தமிழ், சிங்கள புத்தாண்டை வரவேற்கும் வகையில் Sun Siyam பாசிக்குடா தமது ஹோட்டல் வளாகத்தில் விசேட நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது. புத்தாண்டு பிறப்பு தினமான ஏப்ரல் 13ஆம் திகதி, சுப வேளையில் வான வேடிக்கைகளுடன், தங்கியிருந்த விருந்தினர்கள் மற்றும் ஊழியர்களோடு, முகாமைத்துவத்தைச் சேர்ந்தவர்களும் இணைந்து இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்றிருந்தனர். கிழக்கில் சுற்றுலாவுக்கான புதுப்பிக்கப்பட்ட எதிர்பார்ப்பு வழங்கப்பட்டதுடன், சுபீட்சமும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
மறுநாள், அண்மையில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஐந்து நட்சத்திர ஹோட்டலினூடாக, இலங்கையின் பாரம்பரிய பலகாரங்கள் பல காலை உணவு வேளைக்காக பரிமாறப்பட்டிருந்தது. இதன் போது அவற்றை தயார்ப்படுத்துவது தொடர்பான நேரடி விளக்கமும் சமையல் நிபுணரால் வழங்கப்பட்டிருந்தது. ஐஸ்கிறீம் சைக்கிள் மற்றும் இளநீர் வழங்கும் பகுதி போன்றன இதில் அடங்கியிருந்தன. ஹோட்டல் வளாகத்தினுள் காணப்படும் உயர்ந்த தென்னை மரங்களிலிருந்து பெறப்பட்ட தேங்காய்களிலிருந்து பெறப்பட்ட இளநீர் இங்கு பரிமாறப்பட்டிருந்தது.
அந்நாளில் பல்வேறு புத்தாண்டு விளையாட்டுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதில் யானைக்கு கண் வைப்பது (அலியாட்ட அசெ திபீம), பானை உடைப்பு (வாசனா முட்டிய பிந்தீம), கயிறு இழுத்தல் (கம்ப அதீம), இசைக் கதிரை (சங்கீத புடு தரங்கய), சாக்கு ஓட்டம் (கோணி ரேஸ்), யோகட் ஊட்டல் (யோகட்ட கெவீம), பலூன் உடைத்தல் (பலூன் பிப்பிரீம) போன்றன அடங்கியிருந்தன.
இனிய மாலைப் பொழுதை களிப்பூட்டும் வகையில் நேரலை இசை விருந்து நிகழ்வையும் ஹோட்டல் ஏற்பாடு செய்திருந்தது. ஏப்ரல் மாதம் முழுவதிலும் ரூ. 36,900 முதல் half-board double விசேட விலைக்கழிவுடனான கட்டணத்தை Sun Siyam பாசிகுடா வழங்குகின்றது. வழங்கப்படும் இதர சலுகைகளில், இலவச அறை மேம்படுத்தல், நெகிழ்ச்சியான early check-ins மற்றும் late check-outs கள் போன்ற ஹோட்டல் வசதிக்கேற்ப வழங்கப்படும்.
மாசற்ற கரையோரப்பகுதிகள் மற்றும் கலாசாரப் பெறுமதிகள் போன்றவற்றுக்கு புகழ்பெற்ற பாசிகுடா, இயற்கை அழகுடன், பிரத்தியேகமான அனுபவங்களையும் வழங்குவதற்கு புகழ்பெற்றுள்ளது. சொகுசு தங்குமிடம், சிறந்த உணவு, புத்துணர்வூட்டும் ஸ்பா சிகிச்சைகள் மற்றும் பெருமளவு சாகச அனுபவங்கள் போன்ற விருந்தினர்களுக்கு வாழ்நாள் நினைவுகளை ஏற்படுத்தும் வசதிகளை வழங்குகின்றது. Sun Siyam பாசிகுடாவினால், இலங்கையின் விருந்தோம்பல் துறையின் ஒப்பற்ற அனுபவம் வழங்கப்படுகின்றது.
இந்த ரிசோர்ட்டில் 34 நவீன, அதிகளவு இடவசதிகளைக் கொண்ட ஒன்று முதல் இரண்டு படுக்கை அறைகள் மற்றும் பீச் பெவிலியன்கள் போன்றன அடங்கியுள்ளதுடன், சிறந்த உள்ளக மற்றும் வெளியக அலங்கார அம்சங்களையும் கொண்டுள்ளது.
மாலைதீவுகளின் Sun Siyam ரிசோர்ட்ஸ் குழுமத்தின் அங்கமான Sun Siyam பாசிகுடா, சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் பெருமளவு எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பதுடன், கிழக்கின் அழகை ரசிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குகின்றது. மார்ச் மாத இறுதியில் சுமார் 600,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை இலங்கை வரவேற்றுள்ளதுடன், அதனூடாக 1.025 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானத்தை ஈட்டியுள்ளது.
Infinity pool இல் நீச்சல் அனுபவம், நலன் பேணல் சிகிச்சை அல்லது கலாசார செயற்பாடுகளில் பங்கேற்பது என எதுவாக இருந்தாலும், Sun Siyam பாசிகுடாவினால் ஒவ்வொரு அனுபவமும் ஒப்பற்றதாக அமைந்திருப்பது உறுதி செய்யப்படுகின்றது. உள்நாட்டு கலை மற்றும் கைவினை அம்சங்களுடன் பாசிகுடாவின் காட்சியம்சங்கள் நிறைந்த கரையோர அனுபவம் மேம்படுத்தி வழங்கப்படுவதோடு, ஜொலித்திடும் நட்சத்திரங்களின் கீழே பிரத்தியேகமான இராப் போசண அனுபவத்தையும் பெற்றுக் கொள்ள முடியும். விருந்தினர்களுக்கு Slice & Grill ஊடாக, விசேடமான poolside உணவருந்தும் அனுபவத்தை அல்லது Beach Shack இல் கரீபியன் பாணியில், வெப்பவலயத்துக்குரிய பானங்களை அருந்தும் அனுபவத்தை பெற்றுக் கொள்ளவும் முடியும்.
முற்பதிவுகளுக்கு அழையுங்கள் 0652055555 அல்லத 0702424263 அல்லது மேலதிக தகவல்களுக்கு பார்வையிடுங்கள் https://www.sunsiyam.com/sun-siyam-pasikudah/