போக்குவரத்து மற்றும் பொருளாதார செயற்பாடுகளை மேம்படுத்தும் வகையில் DIMO மற்றும் BoC லீசிங் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

Share with your friend

85 வருட காலப்பகுதிக்கு மேலாக இந்நாட்டின் மோட்டார் வாகனத் துறையில் முன்னோடியாகத் திகழும் DIMO நிறுவனம், இந்நாட்டின் நம்பிக்கையை வென்ற அரச வங்கியான இலங்கை வங்கியுடன் (BoC) புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. அதனூடாக, Mercedes-Benz, Jeep மற்றும் Tata வாகங்களுக்கு புதிய லீசிங் தீர்வுகளை அறிமுகம் செய்துள்ளது. 

இந்த கைகோர்ப்பினூடாக, BoC இனால் DIMO நிறுவனத்தினால் விநியோகிக்கப்படும் Mercedes-Benz, Jeep மற்றும் Tata வாகனங்களுக்கு குறைந்த வட்டி வீதங்களில் லீசிங் வசதிகளைப் பெற்றுக் கொடுத்து, வாடிக்கையாளர்களுக்கு வலுவூட்டப்படுகிறது. அதுபோன்று DIMO நிறுவனம் Tata வணிக வாகனங்களுக்காக விசேட கொடுப்பனவுகள் பலதை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளதுடன், Tata Buses, Trucks, Prime Movers மற்றும் Tata Super Ace போன்றவற்றுக்கு கவர்ச்சிகரமான விலைக்கழிவுகளையும் வழங்குகிறது. சிறியளவிலான வாகனங்கள் வரிசையில் மிகவும் பிரபல்யம் பெற்ற ACE HT2 மற்றும் XENON YODHA Pick-Up வாகனத் தெரிவுகளுக்கு ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் வரை காப்புறுதியை இலவசமாக வழங்குவதற்கும் DIMO நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சிறியளவிலான வியாபாரங்களுக்கு வலுவூட்டும் வகையில் தமது முழுமையான ஆதரவை வழங்குவது இதன் நோக்காகும்.  நாடு முழுவதிலும் பரந்துள்ள 651 BoC கிளை வலையமைப்பினூடாக, வாடிக்கையாளர்களுக்கு இந்த லீசிங் வசதிகளை சுலபமாக பெற்றுக் கொள்ள முடியும்.

DIMO மற்றும் இலங்கை வங்கியின் பிரதிநிதிகள் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டதை படத்தில் காணலாம்.


Share with your friend