தேசிய தகவல் தொடர்பாடல் தொழினுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, வருடாந்த Techno கண்காட்சியின் பிரதான அனுசரணையாளராக தொடர்ந்தும் இணைந்திருந்தது. இந்நிகழ்வை இலங்கை பொறியியலாளர் நிறுவகம் (IESL) ஏற்பாடு செய்திருந்தது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி மண்டபத்தில் 36 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வு 2024 ஒக்டோபர் 11ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை நடைபெற்றது. தொழில்நுட்ப முன்னேற்றங்களை வெளிப்படுத்தியிருந்ததுடன், நாட்டில் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதாக அமைந்திருந்தது.

“Engineering: The Path to Prosperity,” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற Techno 2024 கண்காட்சியை, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப பீடாதிபதியும், சிவில் பொறியியல் சிரேஷ்ட பேராசிரியரும், பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னாள் அங்கத்தவருமான பேராசிரியர் மலிக் ரணசிங்க, இலங்கை மின்சார சபையின் தவிசாளர் திலக் சியம்பலாபிட்டிய ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர். இந்நிகழ்வில் SLT-MOBITEL சார்பாக SLT குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜனக அபேசிங்க, SLT பிரதம செயற்பாட்டு அதிகாரி பிரபாத் அம்பேகொட, SLT-MOBITEL பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி பிரபாத் தஹநாயக்க மற்றும் மொபிடெல் பிரதம செயற்பாட்டு அதிகாரி சுதர்ஷன கீகனகே ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
பிரதான அனுசரணையாளர் எனும் வகையில் SLT-MOBITEL இனால் பரந்த பிரிவுகளில் பெருமளவு தீர்வுகள் மற்றும் சேவைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதில் SLT-MOBITEL Enterprise, SME solutions, digital products, E-Teleshop, SLT-MOBITEL Embryo மற்றும் மொபிடெலின் 5G விளக்கமளிப்பு ஆகியன அடங்கியிருந்தன. இந்நிகழ்வில் பங்கேற்றிருந்ததனூடாக, இலங்கையில் புத்தாக்கம் மற்றும் தொழினுட்ப முன்னேற்றத்தை முன்னெடுப்பதற்கான அதன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியிருந்தது.
SLT இன் பிரதம செயற்பாட்டு அதிகாரி பிரபாத் அம்பேகொட இந்நிகழ்வின் மூன்றாம் நாளான ஒக்டோபர் 13ஆம் திகதி நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். பொறியியல் மற்றும் தொழினுட்ப சமூகத்துக்கு SLT-MOBITEL இன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக அவரின் பிரசன்னம் அமைந்திருந்தது.
தொழிற்துறை நிபுணர்களுடன் SLT-MOBITEL க்கு தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு கண்காட்சி சிறந்த வாய்ப்பாக அமைந்திருந்தது. தமது பிந்திய விளம்பரங்களை காட்சிப்படுத்தவும், புதிய வியாபார வாய்ப்புகளை கண்டறியவும் ஏதுவாக அமைந்திருந்தது. இலங்கையில் புத்தாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான வழிகோலியாக திகழ்கின்றமையை நிறுவனத்தின் அனுசரணை மீள உறுதி செய்திருந்தது.
Techno 2024 இல் பங்கேற்றிருந்தமைக்கு மேலதிகமாக, SLT-MOBITEL இன் அனுசரணையில் முன்னெடுக்கப்படும் IESL Robo Games 2024க்கான பதிவுகளும் இந்நிகழ்வின் போது முன்னெடுக்கப்பட்டது. மேலும், ஆர்வமுள்ள சகல பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பதிவு செய்து கொள்ளக்கூடிய வகையில் https://www.robo.cse.mrt.ac.lk/ ஐ பார்வையிட முடியும். அல்லது கீழே தரப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கான் செய்து மேற்கொள்ளலாம். மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கணனி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் பிரிவினால் IESL உடன் இணைந்து Robo Games ஏற்பாடு செய்யப்படுகின்றன. இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப துறையின் தொழினுட்ப முன்னோடி எனும் வகையில், எதிர்கால நிபுணர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக, ரொபோட்டிக்ஸில் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதற்கான முக்கியத்துவத்தை SLT-MOBITEL உணர்ந்துள்ளது.
Techno 2024 இல் SLT-MOBITEL’இன் பங்கேற்பினூடாக, இலங்கையில் விறுவிறுப்பான மற்றும் புத்தாக்கமான தொழில்நுட்ப சூழலை ஏற்படுத்துவதில் காண்பிக்கும் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தேசத்தின் சுபீட்சத்தை வழிநடத்திச் செல்லக்கூடிய புதிய தலைமுறை பொறியியலாளர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிப்பதில் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதில் நிறுவனம் தொடர்ந்தும் முன்னிலையில் திகழ்கின்றது.