SLT-MOBITEL தேசிய வியாபார தொலைபேசிக் கோவையினால் மேம்படுத்தப்பட்ட eDirectory மற்றும் இணையத்தளம் வெளியீடு

Share with your friend

தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகள் வழங்குநரான SLT-MOBITEL இன் முழு உரிமையாண்மையின் கீழ் இயங்கும், SLT டிஜிட்டல் சேர்விசஸ் (Pvt) லிமிடெட் (SLT-DIGITAL), பிந்திய மெருகேற்றம் செய்யப்பட்ட தேசிய வியாபார கோவையான eDirectory மற்றும் இணையத்தளத்தை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது.

மேம்படுத்தப்பட்ட eDirectory மற்றும் இணையத்தளத்தினூடாக வாடிக்கையாளர்களுக்கு மற்றும் விற்பனையாளர்களுக்கு, இலங்கையின் அதிகளவு மெருகேற்றம் செய்யப்பட்ட வியாபார தொலைபேசி விவரக் கோவை ஆதாரம் என அதிகளவு பெறுமதி சேர்ப்பு வழங்கப்படுகின்றது. புதிய வெளியீட்டினூடாக ‘Power of True Local Search’ என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மேம்படுத்திய www.rainbowpages.lk ஒன்லைன் கட்டமைப்பினூடாக, தினசரி 10,000 ஒன்லைன் பார்வையாளர்கள் கவரப்படுவதுடன், இலங்கையின் அதிகளவு செம்மையாக்கம் செய்யப்பட்ட தேடல் தளமாக (optimised search engine) ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

நுண், சிறு மற்றும் நடுத்தரளவு வியாபாரங்களின் பிரசன்னத்தை மேம்படுத்தும் வகையில், மேம்படுத்தப்பட்ட தேசிய வியாபார தொலைபேசி விவரக் கோவையினால், உறுதி செய்யப்பட்ட தொடர்பாடல் தகவல்கள் வழங்கப்படுவதுடன், இந்த நிறுவனங்களுக்கு பெருமளவு தோற்றப்பாட்டையும் இலகுவான வாடிக்கையாளர் அணுகலையும் வழங்குகின்றது. Business to Business (B2B) அடங்கலான விற்பனையாளர்களுக்கு Search Engine Optimization (SEO) மற்றும் Search Engine Marketing (SEM) போன்றவற்றை மேற்கொள்ளக்கூடிய வசதிகள் காணப்படுவதால், விற்பனை அதிகரித்துக் கொள்வது மற்றும் அதிகளவு வாடிக்கையாளர்களை சென்றடையக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.

eDirectory இல் பதிவு செய்துள்ள சகல வியாபாரங்களுக்கும், சகல டிஜிட்டல் சந்தைப்படுத்தல், இணையத்தள வடிவமைப்பு மற்றும் விளம்பரத் தீர்வுகளை வழங்கி ஆதரவளிக்கும் வகையில் இந்தக் கட்டமைப்பு அமைந்துள்ளது. eDirectory இல் பதிவு செய்யப்பட்டுள்ள வியாபாரங்களுக்கு, அரசாங்கத்தின் விலைமனுக்களுக்கு கோரல்களை சமர்ப்பிக்க முடியும். இந்த வியாபாரங்கள் அரசாங்கத்தின் திறைசேரியினால் அனுமதியளிக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட விற்பனை நிலையங்களாக கருதப்படுவதுடன், அவற்றுக்கு மையப்படுத்தப்பட்ட அரச கொள்முதல் வாய்ப்புகளை மேம்படுத்துவதாக அமைந்திருக்கும்.

விற்பனையாளர்களுக்கு தமது பொருட்கள் மற்றும் சேவைகளை வெளிப்படுத்துவதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வழிமுறைகள் காணப்படுவதால், eDirectory வாடிக்கையாளர்களுக்கு தற்போது மேம்படுத்தப்பட்ட வணிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அச்சிடப்பட்ட தொலைபேசி விவரக் கோவை, டிஜிட்டல் தொலைபேசி விவரக் கோவை, மொபைல் app, eBook, அழைப்பு நிலையங்கள் (SLT 1212, மொபைல் 444), IVR ஊக்குவிப்புத் திட்டங்கள், டிஜிட்டல் சந்தைப்படுத்தல், சமூக வலைத்தள விளம்பரங்கள் மற்றும் இணையத்தள வடிவமைப்பு போன்றவற்றினூடாக சகல பங்காளர்களுக்கும் தொடர்ச்சியாக பெறுமதி உருவாக்கப்படுகின்றது.

டிஜிட்டல் சந்தைப்படுத்தல், வணிக விளம்பரத் தொலைபேசிக் கோவை, டிஜிட்டல் தொலைபேசிக் கோவைத் தீர்வுகள், இணைய வடிவமைப்பு தீர்வுகள், நிகழ்வுகள் முகாமைத்துவம், செயற்படுத்தல் மற்றும் வர்த்தக நாமச் சேவைகள் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் தீர்வுகள் போன்றவற்றில் SLT-DIGITAL விசேடத்துவத்தைக் கொண்டுள்ளதுடன், நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபார (MSMBs) சமூகத்தில் அதிகளவு விரும்பப்படும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்தல் தீர்வுகள் வழங்குநராகத் திகழ்கின்றது.

மேலதிக தகவல்களுக்கு www.rainbowpages.lk, www.rainbowpages.lk/ebook எனும் இணையத்தளங்களைப் பார்க்கவும் அல்லது அழைப்பு நிலையத்துடன் 1212 உடன் தொடர்பு கொள்ளவும் அல்லது ஹொட்லைன் இலக்கமான 0112 399 399 உடன் தொடர்பு கொள்ளவும்.


Share with your friend