர்ந்து வரும் மாணவர் சமூகத்தின் படைப்பாற்றல் மற்றும் பரந்த அளவிலான திறமைகளைக் கொண்டாடும் வகையில், அதன் முதன்மை திறன் நிகழ்ச்சியான REACH 2025 ஐ நடத்த உள்ளது. முந்தைய ஆண்டுகளில் பெற்ற சிறப்பான வெற்றியின் தொடர்ச்சியாக, மூன்றாவது ஆண்டாக நடைபெறவுள்ள இந்த REACH நிகழ்வானது, கல்வி மற்றும் படைப்பாற்றல் ஆகிய இரு துறைகளிலும் மாணவர்களின் முழுமையான மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட NIBM-இன் இலக்கினை பிரதிபலிக்கிறது.

REACH 2025 நிகழ்வின் இவ்வாண்டு பதிப்பானது, மாணவர்கள்தமது திறமைகளை மேடை கலைகள் வழியாக ஆராயவும் வெளிப்படுத்தவும் ஊக்குவிக்கிறது. இதற்காக அனுபவமிக்க நிபுணர்களால் குரல் பயிற்சி அமர்வுகள், நடனப் பட்டறைகள், இசைக்கருவி பயிற்சிகள் ஆகியவை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இத்தகைய பயிற்சிகள், அவர்களின் திறன்களை மேம்படுத்தவும், நிகழ்த்தல் நுட்பங்களில் நேரடி அனுபவத்தைப் பெறவும் உதவுகின்றன.

“விளைவு சார்ந்த கற்றல் முறைமையின் மூலம், வகுப்பறைக்குள் மட்டுமன்றி அதற்கு அப்பாற்பட்ட துறைகளிலும் மாணவர்களை வலுப்படுத்துவதே எமது நோக்கம்,” என NIBM-இன் டொக்டர் டி.எம்.ஏ. குலசூரிய அவர்கள் குறிப்பிட்டார். “இந்த கட்டமைக்கப்பட்ட படைப்பாற்றல் கற்றல் வாய்ப்புகள் வழியாக, நாம் மாணவர்களிடையே தன்னம்பிக்கையை உருவாக்குகிறோம். அதேசமயம் சுய வெளிப்பாடு மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கிறோம். REACH நிகழ்வானது, மாணவர்கள் ஒருமித்த அணியாக இணைந்து, முந்தைய ஆண்டுகளை விட உயர்ந்த தரத்தில் நினைவுறும் நிகழ்வினை உருவாக்கும் ஒரு சமூக உணர்வை வளர்க்கும் தளமாக மாறியுள்ளது. அவர்களின் சாதனைகள் தொடர்பாக நாம் பெருமைப்படுகிறோம்; மேலும், 2025 ஆம் ஆண்டில் புதிய படைப்பாற்றல்மிக்க திறமைகளை கண்டறிவதற்காகநாம் உற்சாகத்துடன் காத்திருக்கிறோம்.”

இலங்கையின் பொழுதுபோக்கு மற்றும் மேடை கலைத் துறைகளில் சிறப்பைக் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறந்த நிபுணர்கள் குழுவானது, இந்த நிகழ்விற்கு மேலும் பெருமையை சேர்க்க இருக்கிறது.

அவர்களில், இலங்கையின் முன்னோடியான பெண் துள்ளிசை கலைஞர், பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்திறன் கொண்ட அஷாந்தி டி அல்விஸ், புகழ்பெற்ற நடிகர், பாடகர் மற்றும் தொழில்முயற்சியாளராகத் திகழும் துஷ்யந்த் வீரமன், மேலும் நடிகரும் இசைக்கலைஞருமான மிஹிந்து ஆரியரத்ன ஆகியோர் நடுவர்களாக இணைகின்றனர்.

இவர்கள், போட்டியின் மதிப்பீட்டு செயல்முறையின் போது தொழில்முறை ஆலோசனைகளை வழங்கவுள்ளதுடன் முழு போட்டிக் காலத்திலும் பங்கேற்பாளர்களுக்கு அறிவுறுத்தல்களையும் வழிகாட்டுதல்களையும் வழங்கவுள்ளனர்.

REACH 2025 பல்வேறு திறன் தேர்வு மற்றும் பயிற்சி சுற்றுகளைக் கொண்டுள்ளது. இவற்றின் நிறைவாக, சிறந்த இறுதிப்போட்டியாளர்கள் தமது திறமைகளை சிறந்த கலை நிகழ்ச்சியாக இணைத்து, மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் அரங்கேற்றும் மிகப்பிரமாண்டமான இறுதிப் விழா (Grand Finale) நடைபெறும். இது, NIBM-இன் படைப்பாற்றல் மேன்மையை முழுமையாக வெளிப்படுத்தும் ஒரு மேடையாக மிளிரவுள்ளது. முதல் கட்டத் திறன் தேர்வுகள் 2025 அக்டோபர் 15 மற்றும் 17 தேதிகளில் நடைபெற்றன. இதில் கொழும்பு 7, இராஜகிரிய, கிருலப்பனை, கண்டி, பேராதனை, குருநாகல், காலி, மாத்தறை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள NIBM வளாகங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த நிகழ்வானது, திறமை மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றின் துடிப்பான கலவையை ஒன்றிணைத்ததுடன் இது NIBM சமூகத்தில் மலரும் கலை மற்றும் படைப்பாற்றலின் பல்வகைச் சுவையைக் பிரதிபலிக்கிறது.REACH 2025-இன் நோக்கம், NIBM மாணவர்களின் இயற்கையான திறமைகளை கண்டறிந்து, வளர்த்து, உயர்த்துவது மட்டுமல்லாது, அவர்களுக்கு அங்கீகாரம் மற்றும் தொழில் அபிவிருத்திக்கான ஒரு தளத்தை வழங்குவதாகும்.REACH ஆனது செயல்திறன் பயிற்சி, தொழில்முறை கருத்தளிப்பு, மற்றும் படைப்புத் துறையிலான அனுபவம் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம், உலகளாவிய மாற்றங்களுடன் பொருந்தி முன்னேறும் திறனும் தன்னம்பிக்கையும் கொண்ட முழுமையான நபர்களை உருவாக்கும் NIBM-இன் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது.


Share with your friend