SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் 2024 இல் “ஆண்டின் சிறந்த ஒன்லைன் வர்த்தக நாமம்” விருதை eChannelling சுவீகரித்தது

Share with your friend

இலங்கையின் முன்னணி டிஜிட்டல் சுகாதாரபராமரிப்பு கட்டமைப்பும், SLT-MOBITEL இன் துணை நிறுவனமுமான eChannelling PLC, அண்மையில் Monarch Imperial இல் நடைபெற்ற 23ஆவது SLIM வர்த்தக நாம சிறப்புகள் விருதுகள் வழங்கும் நிகழ்வில், ஆண்டின் சிறந்த ஒன்லைன் வர்த்தக நாமம் – வெண்கல விருதை சுவீகரித்திருந்தது. வர்த்தக நாம வலிமை, சந்தை விழிப்புணர்வு மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகள் போன்றவற்றில் வருடம் முழுவதிலும் முன்னெடுக்கும் செயற்பாடுகளில் நிறுவனத்தின் சிறந்த சாதனைகளை குறிக்கும் வகையில் இந்த விருது அமைந்திருந்தது.

SLT-MOBITEL இன் தொழினுட்ப உட்கட்டமைப்பினால் வலுவூட்டப்படும் eChannelling, தொடர்ந்தும் தேசத்தின் டிஜிட்டல் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. டிஜிட்டல் சுகாதாரபராமரிப்பு சேவைகளில் புத்தாக்கம் மற்றும் சிறப்பு போன்றவற்றுக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பினூடாக, இலங்கையின் நம்பிக்கையை வென்ற மருத்துவ கட்டமைப்பு வர்த்தக நாமமாக வளர்ச்சியடைந்திருந்ததுடன், நாடு முழுவதையும் சேர்ந்த நுகர்வோருக்கு சௌகரியமான மற்றும் உரிய சுகாதாரபராமரிப்பு சேவைகளையும் வழங்குகின்றது.

திரு. இசுரு திசாநாயக்க – பிரதம வணிக அதிகாரி, eChanelling விருதைப் பெறுவதையும், அருகில் (வலமிருந்து) திரு. மோஹன் அஜித்குமார் – சந்தைப்படுத்தல் மற்றும் வருமான தலைமை அதிகாரி, eChannelling, அபேக்ஷா ஜயவர்தன – முகாமையாளர் வாடிக்கையாளர் உறவுகள் / செயற்திட்டங்கள் மற்றும் திரு. அஃப்லல் நசீர் – உதவி முகாமையாளர் வர்த்தக நாமமிடல் மற்றும் விசேட செயற்திட்டங்கள், eChannelling.

பெருமைக்குரிய SLIM வர்த்தக நாம சிறப்புகள் விருதுகள் வழங்கலில் கிடைத்திருந்த பிந்திய கௌரவிப்பு என்பதனூடாக, eChannelling இன் நிலை இலங்கையின் டிஜிட்டல் கட்டமைப்பில் முன்னணி நாமமாக மேலும் வலிமைப்படுத்தப்பட்டுள்ளது. தொழினுட்பத்தினூடாக சுகாதார பராமரிப்பு அணுகலை புரட்சிகரமாக அணுகச் செய்வதற்கான அர்ப்பணிப்பை மீள உறுதி செய்வதாகவும் அமைந்துள்ளதுடன், இலங்கையில் 1ல் தர வைத்தியர் முற்பதிவு நாளிகை கட்டமைப்பாக மீளவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று, வாழ்வை மாற்றியமைப்பதில் இரு தசாப்த கால பூர்த்தியை eChannelling கொண்டாடுவதுடன், டிஜிட்டல் சுகாதார பராமரிப்பு துறையில் நவீன தீர்வுகள் மற்றும் உயர் தர சேவை வழங்கல்களினூடாக மூலோபாய மாற்றங்களையும் ஏற்படுத்திய வண்ணமுள்ளது.

2000 ஆம் ஆண்டில் இலங்கையில் ஒன்லைனில் வைத்திய முற்பதிவு சேவையை அறிமுகம் செய்தது முதல், நாடு முழுவதிலும் சுகாதார பராமரிப்பு அணுகலை eChannelling புரட்சிக்குட்படுத்தியுள்ளது. 25 மாவட்டங்களின் நூற்றுக் கணக்கான சுகாதார பராமரிப்பு நிறுவனங்களுடனும், பாமசிகளுடனும் இந்தக் கட்டமைப்பு கைகோர்த்துள்ளதுடன், டிஜிட்டல் சுகாதார பராமரிப்பு புத்தாக்கத்துக்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது.

SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் 2024 ‘Human Intelligence’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்றதுடன், இதில் 200 க்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன. அதனூடாக இலங்கையின் மிகவும் பெருமைக்குரிய சந்தைப்படுத்தல் சிறப்பு கட்டமைப்பு எனும் தனது நிலையை மீளுறுதி செய்துள்ளது. சந்தை மூலோபாயங்களை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருது அமைந்திருப்பதுடன், சிறந்த வர்த்தக நாம கதைகளினூடாக நுகர்வோர் ஈடுபாட்டை கையகப்படுத்தும் நிறுவனங்களையும் கௌரவிக்கின்றது.

eChannelling’ இன் சேவைகள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு www.echannelling.com எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும் அல்லது eChannelling மொபைல் app ஐ Google Play Store அல்லது Apple App Store இலிருந்து டவுன்லோட் செய்யவும்.

 

 


Share with your friend