SLT-Mobitel Fibre உடன் ஸ்மார்ட் கட்டட தீர்வுகளை வழங்குவதற்காக SLT-MOBITEL மற்றும் VSIS கைகோர்ப்பு

Share with your friend

இலங்கை சந்தையில் fibre இணைப்புத் தீர்வினூடாக Extra Low Voltage (ELV) Systems என்பதன் கீழ் ஸ்மார்ட் கட்டடத் தீர்வுகளை வழங்குவதற்கான பங்காண்மை உடன்படிக்கையில் SLT-MOBITEL மற்றும் VS Information Systems (Pvt) Ltd (VSIS) ஆகியன அண்மையில் கைச்சாத்திட்டிருந்தன.

முன்னணி தகவல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநராக VSIS திகழ்வதுடன், hardware, software மற்றும் சேவைகள் பிரிவில் பரந்தளவு தீர்வுகளை வழங்கும் Systems Integrator ஆகவும் அமைந்துள்ளது. இதனூடாக வாடிக்கையாளர்களுக்கு தமது வியாபாரங்களை மேம்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இந்தப் பங்காண்மையினூடாக இலங்கை சந்தையில் Mechanical and Electrical (M&E) extra-low voltage Systems அடங்கிய பரிபூரண ஸ்மார்ட் கட்டட தீர்வுகளை வழங்குவதற்கு VSIS க்கு வாய்ப்பளிக்கும். வழங்கப்படும் தீர்வுகளில் வானுயர்ந்த கட்டடங்களில் surveys, planning, designing, supplying, constructing, commissioning மற்றும் பராமரிப்பு சேவைகளை மேற்கொள்வது போன்றன அடங்கியுள்ளன. பரந்தளவிலான சேவைகளில் structured cabling, data networking, telecommunications installations, GPON/GEPON Passive Optical Networks PBX, unified communications, public address மற்றும் background music systems, audio visual system, IP surveillance systems, video management மற்றும் video analytics, UPS system, building management systems, video wall displays and controllers, guard tour system, car park management, guest room automation and door locks, visitor management services மற்றும் smart home தீர்வுகள் போன்றன அடங்கியுள்ளன.

VSIS பணிப்பாளர் கித்சிறி குணசேகர கருத்துத் தெரிவிக்கையில், “அண்மைக் காலத்தில் சர்வதேச நிர்மாணத் துறை குறிப்பிடத்தக்களவு தொழில்நுட்ப மாற்றத்தை பதிவு செய்துள்ளது. தேசிய தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL உடன் கைகோர்த்து இந்த ELV தீர்வுகளை இலங்கையின் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிந்துள்ளதையிட்டு மகிழ்ச்சி கொள்கின்றோம். இந்த SLT செயற்படுத்தப்பட்ட Fibre Optic தீர்வுகள் மற்றும் VSIS செயற்படுத்தப்பட்ட ELV தீர்வுகள், கட்டட ஒப்பந்தக்காரர்களுக்கு பெறுமதி சேர்க்கும் அங்கமாக அமைந்திருக்கும். அவர்களால் நிர்மாணத் திட்டத்தின் ஆரம்ப காலப்பகுதியில் திட்டமிடுவதற்கு இந்த ELV தீர்வுகள் பெருமளவு உதவியாக அமைந்திருக்கும். ELV தீர்வுகளினூடாக கட்டடங்களை ஸ்மார்ட்டானதாக திகழச் செய்யக்கூடியதாக இருப்பது, வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமான அனுபவத்தை சேர்ப்பதாக அமைந்திருப்பதுடன், இலங்கையின் நிர்மாணத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

SLT இன் பிரதம பிராந்திய விற்பனை அதிகாரி இமந்த விஜேகோன் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் Fibre இணைப்பை வழங்கும் ஒரே நிறுவனமாக SLT-MOBITEL திகழ்கின்றது. VSIS உடன் கைகோர்த்து, SLT-MOBITEL Fibre ஊடாக ஸ்மார்ட் கட்டடங்களை நிர்மாணிப்பதில் கவனம் செலுத்துவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். வாடிக்கையாளர்களுக்கு இது அனுகூலமளிப்பதாக அமைந்திருக்கும். புதிய தொழில்நுட்பங்களை ஒன்றிணைப்பதனூடாக, கட்டடங்கள் வினைத்திறனாக அமைந்திருப்பது உறுதி செய்யப்படுவதுடன், தங்கியிருப்போரின் சௌகரிய மட்டத்தை மேம்படுத்துவதாக அமைந்திருக்கும். சிறந்த டிஜிட்டல் எதிர்காலத்துக்கான எமது எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர் அனுபவத்தை புரட்சிகரமானதாக அமைக்கும் முக்கியமான படிமுறையாக இந்த பங்காண்மை அமைந்திருக்கும்.” என்றார்.

Legacy ELV தீர்வுகளில் building data cabling, voice/data communications, security surveillance and access control, audio/video systems, car park management systems, IP TV systems போன்ற பல அம்சங்கள் அடங்கியுள்ளன. நிறுவப்பட்ட மற்றும் அனுபவம் வாய்ந்த நிறுவனம் எனும் வகையில் VSIS உடன்,  SLT-MOBITEL broadband fibre தொடர்பாடல்களினூடாக கட்டடங்களுக்கு ‘Complete and Unmatched Smart Building’ அனுபவத்தை சேர்க்கக்கூடியதாக இருக்கும்.


Share with your friend