1999ஆம் ஆண்டு, இலங்கையில் காப்புறுதி வர்த்தகத்தில் முன்னோடியாக களமிறங்கிய Cooperative Insurance PLC, நகர்ப்புறங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட காப்புறுதிச் சேவையை கிராமப்புற மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்துள்ளதுடன் தற்போது நாட்டில் குறுகிய காலத்திற்குள் காப்புறுதித் துறையில் அதிகூடிய வளர்ச்சியை பதிவு செய்து காப்புறுதி நிறுவனங்கள் மத்தியில் முன்னோடியாக திகழ்கிறது.
தனது பயணத்தில் மற்றொரு பெருமையான படியை எடுத்துக்கொண்டு, Cooperative Insurance PLC அதன் அதிகபட்ச சேவையை வழங்கும் நோக்கில், நாட்டின் முன்னணி அரசுக்கு சொந்தமான வங்கியான இலங்கை வங்கியுடன் (வாகனம் மற்றும் தீ) காப்புறுதி ஒப்பந்தம் ஒன்றை ஒக்டோபர் 27ம் திகதி மேற்கொண்டது.
இது இலங்கை வங்கி வாடிக்கையாளர்களுக்கு Cooperative Insurance PLC, வழங்கும் காப்புறுதி வசதிகளைப் பெறுவதற்கு இலங்கை வங்கியிடமிருந்து பெறப்பட்ட கடன்கள் மற்றும் லீசிங் வசதிகளைப் பெறுவதற்கான திறனை வழங்குகிறது.
83 வருடங்களுக்கும் மேலாக இலங்கையர்களுக்கு நம்பகமான வங்கி வசதிகளை வழங்கி வரும் இலங்கை வங்கியுடன் தமது வாடிக்கையாளர்களுக்கு காப்புறுதி வசதிகளை வழங்குவதற்கான பிரதான காப்புறுதியாளராக ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட முடிந்ததுடன், இது Cooperative Insurance PLC, பெற்ற மற்றுமொரு வெற்றியாகும் என நிறுவனத்தின் தலைவர் சுசில் வீரசேகர தெரிவித்தார்.
இலங்கை வங்கி வாடிக்கையாளர்கள் இவ்வாறான பொருளாதார சவால்களை எதிர்நோக்கும் போதுஇ கார்கள் மற்றும் வீடுகள் போன்ற சொத்துக்களுக்கான குறைந்த காப்புறுதிப் மாதாந்த கட்டுப்பணத்தால் இலங்கை வங்கி வாடிக்கையாளர்கள் நன்மையடைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைவதாக Cooperative Insurance நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் உதய குமார தெரிவித்தார்.
சாதாரண பொதுமக்களின் நிலைமையை சரியாக அடையாளம் கண்டுகொண்டுள்ள Cooperative Insurance PLC மற்றும் இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான இலங்கை வங்கியும் இவ்வாறான ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளமை பல இலங்கையர்களின் வங்கி மற்றும் காப்புறுதி விவகாரங்களில் பெரும் அனுகூலத்தைப் பெறுவார்கள் என நம்பலாம். குறிப்பாக இலங்கையில் காப்புறுதித் துறையில் மூன்றாவது பெரிய சேவை வலையமைப்பைக் கொண்டுள்ள Cooperative Insurance PLC மற்றும் இலங்கையின் வங்கித் துறையில் மிகப் பெரிய கிளை வலையமைப்பைக் கொண்ட இலங்கை வங்கியுடனான ஒப்பந்தம் உண்மையிலேயே ஒரு சிறப்பு வெற்றி என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.