OPPO தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக EISA சிறந்த தயாரிப்பு மேம்பட்ட ஸ்மார்ட்போன் விருதைப் பெறுகிறது

Share with your friend

வருடத்தின் மிக மேம்பட்ட ஸ்மார்ட்போனுக்கான EISA விருதை Find X3 Pro வென்றுள்ளது

உலகின் முன்னணி ஸ்மார்ட் சாதன தரக்குறியீடான OPPO, அதன் முதன்மையான சாதனமான Find X3 Pro ஸ்மார்ட்போனுக்கு ‘EISA BEST PRODUCT ADVANCED SMARTPHONE 2021-2022’ (சிறந்த தயாரிப்பு மேம்பட்ட ஸ்மார்ட்போன்) விருதைப் பெற்றுள்ளது. இந்த விருதை, Expert Image and Sound Association (EISA) சங்கம் வழங்கியுள்ளது. இது உலகின் மிகவும் மதிப்பிற்குரிய நுகர்வோர் இலத்திரனியல் சஞ்சிகைகளின் 61 இனை உள்ளடக்கிய குழுமமாகும்.

OPPO Oversea Sales (வெளிநாட்டு விற்பனை) பிரதித் தலைவர் Scott Zhang இது தொடர்பில் தெரிவிக்கையில், “Find X3 Pro இன் புத்தாக்கம் அங்கீகரிக்கப்பட்டு, EISA விருதைப் பெற்றமை தொடர்பில் நாம் உண்மையிலேயே பெருமையடைகின்றோம். தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக நாம் இந்த விருதை வெல்வதானது, நுகர்வோரின் எதிர்பார்ப்புகள் மற்றும் சந்தையில் உயர் தர அனுபவங்களை கொண்டு வருவது தொடர்பான எமது நோக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளது. எமது சமீபத்திய முதன்மை பட்டியலிலுள்ள ஸ்மார்ட்போன் முந்தைய தலைமுறையின் 5G வேகத்தினை Find X2 Pro யில் கட்டமைக்கிறது, ஆயினும் அது புகைப்படமெடுத்தல், அதனை செயலாக்கம் செய்து காட்சிப்படுத்தும் தொழில்நுட்பத்தில் நம்பமுடியாத புதுமையை உருவாக்குகிறது. புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்காக Find X3 Pro வில் எல்லைகளைத் தாண்டியவாறு, ஒரு நம்பமுடியாத படைப்பாற்றல் கொண்ட கருவித்தொகுதியை நாம் இணைத்துள்ளோம். அவர்கள் தங்கள் ஆடையின் பாக்கெட்டில் பொருந்தும் சாதனத்தில் ஒரு பில்லியன் வரையான வண்ணங்கள் வரை புகைப்படமெடுக்கவும் அதனை காட்சிப்படுத்தவும் அவர்களை அனுமதிக்கிறது.” என்றார்.

EISA தலைவர் Paul Miller, இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “தொழில்நுட்பத்தின் எல்லையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில், OPPO Find X3 Pro ஆனது, அதன் விரிவான அம்சத் தொகுப்பு மற்றும் தனித்துவமான வடிவமைப்பின் மூலம் கவர்ந்திழுக்கிறது. OPPO வின் முதன்மையான ஸ்மார்ட்போன் கெமரா தொகுதியானது, நான்கு வில்லைகளைக் கொண்டமைந்துள்ளது. 50MP பிரதான மற்றும் ultra wide-angle வில்லைகள், 13MP telephoto மற்றும் தனித்துவமான 60 மடங்கு உருப்பெருக்கத்தை மேற்கொள்ள வல்ல 3MP microscope வில்லைகளை கொண்டுள்ளது. இந்த பல் வில்லைகளுடனான கெமரா தொகுதியானது, ஒவ்வொரு நிலைமைகளுக்கும் ஏற்ற வகையிலான வாக்குறுதியை அளிப்பதோடு, சந்தையில் மிகவும் மேம்பட்ட ஸ்மார்ட்போனாக OPPO வின் Find X3 Pro தன்னை அடையாளப்படுத்துகிறது.” என்றார்.

OPPO Find X3 Pro ஆனது உயர் அம்சங்கள் நிறைந்த மற்றும் எதிர்காலத்திற்கான வடிவமைப்புடன் வருகிறது. இதில் அதி நவீன குவாட் கெமரா மற்றும் மூழ்கடிக்கும் திரையையும் கொண்டுள்ளது. இது புதுமையான Sony IMX766 imaging sensors மற்றும் 10-bit full-path Colour Management System தொகுதியைப் பயன்படுத்தும், இரண்டு 50MP கொண்ட பிரதான கெமராக்களை (wide-angle and ultra wide-angle) இணைத்துள்ள OPPO வின் முதலாவது ஸ்மார்ட்போன் இதுவாகும். இது பல்வேறு மட்ட நிழல்களை அடையாளம் கண்டு, உண்மையான துல்லியத்துடன், பயனர்களை ஒரு பில்லியன் வரையான வண்ணங்களை புகைப்படம் எடுக்கவும் வீடியோக்களை எடுக்கவும், சேமிக்கவும், அவற்றை காட்சிப்படுத்தவும் அனுமதிக்கிறது. Qualcomm® Snapdragon™ 5G Mobile Platforms இனால் இயக்கப்படும், Find X3 சீரிஸ் ஆனது, OPPO வினால் வெளியிடப்படும் புத்தாக்க கண்டுபிடிப்புகளில் மாத்திரம் எதிர்பார்க்கக்கூடிய அனைத்து செயல்திறனையும் வழங்குகிறது.

EISA ஆனது, மல்டிமீடியா தொழில்நுட்பங்கள் தொடர்பான நிபுணர்களைக் கொண்ட, உலகின் மிகப்பெரிய சுயாதீன ஒத்துழைப்பு மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் சந்தையின் தனித்துவமான, உலகளாவிய ரீதியிலான பார்வையை வழங்குகிறது. சுமார் 40 ஆண்டுகளாக வழங்கப்படும் EISA வின் விருதுகளானவை, சுயாதீன நுகர்வேர் தொழில்நுட்பத்தை கொள்வனவு செய்வதற்கான பரிந்துரைகளை வழங்கி வருகின்றன. Photography, Home Theatre Video, Home Theatre Audio, Hi-Fi, In-Car மற்றும் மொபைல் இலத்திரனியல் சஞ்சிகைகள், 29 நாடுகளைச் சேர்ந்த  இணையதளங்களைச் சேர்ந்த 61 முன்னணி நிபுணர் குழுக்களினால் EISA விருதுகள் வருடாந்தம் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்நிபுணர் குழுக்கள் சுயாதீனமாக பணியாற்றுவதோடு, EISA வின் ஒத்துழைப்புடன் இயங்கி வருகின்றன.

OPPO Sri Lanka பற்றி

முன்னணி ஸ்மார்ட்போன் நாமமான OPPO, அதன் முதலாவது ஸ்மார்ட் போனை 2008 இல் அறிமுகப்படுத்தியதில் இருந்து, அழகியல் திருப்தி மற்றும் புதுமையான தொழில்நுட்பம் ஆகியவற்றை இணைத்து இடைவிடாமல் தொடர்ந்து வருகிறது. இன்று, OPPO தனது வாடிக்கையாளர்களுக்கு Find மற்றும் Reno தொடர்களின் கீழான பரந்த அளவிலான ஸ்மார்ட் சாதனங்களை வழங்குகிறது, ColorOS இயங்குதளம், அதே போன்று OPPO Cloud மற்றும் OPPO + போன்ற இணைய சேவைகள். OPPO, 40 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் இயங்குகிறது. உலகளாவிய ரீதியில் 6 ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் 5 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் அத்துடன் லண்டனில் ஒரு சர்வதேச வடிவமைப்பு மையத்தையும் கொண்டுள்ளது. OPPO இன் 40,000 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாழ்வியலை உருவாக்க அர்ப்பணித்துள்ளனர். 

2015 இல், இலங்கையில் செல்பி மையப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியதிலிருந்து, புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் நுண்ணறிவு மென்பொருள்களுக்காக, OPPO அதன் எல்லைகளை விரிவுபடுத்துவதோடு, அதன் முதன்மை ‘F’ தொடர் மற்றும் பிரபலமான Reno தொடர் மூலம் பல மொடல்கள் மூலம், பரந்துபட்ட நுகர்வோர் அபிலாஷைகளை பூர்த்தி செய்கிறது. OPPO Sri Lanka ஆனது, அபான்ஸ், சிங்ககிரி, டயலொக், டாராஸ் மற்றும் ஏனைய அங்கீகரிக்கப்பட்ட OPPO விற்பனையாளர்களுடன் வலுவான கூட்டிணைப்பைக் கொண்டுள்ளதுடன், அவை OPPO நாடு முழுவதும் உள்ள இலங்கையர்களை சென்றடைய உதவுகின்றன.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply