Prime Residencies தனது கடற்கரைக்கு முகப்பான புதிய சொகுசு சேவைப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திட்டமான ‘J’Adore Negombo’ ஐ ஹோட்டல் வீதியில் அறிமுகம் செய்துள்ளது

Share with your friend

Prime Residencies PLC நீர்கொழும்பு கடற்கரைக்கு முன்பாக அமைந்துள்ள J’Adore Negombo ஐ ஹோட்டல் வீதியில் அறிமுகம் செய்துள்ளது. அதனூடாக உயர்தரம் மற்றும் சொகுசான தொடர்மனைத் தொகுதியில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது. நீர்கொழும்பில் ஹோட்டல் வீதி என்பது உள்நாட்டவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற பகுதியாக அமைந்திருப்பதுடன், இலங்கையின் தங்கமான கடற்கரை (golden coast) என புகழ்பெற்ற பகுதியாக நீர்கொழும்பு கடற்கரைப் பகுதி அமைந்துள்ளது.

இந்த அபிவிருத்தித் தொகுதி 229.2 பேர்ச், கடற்கரைக்கு முகப்பாக அமைந்துள்ளது. இது ‘T’ வடிவிலான அலங்கார வடிவமைப்பை கொண்டுள்ளதுடன், 21-மாடி வெள்ளை டவர் கிடைத் தோற்றத்தையும், 8-மாடி எமரல்ட் டவர் செங்குத்தான தோற்றத்தையும் வழங்குகின்றன. இதில் 177 நுட்பமான முறையில் வடிவமைக்கப்பட்ட சேவைப்பட்ட குடியிருப்புகள், நவீன அலங்காரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து 15 நிமிடங்களில் பயணிக்கக்கூடிய தூரத்தில் அமைந்திருக்கும் J’Adore Negombo, இலங்கையின் வளர்ந்து வரும் சுற்றுலா மையத்தினால் இதுவரையில் வழங்கப்படாத ஒப்பற்ற முதலீட்டு வாய்ப்பை அறிமுகம் செய்துள்ளது.

J’Adore Negombo இல் நுட்பமான முறையில் வடிவமைக்கப்பட்ட வசிப்பிடப் பகுதிகள் அடங்கியுள்ளன. இதில் ஒரு படுக்கையறை 900 sq. ft. தொடர்மனைகள் மற்றும் இரண்டு படுக்கையறை 975 sq. ft. முதல் 1,120 sq. ft. தொடர்மனைகள் அடங்கியுள்ளன. இதில் பெரிய அலகுகள் dual-key வசதிகளை கொண்டுள்ளன.

மூன்று படுக்கையறைகளை கொண்ட White Presidential Suites இனால் 2,189 sq. ft. இடவசதி வழங்கப்படுவதுடன், ஒன்பது அலகுகள் காணப்படுகின்றன. இவை நுணுக்கமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. உயர்தர உள்ளம்சங்களில் சகல வசதிகளையும் கொண்ட சமையலறைகள், smart locks, வாயு குளிரூட்டிகள் மற்றும் பிரத்தியேக டெரஸ் பகுதிகள் போன்றன அடங்கியுள்ளன. White Presidential Suites இல் சொகுசான தோற்றத்தை வழங்க பலகை தரை அமைக்கப்பட்டுள்ளன.

உலகத் தரம் வாய்ந்த J’Adore அனுபவத்தில் Level 21 Beach Club உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்து சமுத்திரத்தை முகப்பாக கொண்ட நீச்சல் தடாகமாக இது அமைந்துள்ளதுடன், சகல வசதிகளையும் கொண்ட fitness studio மற்றும் wellness centre பிரத்தியேகமான concierge மற்றும் butler service, lounges உடனான beach service, டவல்கள் மற்றும் குடைகள் மற்றும் 24 மணி நேர பரந்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு வசதிகள் அடங்கியுள்ளன.

முதலீட்டாளர்களுக்கு பிரத்தியேகமான செலுத்தும் திட்டங்களை Prime Residencies வழங்குகிறது. நெகிழ்ச்சியான கொடுப்பனவு திட்டத்தில் 1% மாதாந்த தவணைகள் அடங்கியுள்ளதுடன், சொத்து முகாமைத்துவத்தை நிர்வகித்துக் கொள்ளக்கூடிய அமைத்துள்ளது. மேலும், ஒப்பற்ற மூலதன வருமதிகளை வழங்கி, முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால பெறுமதியை பெற்றுக் கொடுக்கும்.

இந்தப் பகுதியில் காணப்படும் ஒரே முன்னணி சேவை வசதிகளைக் கொண்ட தொடர்மனைத் தொகுதி எனும் வகையில் J’Adore Negombo இனால், அருகாமையிலுள்ள சொகுசு ஹோட்டல்களுடன் ஒப்பிடுகையில் அதிகளவு போட்டிகரத்தன்மை வாய்ந்த கட்டணங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், முதலீட்டாளர்களுக்கு ஆண்டு 8-11% வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் 80% முதலீட்டு வருமானம் (ROI) வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக, இந்தத் திட்டத்தின் piling பணிகள் 100% பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், கட்டமைப்பின் நிர்மாணப் பணிகள் 2025 பெப்ரவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படும்.

இலங்கையின் முன்னணி சுற்றுலாத் தலங்களில் ஒன்றில் கடற்கரைக்கு முகப்பாக சொகுசு தொடர்மனை ஒன்றின் உரிமையாளராக திகழ்வதற்கு இந்தத் திட்டத்தினூடாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சொகுசு வசிப்பிடத்தின் புதிய நியமங்களை கண்டறிவதற்கு ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் மற்றும் வசிப்போரை J’Adore Negombo அழைக்கின்றது. ஒவ்வொரு வடிவமைப்பு அம்சமும் பிரத்தியேகமான கரையோர வசிப்பிட அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கும்.

J’Adore Negombo தொடர்பான மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும் 0710 777 666.


Share with your friend