ரியல் எஸ்டேட் துறையில் முன்னோடியாக அமைந்துள்ள Prime Group, சொகுசு வாழிடம், நவீன வசதிகள் மற்றும் நம்பமுடியாக கொடுப்பனவுத் திட்டத்துடன் மிகச் சிறந்த முதலீட்டு வாய்ப்பை அறிமுகம் செய்துள்ளது.
நிறுவனத்தின் 27 அடுக்கு சொகுசு அபிவிருத்தி நிர்மாணத்திட்டத்தை கொழும்பின் எல்லைப் பகுதியில் நிர்மாணிக்கின்றது. புரட்சிகரமான கொடுப்பனவுக் கட்டமைப்பு இந்த திட்டத்தின் சிறப்பம்சமாக அமைந்துள்ளது. திட்டத்தின் பிரகாரம், ஆரம்பிக்கையில் வீட்டுக் கொள்வனவாளர் ஒருவர், 10% ஒதுக்கீட்டு கட்டணத்தை செலுத்த வேண்டும் என்பதுடன், ஆரம்பக் கொடுப்பனவை மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லை. 40 மாதங்களுக்கு 1% எனும் தவணை முறையில் தொகையை செலுத்த முடிவதுடன், எஞ்சியிருக்கும் 50% தொகையை, திட்டம் பூர்த்தி செய்யப்பட்டு கையளிக்கப்படுகையில் செலுத்தலாம். உரிமையாளர்களுக்கு ஆகக்குறைந்த மூலதன வருமானமாக 100% உறுதியளிக்கப்படுகின்றது.
கவர்ச்சிகரமான அறிமுக விலைகளில், அதிக இடவசதிகளுடன் இரண்டு மற்றும் மூன்று படுக்கையறைகளைக் கொண்ட குடியிருப்புகளுடனான இந்த முதலீட்டு வாய்ப்பு, முதலீட்டு வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் வகையிலும், பணியாற்றும் நிபுணர்களுக்கு பெருமளவு தொகையை ஒரே தடவையில் செலுத்த வேண்டிய தேவையை ஏற்படுத்தாமல், நெகிழ்ச்சித் தன்மையை வழங்குவதாக அமைந்துள்ளது. அவர்களுக்கு வங்கிக் கடனை பெற்றுக் கொள்வதற்கான தேவையும் எழாமல் இருக்கும். 6.5 காணிப் பகுதியில் அமைக்கப்படும் இந்த சொகுசு தொடர்மனைத் திட்டத்தின் முதல் கட்டத்தில் 27 அடுக்குகள் காணப்படும். புதிய வீட்டு உரிமையாளர்களின் சகல தேவைகளையும் நிவர்த்தி செய்வதை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
சௌகரியம் மற்றும் இயற்கை அழகு ஆகியவற்றைக் கொண்டு நிர்மாணிக்கப்படும் இந்த தொடர்மனைத் தொகுதி, குடியிருப்பாளர்களுக்கு சகல வசதிகளையும் வழங்கும். கொழும்பு – கண்டி பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ளதுடன், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், போர்ட் சிட்டி மற்றும் கொழும்பின் இதர முக்கிய பகுதிகளுக்கு துரிதமாக பயணிக்கக்கூடிய வசதிகளை கொண்டுள்ளது. கொழும்பு நகரின் காட்சியமைப்பை தடங்கலின்றி பார்வையிடக்கூடிய வகையில் நிர்மாணிக்கப்படுவதுடன், அமைதியான சூழலில், நகரிலிருந்து வெளியேறி, அமைதியான முறையில் தமது பொழுதை செலவிடுவதற்கு உரிமையாளர்களுக்கு உதவியாக அமைந்திருக்கும். வாகன நெரிசலில் தமது பெறுமதியான நேரத்தை செலவிடுவதற்கான தேவையையும் இல்லாமல் செய்கின்றது.
Prime Lands Residencies PLC கூட்டாண்மை விவகாரங்களுக்கான பணிப்பாளர் நளிந்த ஹீனடிகல கருத்துத் தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமான முதலீட்டு வாய்ப்பை பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். குறிப்பாக, முதல் தடவை வீட்டு உரிமையாளர்களுக்காகவும், இளம் தொழில்நிபுணர்களுக்காகவும், எமது புரட்சிகரமான கொடுப்பனவுத் திட்டம் இலங்கையில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சொகுசான வாழ்க்கைமுறையை வழங்குவதற்கான அர்ப்பணிப்பை உறுதி செய்து, இலங்கையில் ரியல் எஸ்டேட் முதலீடுகளில் நாம் புரட்சியை ஏற்படுத்திய வண்ணமுள்ளோம்.” என்றார்.
இலங்கையின் ரியல் எஸ்டேட் சசந்தையில் புதிய நியமங்களை பதிவு செய்யும் வகையில் தனது முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தில் பங்கேற்கவருமாறு முதலீட்டாளர்களுக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும் Prime Group அழைப்புவிடுத்துள்ளது.
மேலதிக தகவல்களை www.primeresidencies.lk எனும் இணையத்தளத்திலிருந்து அல்லது 0710 777 333 ஊடாக விற்பனை நிபுணர்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.