சர்வதேச மகளிர் தினத்தை கோலாகலமாக  கொண்டாடிய People’s Leasing & Finance PLC  

Share with your friend

இலங்கை மக்களின் மனங்கவர்ந்த-நம்பிக்கையை வென்ற இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான People’s Leasing & Finance PLC (PLC) நிறுவனம் இந்த வருடத்துக்கான சர்வதேச மகளிர் தினத்தை மிகவும் கோலாகலமாகக் கொண்டாடியது.

பாலின சமத்துவத்தை மதித்து எதிலும் பெண்களுக்கு உரிய இடத்தை வழங்கும்-அவர்களின் முன்னேற்றத்துக்குத் துணை நிற்கும் நிதி நிறுவனம் என்ற வகையில் People’s Leasing & Finance PLC நிறுவனம் இந்த மகளிர் தினத்தைக் கொண்டாடுவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறது. 

இந்த மகளிர் தினத்தையொட்டி நிறுவனம் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்களை மகிழ்ச்சியுடன்  ஏற்பாடு செய்துள்ளது.அவை அனைத்தும் பெண்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதங்களாகும்.

”பெண்கள் நாட்டின் கண்கள்” என்ற பொன் மொழிக்கு ஏற்ப பெண்களை மதித்து அவர்களின் நல்வாழ்வுக்கு அடித்தளமிடுவதில் People’s Leasing & Finance PLC நிறுவனம் என்றும் முன்னிலையில் நிற்கிறது.

ஒரு நாட்டினதும் வீட்டினதும் முன்னேற்றத்துக்கு பெண்களின் பங்களிப்பு ஒரு நிச்சய  தேவை என்பதை ஏற்றுக்கொள்ளும் இந்த நிறுவனம் மகளிருக்கான அதன் மகத்தான சேவைகளை  மேலும் அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

பாலின சமத்துவத்தை மிகவும் மதிக்கின்ற இந்த நிறுவனம் பாலின சமத்துவத்துக்கான  உறுதியான அர்ப்பணிப்பின் அடித்தளத்திலேயே கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

பாலினப் பாகுபாட்டை நீக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் People’s Leasing & Finance PLC பெண்களின் முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.அவர்களின்  முழுமையான திறனை வெளிக்கொண்டுவருவதற்குத் தேவையான விரிவான வழிமுறைகளையும் திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளது.

பெண்கள் சிரேஷ்ட முகாமைத்துவத்தை நோக்கி முன்னேற வேண்டும் என்று விரும்புகிற  People’s Leasing அதற்கு ஏதுவாக பலதரப்பட்ட மற்றும் ஆற்றல்மிக்க பணிச்சூழலை உருவாக்குகிறது.

நிறுவனத்தின் அனைத்து மட்டங்களிலும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக நிறுவனம் அர்ப்பணிப்புடன் வேலை செய்கிறது.

வேலை-வாழ்க்கை சமநிலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து,தொழில்முறை மற்றும் தனிப்பட்ட பொறுப்புகள் தொடர்பில் பெண்கள் சந்திக்கும் தனித்துவமான சவால்களை நிறுவனம் ஒப்புக்கொள்கிறது.

இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்காக நிறுவனம் பெண்களின் பணி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையே இணக்கமான சமநிலையை அடைவதற்காக வடிவமைக்கப்பட்ட கொள்கைகளை செயல்படுத்தியுள்ளது.

விரிவான பெற்றோர் விடுமுறை முதல் நெகிழ்வான பணி ஏற்பாடுகள் வரை, ஒவ்வொரு பணியாளரும், குறிப்பாக பெண்களும் செழிக்கக்கூடிய சூழலை உருவாக்க நிறுவனம் பாடுபடுகிறது.

பெண்களுக்கான நிறுவனத்தின் ஆதரவு என்பது அதன் நிதி வழங்கல் நடவடிக்கைகளையும் உள்ளடக்குகிறது. People’s Leasing & Finance PLC  நிறுவனம் சம வாய்ப்புள்ள முதலாளிகள் மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்கள்மீது சிறப்பு கவனம் செலுத்துகிறது. அதே நேரத்தில் தேவையான தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குகிறது.

நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான Shamindra Marcelline இதுபற்றி கூறுகையில், “ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு முடிவும், பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றின் கலாச்சாரத்தை வளர்ப்பதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறோம்.”

பாலின வேறுபாடின்றி அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், அனைவரும் செழுமை அடையக்கூடிய ஒரு பணியிடத்தை உருவாக்க முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

எங்களது நிறுவனத்தின் வெற்றியை அடைவதற்குத் தனிப்பட்ட திறமையுடன் பெண்கள் பணியாற்றுகிறார்கள் என்பதை நாம் பெருமையுடன் கூறுகிறோம்.

2024 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை உலகம் கொண்டாடும் வேளையில்,எமது நிறுவனம் இலங்கை மற்றும் உலகம் முழுவதும் உள்ள அனைத்து பெண்களுடனும் கைகோத்து ஒற்றுமையுடன் நிற்கிறது.

இன்று மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பெண்ணும் தனது அதிகபட்ச திறனை உணரக்கூடிய ஒரு உலகத்தை உருவாக்கும் நோக்கில் உழைக்கும்போது, பாலின சமத்துவத்தை வெல்ல முடியும் என்று நாம் நம்புகிறோம்..”-என்றார்.

2024 மகளிர் தினத்திற்கான #InspiringInclusion என்ற கருப்பொருளைக் கருத்தில் கொண்டு – நிறுவனம்  பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்களை ஏற்பாடு செய்தது. நிறுவன மட்டத்திலான பெண்களுக்கான சுகாதார விழிப்புணர்வு திட்டம் மற்றும் மேலும் பல உள்ளக முயற்சிகள் இதற்குள் அடங்கும்.


Share with your friend