புத்தாக்கமான கேமிங் கட்டமைப்பான Playstreet ஐ அறிமுகம் செய்வதற்காக Digital Zyndicate Co இன் முழுமையான உரிமையாண்மையில் மற்றும் நிதிவசதியளிப்பில் இயங்கும் Eco System Digital Ventures உடன் கைகோர்த்துள்ளதாக SLT-MOBITEL அறிவித்துள்ளது. இலங்கையின் வாடிக்கையாளர்களுக்கு 200க்கும் அதிகமான கேமிங் கட்டமைப்புகளை வழங்குவதுடன், இந்தத் திட்டத்தினூடாக இலங்கையின் வாடிக்கையாளர்களுக்கு எந்நேரத்திலும், எப்பகுதியிலும் அன்லிமிடெட் கேமிங் அனுபவத்தை வழங்கப்படும்.
![](https://eyeviewsl.com/wp-content/uploads/2025/02/Playstreet-Image-1-1024x342.jpg)
இதற்கான உடன்படிக்கையில் SLT-MOBITEL இன் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி பிரபாத் தஹநாயக்க மற்றும் Eco System Digital Ventures இன் பணிப்பாளர் தரீந்திர கல்பகே ஆகியோர் கைச்சாத்திட்டதுடன், இந்நிகழ்வில் இரு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்த மூலோபாய பங்காண்மையினூடாக, SLT-MOBITEL இன் பரந்த வலையமைப்பு உட்கட்டமைப்பு மற்றும் வாடிக்கையாளர் இருப்பை Playstreet இன் கேமிங் அனுபவத்துடன் ஒன்றிணைப்பதுடன், அதனூடாக அன்லிமிடெட் கேமிங் அனுபவங்களை பெற்றுக் கொடுப்பதாக அமைந்துள்ளது. action மற்றும் strategy முதல் puzzle மற்றும் sports கேம்கள் வரை பரந்த கேமிங் தெரிவுகளை இந்தக் கட்டமைப்பு வழங்குவதுடன், 18-35 வயதுக்குட்பட்ட சாதாரண மற்றும் அர்ப்பணிப்பான கேமிங் ஆர்வலர்களுக்கு தமது திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும். கட்டமைப்பின் பாவனையாளருக்கு நட்பான உட்கட்டமைப்பு மற்றும் செலவுச் சிக்கனமான பதிவு செய்தல் மாதிரிகளினூடாக, அனைத்து இலங்கையர்களுக்கும் உயர்தர கேமிங் அனுபவத்தை பல்வேறு சாதனங்களில் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த கட்டமைப்பில் பாவனையாளருக்கு நட்பான உட்கட்டமைப்பு, செலவுச்சிக்கனமான பதிவு செய்யும் மாதிரிகள் மற்றும் சௌகரியமான கொடுப்பனவு முறைகள் போன்றன அடங்கியுள்ளன. விளையாடுவோருக்கு தரவு வெகுமதிகளை கேமிங் சாதனைகளினூடாக திரட்டும் வாய்ப்பை வழங்குவதால் மேம்படுத்தப்பட்ட கேமிங் அனுபவங்கள் வழங்கப்படுகின்றன. சகாயத்தன்மை அன்லிமிடெட் கேமிங் தெரிவுகளுடன் அமைந்துள்ளன. SLT-MOBITEL மற்றும் Playstreet ஆகியன புதிய மற்றும் ஈடுபாட்டுடனான களிப்பூட்டும் அனுபவங்களை வழங்கி இலங்கையின் வளர்ந்து செல்லும் கேமிங் சந்தையின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு பெறுமதிகளை பெற்றுக் கொடுப்பதுடன், டிஜிட்டல் சேவைகளை பன்பமுகப்படுத்தும் SLT-MOBITEL இன் நோக்குடன் தொடர்புடையதாக இந்த பங்காண்மை அமைந்துள்ளது. SLT-MOBITEL இடமிருந்து அதன் டிஜிட்டல் பிரிவுக்கு பிந்திய பெறுமதி சேர்க்கப்பட்ட கட்டமைப்பாக இது அமைந்துள்ளதுடன், அனைத்து இலங்கையர்கள் மற்றும் வியாபாரங்களை இலக்காகக் கொண்டுள்ளது. நுண், சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்கள் மற்றும் நிறுவனசார் வியாபாரங்களுக்கு தமது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை விசேட ஊக்குவிப்புகளுடன் விளையாடுவோருக்கு வழங்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
அன்லிமிடெட் கேமிங்கை சகாயமான விலையில் வழங்குவதுடன், SLT-MOBITEL வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை பதிவு அடிப்படையில் வழங்கப்படும்.
Playstreet இன் கேமிங் வழங்கல்கள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு வாடிக்கையாளர்கள் SLT-MOBITEL வாடிக்கையாளர் சேவையுடன் தொடர்பு கொள்ளலாம்.