SLIIT இன் அனுமதிப்பு தினம் 2025 மூலம் அதன் பல்வேறு வளாகங்களினால் வழங்கப்படும் உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வி வாய்ப்புக்கள் வெளிப்படுத்தப்படுகின்றன

Share with your friend

SLIIT இன் பல்வேறு வளாகங்களான மெட்ரோ கம்பஸ், SLIIT கண்டி பல்கலைக்கழகம், நொதேர்ன் பல்கலைக்கழகம், மாத்தறை மற்றும் குருநாகல் நிலையம் ஆகியவற்றில் எதிர்வரும் 2025 ஜனவரி 18ஆம் திகதி மு.ப 9.30 மணிக்கு அனுமதிப்பு தினம் 2025 ஆரம்பிக்கப்படவிருப்பதாக SLIIT நிறுவனம் அறிவித்துள்ளது.

SLIIT இன் இந்த அனுமதிப்பு தினமானது மாணவர்கள் தமக்கான முடிவில்லாத வாய்ப்புக்களுக்கான பயணத்தைத் தொடங்குவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவதுடன், உயர்கல்வி குறித்த தமது எதிர்பார்ப்பை நோக்கி முதலாவது அடியை எடுத்துவைப்பதற்கான வாய்ப்பை வழங்குவதாகவும் அமையும். எதிர்காலத்துக்கான நுழைவாயில்களாகப் பணியாற்றும் பல்வேறு வளாகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த நிகழ்வானது மாணவர்களுக்கு கம்பஸ் வாழ்க்கை பற்றி அறிந்துகொள்வதற்கும், மதிப்புக்குரிய கல்வியியலாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும், SLIIT இனால் வழங்கப்படும் பரந்துபட்ட திட்டங்கள் பற்றிய முழுமையான விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் சிறந்த வாய்ப்பாக அமையும்.

உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் அனுமதிப்பு தின நிகழ்வானது, நடைமுறைச் செயல்பாடுகள், நிபுணத்துவ வழிகாட்டுதல் மற்றும் ஈடுபாடுள்ள கலந்துரையாடல்கள் ஆகியவற்றின் மூலம் மாணவர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும். இதில் கலந்துகொள்பவர்கள் தமது எதிர்காலத்தை வளமாக்கக் கூடிய ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள வாய்ப்புக்களை அறிந்துகொள்ள முடிவதுடன், SLIIT இனால் வழங்கப்படும் பரந்துபட்ட மற்றும் ஆதரவான கற்றல் சூழல் பற்றியும் அறிந்துகொள்ள முடியும்.

இந்த அனுமதிப்பு தின நிகழ்வானது மேலே குறிப்பிடப்பட்ட இடங்களில் சமாந்தரமாக முன்னெடுக்கப்படவிருப்பதுடன், வருங்கால மாணவர்களுக்கு SLIIT இன் மாறுபட்ட கல்விச் சூழலை ஆராய்வதற்கான ஒரு பரந்த வாய்ப்பையும் வழங்கும். இதில் பங்குபற்றுபவர்களுக்கு அதிநவீன வசதிகளை அறிந்துகொள்வதற்கான சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்படுவதுடன், குறிப்பிட்ட பீடங்கள் மற்றும் பழைய மாணவர்களுடன் தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாட முடிவதுடன், தனிப்பட்ட தொழில் வழிகாட்டல்களும் வழங்கப்படும்.

கணினியியல், வணிகம், பொறியியல், கட்டடவடிவமைப்பு, உள்ளக அலங்காரம், கல்வி, விஞ்ஞானம், கணிய அளவையியல், உயிரியல்தொழில்நுட்பம், பஷன் வணிகம், சட்டம், நிதிக் கணிதம், உளவியல், தாதியியல், விருந்தோம்பல் மற்றும் நிகழ்வு முகாமைத்துவம் உள்ளிட்ட துறைகளில் SLIIT விரிவான கல்விசார் திட்டங்களை வழங்குகின்றது.

அத்துடன், அதிகரித்துவரும் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு முகங்கொடக்கும் வகையில் நவீன தொழில்நுட்ப அறிவைக் கொண்ட மாணவர் சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் இலங்கையின் உயர்கல்வித் துறையில் புதிய மைல்கல்லை எட்டும் வகையில் செயற்கைநுண்ணறிவில் சிறப்பைப் பெறும் வகையில் SLIIT நிறுவனம் புதிய திட்டங்களை வழங்குகின்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி அமைச்சினால் அங்கீகாரம் பெறப்பட்ட மதிப்புமிக்க நிறுவனமான SLIIT , உயர் கல்வித் துறையில் முன்னணியாளர்கள் பலரை உருவாக்கியுள்ளது. இது 25,000ற்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் 40,000ற்கும் அதிகமான பழைய மாணவர் வலையமைப்பைக் கொண்டிருப்பதுடன, இந்நிறுவனத்திற்கு தொடர்ந்தும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அங்கீகாரம் கிடைத்து வருகின்றது.

நிறுவனமானது பொதுநலவாய பல்கலைக்கழக சங்கம் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான சர்வதேச சங்கம் ஆகியவற்றில் உறுப்புரிமையைக் கொண்டுள்ளது. SLIIT நிறுவனமானது பெருமைக்குரிய டைம்ஸ் உயர் கல்வி உலகப் பல்கலைக்கழக தரப்படுத்தல் 2025 ல் மூன்றாவது இடத்தைப் பெற்று இலங்கையின் முதல்தர அரசு சாரா பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதுடன், AD Scientific Index World Young University / Institution Rankings 2025 இல் முதலாவது இடத்தையும் பிடித்துள்ளது.

இணையற்ற இந்தக் கல்வி வாய்ப்புக்கள் பற்றி அறிந்துகொள்ளுமாறு எதிர்கால மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை அழைக்கின்றோம். ஆர்வமுள்ளவர்கள் 011 754 4801  என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி அல்லது info@sliit.lk என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாக மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். SLIIT அனுமதிப்பு தினம் 2025 மூலம் மாணவர்கள் தமக்கான உண்மையான வாய்ப்புக்களையும், எதிர்கால வளர்ச்சியின் மாற்றத்தையும் அறிந்துகொள்ள முடியும்.


Share with your friend