மத்திய மாகாண சிரேஷ்ட வீரர்கள் தடகள சங்கத்தின் ஏற்பாட்டில், கண்டி போகம்பர மைதானத்தில் ஓகஸ்ட் மாதம் 27 மற்றும் 28ஆம் திதிகளில் நடைபெற்ற பதினோராவது திறந்த சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப் – 2022 போட்டியில் பீப்பள்ஸ் லீசிங் பினான்ஸ் பிஎல்சி (பிஎல்சி) ஊழியர்கள் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
பிஎல்சியின் ஷெர்மன் பெர்னாண்டோ ஆடவர் 110 மீற்றர் மற்றும் ஆண்களுக்கான 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டம் ஆகிய இரண்டிலும் தங்கப் பதக்கங்களை வென்றார். ஆண்களுக்கான 1,500 மீற்றர் மற்றும் 5,000 மீற்றர் போட்டியில் எஸ்.சிவகுமார் வெண்கலப் பதக்கங்களை வென்றார். எம்.ஏ.வி வசந்த ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கத்தையும், ஆடவருக்கான 110 மீட்டர் தடை தாண்டல் ஓட்டத்தில் எம். மோகன் என். நாணயக்கார வெண்கலப் பதக்கத்தையும், hammer throw போட்டியில் கே.சம்பத் பிரசங்க வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
பீப்பள்ஸ் லீசிங் என்பது இலங்கையின் முன்னணி வங்கியல்லாத நிதி நிறுவனம் மற்றும் நாட்டின் மிகப்பெரிய அரச வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கியின் முதன்மை துணை நிறுவனமாகும். 1996 ஆம் ஆண்டு விசேட குத்தகை நிறுவனமாக வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்த பீப்பள்ஸ் லீசிங், 2011 ஆம் ஆண்டு கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. பீப்பள்ஸ் லீசிங், பங்களாதேஷில் வெளிநாட்டு முயற்சி உட்பட ஆறு துணை நிறுவனங்களுடன் பல்வகைப்படுத்தப்பட்ட வங்கி அல்லாத நிதி அதிகார மையமாக வளர்ந்துள்ளது.