NÜWA ஹோட்டலை அறிமுகப்படுத்தும் City of Dreams Sri Lanka: அதிஉயர் ஆடம்பர விருந்தோம்பலின் புதிய சகாப்தம் ஆரம்பம் 

Share with your friend

இலங்கையின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் ஒரு முக்கிய மைக்கல்லாக, Melco Resorts & Entertainment நிறுவனத்தின் ஆடம்பர ஹோட்டல் வர்த்தகநாமமான நுவா (NUWA), City of Dreams Sri Lanka வளாகத்தில் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆசிய மற்றும் ஐரோப்பாவில் ரிசார்ட் வசதிகளை இயக்கும் Melco மற்றும் இலங்கையின் மிகப்பெரிய பட்டியலிடப்பட்ட பன்முகக் குழுமமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (JKH) இடையேயான கூட்டாண்மையின் விளைவாக திறக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன ஹோட்டலானது இலங்கையை தெற்காசியாவின் சிறந்த ஆடம்பர சுற்றுலா தலமாக உருவாக்குவதில் ஒரு திருப்புமுனை அடையாளமாக அமைந்துள்ளது.

Melco-வின் உச்சகட்ட ஆடம்பர ஹோட்டல் வர்த்தகநாமமான நுவா, 2018 இல் மெக்காவு மற்றும் மணிலாவில் அறிமுகமாகி, தற்போது கொழும்பில் உள்ள City of Dreams Sri Lanka-வில் திறக்கப்பட்டுள்ளது. 

மனித குலத்தை உருவாக்கிய புராண சீன தெய்வத்தின் பெயரால் அழைக்கப்படும் இந்த ஹோட்டல், நவீன அழகியலுடன் இலங்கையின் பாரம்பரியத்தை இணைத்து, விருந்தினர்களுக்கு தனிப்பட்ட மற்றும் சிறந்த விடுமுறை அனுபவத்தை வழங்குகிறது.

City of Dreams Sri Lanka வளாகத்தில் அமைந்துள்ள நுவாவில் 113 ஆடம்பர அறைகள் உள்ளன. கடல்முகப்பு மற்றும் நகரக்காட்சி டீலக்ஸ் (Deluxe) அறைகள், பிரீமியம் (Premium) மற்றும் எக்ஸிகியூட்டிவ் சூட்கள் (Executive Suites), தனித்துவமான அதிபர் (exclusive Presidential) மற்றும் டிராகன் சூட்கள் (Dragon Suites) ஆகியவை இதில் அடங்கும் ஒவ்வொரு அறையும் இந்தியப் பெருங்கடல் மற்றும் கொழும்பு வானலை காட்சிகளுடன், தளர்வான ஆடம்பரத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நுவாவில், விருந்தினர்கள் ஒரு நுணுக்கமான தனியார் லவுஞ்ச்சான தி வால்ட் (The Vault) மேற்கத்திய உணவுகள் மற்றும் கைவினைப் பானங்களை வழங்கும் கிறிஸ்டல் லவுஞ்ச் மற்றும் ஜாஸ் இசையுடன் சிறப்புப் பானங்கள் வழங்கும் பூல் பார் ஆகியவற்றில் சிறப்பான உணவு அனுபவங்களைப் பெற முடியும்.

உயர்மட்ட சூட்களில் (highest-tier suites) தங்குபவர்களுக்கு தனிப்பட்ட தேவைக்கேற்ப அறைக்குள் உணவு சேவையும் உண்டு. நுவா ஹோட்டலில் உள்ள அறைகளில் இத்தாலிய தயாரிப்பான La Bottega அலங்காரப் பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வறண்ட அலங்கார பொருட்களையும் வழங்குகிறது. இது ஆடம்பரம் மற்றும் நிலைபேறாண்மை மீதான அதன் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துகிறது.

Melco மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக, City of Dreams Sri Lanka 4.5 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இது 1.3 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுடன் இலங்கை வரலாற்றின் மிகப்பெரிய தனியார் துறை திட்டமாகும். இதில் ஆடம்பர குடியிருப்பு கட்டிடங்கள், 30 மாடி அலுவலக கட்டிடம், உயர்தர கடைகள் மற்றும் தெற்காசியாவின் மிக நவீனமான கெசினோ ஆகியவை அடங்கும். இந்த மேம்பாட்டுத் திட்டம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 20,000க்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கொழும்பை ஒரு வணிக, பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா மையமாக மற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
நுவாவின் அறிமுகம் இலங்கையின் சுற்றுலாத் துறையின் மீள்எழுச்சியில் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையைக் காட்டுகிறது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் ஆழமான உள்ளூர் தலைமைத்துவம் மற்றும் Melco-வின் சர்வதேச சிறப்புத்திறனுடன், City of Dreams Sri Lanka இப்பிராந்தியத்தில் விருந்தோம்பல் துறையை மறுவரையறை செய்ய தயாராக உள்ளது. இது ஒரு மைல்கல் வளர்ச்சியாக மட்டுமல்லாமல், உலகத் தரம் வாய்ந்த ஆடம்பரமும் இலங்கை பாரம்பரியமும் இணையும்போது என்ன சாத்தியமாகும் என்பதற்கான அடையாளமாகவும் திகழ்கிறது.


Share with your friend