கொவிட்-19 இனை எதிர்த்து VirusGuard+ இனை அறிமுகப்படுத்தும் Nippon Paint

Share with your friend

ஆசியாவின் முன்னணி வண்ணப்பூச்சு மற்றும் தீந்தை ( paint & coatings) உற்பத்தியாளர்களான Nippon Paint, அதன் மேம்பட்ட வண்ணப்பூச்சு தொழில்நுட்பமான VirusGuard+ (வைரஸ் கார்ட்+) இனை அண்மையில் இலங்கையில் அறிமுகப்படுத்தியது. நுண்ணுயிர்களுக்கு எதிரான பண்புகளைக் கொண்ட பிரீமியம் உள்ளக வண்ணப்பூச்சின் இலங்கைக்கான அறிமுகத்திற்கு முன்னர், சிங்கப்பூரின் அறிமுகத்தில் பெரு வரவேற்பை பெற்றதுடன், முதன் முதலாக 2020 இன் இறுதியில், மலேசியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.

இவ்வண்ணப்பூச்சுகளானவை, செப்பு அயனினால் (Cu+) செறிவூட்டப்பட்டுள்ளதன் மூலம், தற்போது நிலவும் கொவிட்-19 திரிபுக்கு எதிரான உரிய பாதுகாப்பை வழங்குவதோடு, கழுவி துடைக்கக் கூடிய வகையிலானதுமாகும். கறை எதிர்ப்பு மற்றும் குறைந்த VOC (Volatile Organic Compounds – ஆவியாகும் சேதன மூலகங்கள்) ஆகிய தன்மைகளைக் கொண்டுள்ளது. VirusGuard+ இல் எந்தவொரு அபாயகரமான பொருட்களும் சேர்க்கப்படவில்லை என்பதால் வர்த்தக கட்டடங்கள், பொது இடங்கள் மற்றும் மேற்பரப்புகளில் ஏற்படும் மாசுக்களை அகற்றுவதால் வீடுகளுக்கும் பொருத்தமானதாகும்.

Nippon Paint VirusGuard+ பக்டீரியா எதிர்ப்பு வண்ணப்பூச்சானது, மூன்றாம் தரப்பு ஆய்வகங்களால் மருத்துவ ரீதியாக சோதிக்கப்பட்டுள்ளதுடன், மனித கொரோனா வைரஸ்கள் மற்றும் Feline Calicivirus (approved by EPA to replace Human Norovirus – மனித நோரோவைரஸை மாற்றீடு செய்வதற்காக EPA ஆல் அங்கீகரிக்கப்பட்டது) ஆகியவற்றிற்கு எதிரானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வண்ணப்பூச்சு சிங்கப்பூர் பசுமை கட்டட சபையினால் (Singapore Green Building Council – SGBC) சூழல் நட்பானது என சான்றளிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய திருப்புமுனையுடன் கூடிய தயாரிப்பு தொடர்பில் Nippon Paint இன் Head-of-Sales மிஹிரன் ஓபாத தெரிவிக்கையில், “ஒன்றல்ல, இரண்டு வைரஸ் எதிர்ப்பு தீர்வுகளை சந்தையில் அறிமுகப்படுத்திய முதல் வண்ணப்பூச்சு தரக்குறியீடாக இருப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். இது 3- in-1 MediFresh, VirusGuard+ சிறப்பம்சத்தை கொண்டுள்ளது. பரவலாக பாராட்டைப் பெற்ற புத்தாக்க தயாரிப்பான MediFresh ஆனது, பொதுவாக நோயை உருவாக்கும் நுண்ணுயிர்களிடமிருந்து பாதுகாப்பை வழங்குவதுடன், VirusGuard+ ஆனது, கொவிட்-19 வைரஸை எதிர்கொள்ள உகந்ததாக உள்ளது.

அன்றாடம் எழுகின்ற பிரச்சினைகளுக்கு நிறப்பூச்சுகள் மூலம், நடைமுறைக்கு ஏற்ற, பயனுள்ள, மலிவான வகையிலான தீர்வுகளை வழங்க நாம் கடமைப்பட்டுள்ளோம். இது தொடர்பாக, எமது விலைமதிப்பற்ற R&D (ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி) திறன் தொடர்பில் எமது நம்பிக்கை தங்கியுள்ளது. VirusGuard+ ஆனது, ஏற்கனவே வண்ணம் பூசப்பட்ட மேற்பரப்பிலும் பயன்படுத்தப்படுத்தக் கூடியதாக, சிறந்த வகையில் அதனை பூரணப்படுத்துவதுடன், தெரிவு செய்யக் கூடிய 23 வகை நிறங்களில் வருகிறது. சந்தையில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் ஒன்றாக இத்தயாரிப்பு அமையுமென நாம் நம்புகிறோம்.” என்றார்.

Nippon Paint VirusGuard+ ஆனது, நீண்ட காலத்திற்கு நிலைக்கும் வகையில் செம்பில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் இணைக்கப்பட்டு Cu+ அயன் வடிவத்தில் பேணப்பட்டுள்ளது. இதன் மூலம் வைரஸ்களின் வெளிப்புற அடுக்குகளை அழித்து அவற்றின் மரபணுக் கட்டமைப்பை அகற்றுவதன் மூலம் அவற்றை கொல்லும் ஆற்றல் கொண்டுள்ளது. வண்ணப்பூச்சின் அமைப்பு அப்படியே பேணப்பட்டு, அதன் மேற்பரப்பானது, வைரஸிற்கு எதிரானதாக காணப்படும். இது சுவர்களை அடிக்கடி கிருமி நீக்கம் செய்வதற்கு எடுக்கும் நேரம், முயற்சி, ஆற்றலைச் சேமிக்கிறது. இவ்வண்ணப்பூச்சை, Nippon Paint இன் உத்தியோபூர்வ வலைத்தளமான [www.nipponpaint.lk] வழியாக ஒன்லைனில் கொள்வனவு செய்து, நாடு முழுவதும் விநியோகிக்கவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Nippon Paint ஆனது, இலங்கையில் Nippon Paint Lanka (Pvt) Ltd. நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, சந்தைப்படுத்தப்படுவதோடு, இது முற்று முழுதாக  Nippon Paint Japan நிறுவனத்திற்கு உரித்தான ஒரு துணை நிறுவனமாகும். அத்துடன் இப்பிரிவில் ஒரு சிறந்த அங்கீகாரம் பெற்ற ஒன்றாகவும் விளங்குகிறது. இலங்கையில் மிகப்பெரிய வண்ணப்பூச்சு உற்பத்தியாளர்களில் ஒருவரான Nippon Paint, அதன் பிரதான நிறுவனமான NIPSEA Group மூலம், வருடாந்தம் 1 பில்லியன் லீற்றர் வண்ணப்பூச்சுகள் மற்றும் தீந்தைகளை உற்பத்தி செய்வதுடன், கொள்ளளவின் அடிப்படையில் உலகில் வண்ணப்பூச்சு உற்பத்திகளில் முன்னிலையிலுள்ள நிறுவனம் என்பதுடன், ஆசியாவில் மிக அதிக கேள்வியைக் கொண்டுள்ளதன் மூலம் அதிக விநியோகத்தையும் மேற்கொண்டு வருகின்றது.


Share with your friend