SLT-MOBITEL Mobile நிலையான புரோட்பான்ட் மற்றும் மொபைல் வலையமைப்பு பரிசோதனை அப்ளிகேஷன்கள், டேட்டா மற்றும் பகுப்பாய்வுகள் போன்றவற்றில் சர்வதேச ரீதியில் முன்னணியில் திகழும் Ookla®இனால் தொடர்ச்சியான மூன்றாவது தடவையாகவும் வேகமான மொபைல் வலையமைப்பாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதனூடாக நாடு முழுவதிலும் பரந்தளவு வலையமைப்பு மற்றும் உயர்ந்த பாவனையாளர் அனுபவத்தைப் பெற்றுக் கொடுப்பதில் SLT-MOBITEL இன் இன் மொபைல் காண்பிக்கும் ஒப்பற்ற அர்ப்பணிப்பு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
![](https://eyeviewsl.com/wp-content/uploads/2022/03/Picture1-2-1024x734.png)
அங்கீகாரம் பெற்ற சர்வதேச இணைய சேவை வழங்குநர்கள் மற்றும் மொபைல் சேவை வழங்குநர்கள் மத்தியில் காணப்படும் சராசரி வேக புள்ளிகளை பயன்படுத்தி, ஒவ்வொரு சேவை வழங்குநராலும் வழங்கப்படும் டவுன்லோட் மற்றும் அப்லோட் வேகங்களின் அளவிடப்பட்டு, அதற்கமைய நாட்டில் அந்த வலையமைப்பின் வேக செயற்திறன் தரப்படுத்தப்படும் வகையில் The Speedtest Awards™ அமைந்துள்ளது. 2017, 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் வேகமான மொபைல் வலையமைப்பு எனும் கௌரவிப்புகளை பெற்றுக் கொண்ட SLT-MOBITEL மொபைல், தொடர்ந்தும் சந்தையில் மொபைல் சேவைகள் பிரிவில் முன்னணியில் திகழ்கின்றது. SLT-MOBITEL மொபைல் பாவனையாளர்களுக்கு நாடு முழுவதிலும் சிறந்த இணைப்புத்திறனை பெற்றுக் கொள்வதை உறுதி செய்துள்ளதுடன், கேமிங், ஸ்ட்ரீமிங் அல்லது சமூக ஊடக வலைத்தளங்கள் பாவனைக்கு ஒப்பற்ற பாவனையாளர் அனுபவத்தை வழங்குகின்றது.
ஆயிரக் கணக்கான நுகர்வோர்களை மையப்படுத்திய Speedtest® பரிசோதனைகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் Ookla Speedtest Awards என்பது வருடத்தில் இரு தடவைகள் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த ஆய்வின் அடிப்படையில், SLT-MOBITEL மொபைல், அதன் போட்டியாளர்களின் வேகங்களை விட சிறப்பாக செயற்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக Speedtest விருதைப் பெற்றுள்ளது.
இந்த கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் மொபிடெல் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி சஷிகா செனரத் கருத்துத் தெரிவிக்கையில், “தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநர் எனும் வகையில், “இலங்கையின் வேகமான மொபைல் வலையமைப்பு” என்பதற்கான Speedtest விருதை தொடர்ச்சியான மூன்றாவது வருடமாகவும் பெற்றுக் கொண்டதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். சிறந்த இணைப்புத்திறன் மற்றும் ஒப்பற்ற பாவனையாளர் அனுபவத்தை எமது சகல பெறுமதி வாய்ந்த பங்காளர்களுக்கும் வழங்குவதற்கான SLT-MOBITEL இன் அர்ப்பணிப்புக்கான எடுத்துக் காட்டாக இந்த விருது அமைந்துள்ளது. மொபைல் சந்தையில் பிரதான அங்கமாக டேட்டா அமைந்திருக்கும் நிலையில், எமது வலையமைப்பை மேலும் விரிவாக்கம் செய்வது தொடர்பில் நாம் கவனம் செலுத்துவதுடன், ஒப்பற்ற இணைப்பு அனுபவத்தை பெற்றுக் கொடுத்து எமது சேவைகளை மேம்படுத்துவது தொடர்பில் நாம் கவனம் செலுத்துகின்றோம். பணியிடத்தில், களிப்பு அல்லது வீடியோக்களை ஒன்லைனில் பார்வையிடுவது என எதுவாக இருந்தாலும் SLT-MOBITEL மொபைல் இனால் அனைத்து இலங்கையர்களின் கனவுகளுக்கும் வலுவூட்ட எதிர்பார்க்கப்படுவதுடன், டிஜிட்டல் புரட்சியில் அடுத்த கட்டத்துக்கு இலங்கையை கொண்டு செல்லும் தேசிய இலக்கை நிவர்த்தி செய்வதாகவும் அமைந்திருக்கும்.” என்றார்.
2019 ஆம் ஆண்டில், SLT-MOBITEL இனால் தெற்காசிய பிராந்தியத்தில் முதன் முறையாக வணிக 5G ஸ்மார்ட்ஃபோன் ஒன்றைப் பயன்படுத்தி 5G வலையமைப்பு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதனூடாக, சாதனை மிகுந்த வேகப் பெறுமதிகளை பதிவு செய்திருந்தது. தற்போது 5G மற்றும் இதர நவீன இணைப்புத் தீர்வுகளை அறிமுகப்படுத்த தன்னை தயார்ப்படுத்திய வண்ணமுள்ளது.