Samsung Electronics அண்மையில் “Samsung Vision AI” என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய தொழில்நுட்பம் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் தனிப்பயனாக்கப்பட்ட, AI கொண்ட திரைகளை வழங்குகிறது. மேலும், Samsung நிறுவனம் Neo QLED 8K மற்றும் வாழ்க்கை முறை தொலைக்காட்சிகள் தொடர்பான புதுப்பிப்புகளையும் வெளியிட்டுள்ளது. இவை திரைகளை புத்திசாலித்தனமான, மாறக்கூடிய துணைவர்களாக மாற்றி வாழ்க்கையை எளிமைப்படுத்தும் Samsung இன் தொலைநோக்கைப் பிரதிபலிக்கின்றன.

Samsung நிறுவனம் தொலைக்காட்சிகளை வெறுமனே பார்வைக்கான சாதனங்களாக அல்லாமல், உங்கள் தேவைகளுக்கு ஏற்ப மாறும் புத்திசாலித்தனமான துணைவர்களாகக் காண்கிறது. Samsung Vision AI திரைகளின் செயல்பாட்டை மறுவரையறை செய்கிறது. பொழுதுபோக்கு, தனிப்பயனாக்கம் மற்றும் வாழ்க்கைமுறை தீர்வுகளை ஒரே அனுபவமாக இணைத்து வாழ்க்கையை எளிதாக்குகிறது.
Samsung Vision AI: நவீன வாழ்க்கைக்கான புத்திசாலித்தனமான, தன்னிச்சையான திரைகள்
Samsung Vision AI என்பது புத்திசாலித்தனமான எளிதில் பயன்படுத்தக்கூடிய மற்றும் தடையற்ற திரை அனுபவங்களை வழங்குவதில் Samsung மேற்கொண்டுள்ள புதிய முயற்சியாகும். உங்கள் Samsung தொலைக்காட்சிக்கு சுற்றுப்புறத்தை உணரும் திறன், உங்கள் தேவைகளுக்கேற்ப தானாகவே மாறும் தன்மை மற்றும் நுண்ணறிவு அம்சங்களை வழங்கும் திறனை அளிக்கிறது. இதன்மூலம், Samsung Vision AI திரைகளை புத்திசாலித்தனமான துணைவர்களாக மாற்றுகிறது. இவை உங்கள் பொழுதுபோக்கை மேம்படுத்தி, அன்றாட செயல்பாடுகளை எளிதாக்கி, இணைக்கப்பட்ட வாழ்க்கைமுறையில் இயல்பாக ஒருங்கிணைகின்றன.
Samsung Vision AI-இன் சிறப்பம்சமாக தனிப்பயனாக்கம் மற்றும் SmartThings தொழில்நுட்பத்துடனான ஒருங்கிணைப்பு ஆகியவை உள்ளன. இதன்மூலம் தொலைக்காட்சிகள் வீட்டின் புத்திசாலித்தனமான மைய கட்டுப்பாட்டு மையமாக செயல்படுகின்றன. மேலும், படம் மற்றும் ஒலி தரத்திலும் தனித்துவமான முன்னேற்றங்களை வழங்குகிறது. சாதனத்திலேயே உள்ள AI தொழில்நுட்பங்கள் காணொளி உள்ளடக்கத்தையும் சுற்றுச்சூழலையும் நிகழ்நேரத்தில் ஆராய்ந்து, காட்சிகளையும், ஒலியையும் தானாகவே சரிசெய்து, முன்னெப்போதும் இல்லாத உயர்தர திரை அனுபவத்தை வழங்குகின்றன.
AI கூட்டாண்மைகள் வழியாக புத்தாக்கத்தை முன்னெடுத்தல்
Samsung Vision AI, Microsoft போன்ற பல்வேறு AI நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் பல புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. இந்த கூட்டுமுயற்சியின் ஒரு பகுதியாக, Samsung நிறுவனம் Microsoft Copilot அம்சம் கொண்ட புதிய ஸ்மார்ட் தொலைக்காட்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் பயனர்கள் தனிப்பட்ட உள்ளடக்க பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெற முடியும். Samsung Vision AI மூலம், Samsung நிறுவனம் திரைகளின் செயல்பாட்டை மறுவரையறை செய்து, பயனர்களின் தேவைகளுக்கேற்ப மாறும், அன்றாட வாழ்வை எளிதாக்கும், மேம்படுத்தும் புத்திசாலித்தனமான அனுபவங்களை வழங்குகிறது.
AI திரைகளின் புதிய சகாப்தம்: Samsung Vision AI-ஐ பரந்த அளவிலான தயாரிப்புகளில் அறிமுகப்படுத்துகிறது
Samsung நிறுவனம் AI-ஆல் இயக்கப்படும் திரை தொழில்நுட்பத்தின் புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. Samsung Vision AI அம்சங்கள் தற்போது Neo QLED, OLED, QLED மற்றும் The Frame உள்ளிட்ட அனைத்து முக்கிய தொலைக்காட்சி மாதிரிகளிலும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இது இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட மிகப் பரந்த அணிவகுப்பாகும். இந்த விரிவாக்கம் அதிகமான பயனர்களுக்கு புத்திசாலித்தனமான, தகவமைக்கக்கூடிய திரைகளை வழங்கி, வீட்டு பொழுதுபோக்கு மற்றும் புத்திசாலித்தனமான வாழ்க்கை முறையில் புதிய சாத்தியங்களை உருவாக்குகிறது.
இந்த புத்தாக்கத்தின் முன்னணியில் Neo QLED 8K தொலைக்காட்சி உள்ளது. இது Samsung இன் மிகவும் மேம்பட்ட தொலைக்காட்சியாகும். இது ஒப்பற்ற செயல்திறன், கவர்ச்சிகரமான வடிவமைப்பு மற்றும் புத்திசாலித்தனமான AI அனுபவங்களை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. சமீபத்திய NQ8 AI Gen3 செயலியால் இயக்கப்படும் இந்த தொலைக்காட்சி, படத்தின் தரம், ஒலி தெளிவு மற்றும் ஒட்டுமொத்த பார்வை அனுபவத்தை மேம்படுத்த சாதனத்திலேயே உள்ள AI அம்சங்களின் தொகுப்பைப் பயன்படுத்துகிறது.
காட்சி தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை வடிவமைத்தல்
திரைகளின் பயன்பாட்டை புதிதாக உருவாக்குவதில் Samsung தொடர்ந்து முன்னோடியாக திகழ்கிறது. அதன் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வெறும் சாதனங்களை மட்டுமல்ல, நம் அன்றாட வாழ்க்கையை உயர்த்தும் அர்த்தமுள்ள, தனிப்பட்ட அனுபவங்களையும் வழங்குகின்றன.
கிடைக்கும் இடங்கள்
2025 தொலைக்காட்சி தொகுப்பை Singer, Singhagiri, Damro மற்றும் Sotlogic ஆகிய விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும். QLED தொலைக்காட்சியின் அடிப்படை விலை ரூ. 374, 999 முதல் ஆரம்பமாகிறது.