‘சிறந்த நடைமுறைகள் 2022’ ஐரோப்பிய விருதை வென்றது பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி

Share with your friend

பெல்ஜியத் தலைநகர் பிரசல்ஸில் அமைந்துள்ள ஐரோப்பிய தர ஆராய்ச்சி சங்கத்தின் வருடாந்த  விருது வழங்கல் நிகழ்வில், இலங்கையின் வங்கி அல்லாத நிதி நிறுவனத் துறையில் விருது பெற்ற நிதித் தீர்வு வழங்குனரான பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி (பிஎல்சி) மற்றுமொரு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. ‘சிறந்த நடைமுறைகள் 2022’ ஐரோப்பிய விருது விழாவில் ஆசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் தெரிவு செய்யப்பட்ட, நிறுவனங்கள், பொது நிர்வாகங்கள் மற்றும் அமைப்புகள் பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. 

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி இலங்கையின் இந்த பெறுமதியான விருதைப் பெற்ற ஒரே நிறுவனமாகும். முன்னதாக இந்த விருதை பிஎம்டபிள்யூ குழுமம் (ஜேர்மனி), கொனிகா மினோல்டா (ஜப்பான்), ஸ்டேட்  பேங்க்  ஒப் இந்தியா (இந்தியா), கெத்தே பசிபிக் எயார்வேஸ் (ஹொங்காங் – சீனா), எயார் கனடா (கனடா), மற்றும் யுனைடெட் எயார்லைன்ஸ் (அமெரிக்கா) போன்ற சர்வதேச நிறுவனங்கள் பெற்றுள்ளன. 

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் தலைவர் பிரதீப் அமிர்தநாயகம், பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் ஷமீந்திர மார்செலின் ஆகியோர் ‘சிறந்த நடைமுறைகள் 2022’ ஐரோப்பிய விருது வழங்கும் விழாவில் விருதினைப் பெற்றனர்.  

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியானது உயர் தரத்திலான ஒருமைப்பாடு, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றைப் பேணுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சிறந்த நிர்வாகம் என்பது பிஎல்சியின் நிலையான வளர்ச்சியின் அடித்தளமாக காணப்படுவதோடு, நிறுவனம் அதன் சமூக உரிமத்தை சார்ந்து செயற்படுகின்றது. 

“இந்த விருது சிறந்த நெறிமுறை நடைமுறைகள் மற்றும் சிறப்பிற்காக பாடுபடுவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.” என விருது பற்றி கருத்து வெளியிட்ட பிஎல்சியின் தலைவர் பிரதீப் அமிர்தநாயகம் தெரிவித்துள்ளார்.  

“இந்த அங்கீகாரம் பிஎல்சியின் சிறந்த முகாமைத்துவம் மற்றும் நிர்வாக கட்டமைப்பை பிரதிபலிக்கிறது. இந்த சாதனைக்காக நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். நிர்வாகம் என்பது இன்று மாத்திரமல்ல, எதிர்காலத்திற்கும் முக்கியமானது! பொது-தனியார் பங்காளித்துவம் / அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு ஆகிய விடயங்களில் பிஎல்சி இலங்கையின் முன்மாதிரியாக  தொடர்ந்து செயற்படும். 

தர ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய சங்கத்தின் (ESQR) கருத்துக்கணிப்புகள், நுகர்வோர் கருத்து ஆராய்ச்சி மற்றும் சந்தை ஆய்வு ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் பொது நிர்வாகங்கள் விருதுகளுக்காக தெரிவு செய்யப்பட்டன. வாடிக்கையாளர்கள், நுகர்வோர், முன்னைய விருது பெற்ற நிறுவனங்கள், அமைப்புகள், விநியோகஸ்தர்கள், ஒத்துழைப்புத் தரும் நிறுவனங்கள் அல்லது நலம் விரும்பிகள் வாக்காளர்களாக இருக்கலாம். தெரிவு செயன்முறையில், பொது தகவல் ஆதாரங்கள், வெளியீடுகள் மற்றும் நேர்மறையான கருத்துக்கள், தொண்டு திட்டங்கள், சபைகள் மற்றும் பல்கலைக்கழக திட்டங்கள், வர்த்தக கண்காட்சிகள் மற்றும் கண்காட்சிகள் ஆகியன உள்ளடங்கும். 

தர ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய சங்கம் (ESQR) சுவிட்சர்லாந்தின் லொசேன்னை தலைமையகமாகக் கொண்டு, தர மேம்பாடு நுட்பங்களை அங்கீகரித்து ஆராய்ச்சி செய்வதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஐரோப்பிய அமைப்பாகும். இது நிறுவனங்கள், வணிகங்கள், அரசாங்கங்கள் மற்றும் தனிநபர்களின் தர மேலாண்மை உத்திகளில் சிறந்த நடைமுறைகளையும் விளைவுகளையும் கண்காணிக்கிறது. தர ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய சங்கம், சிறப்பம்சங்கள், புதுமை மற்றும் தொலைநோக்கு சிந்தனையை ஊக்குவிப்பதோடு, அறிவைப் பகிர்ந்து இணக்கமான மதிப்பீட்டு நடைமுறைகள் மற்றும் வசதிகளைப் பகிர்ந்து கொள்கிறது.

நாட்டின் மிகப்பெரிய அரச வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கியின் துணை நிறுவனமான பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி இலங்கையின் முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனமாகும்.  1996ஆம் ஆண்டு விசேட குத்தகை நிறுவனமாக செயற்படத் தொடங்கிய பீப்பள்ஸ் லீசிங், 2011ஆம் ஆண்டு கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. பீப்பள்ஸ் லீசிங், பங்களாதேஸில் ஒரு  துணிகர வெளிநாட்டு முயற்சி உட்பட, ஆறு துணை நிறுவனங்களைக் கொண்ட பன்முகப்படுத்தப்பட்ட வங்கி அல்லாத நிதி அதிகார மையமாக வளர்ந்துள்ளது. 


Share with your friend