உலகின் மிகப்பெரிய ஆடம்பர ஆயுர்வேத நலவாழ்வு சங்கிலியான ஸ்பா சிலோன், ஷாங்கிரி-லா கொழும்பு மற்றும் மாஸ்டர் கார்ட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ‘வெல்னஸ் மாதம் 2025’ எனும் நிகழ்ச்சித் தொடர் ஜூன் மாதம் முழுவதும் நடத்தப்படவிருக்கிறது. இந்த தொடரில், உலக நல தினம் மற்றும் உலக யோகா தினம் போன்ற முக்கியமான நாட்கள் மையமாக்கப்பட்டு, பல்வேறு நலவாழ்வுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

வெல்னஸ் மாதம் 2025 நிகழ்ச்சி தொடர், ஸ்பா சிலோன், ஷாங்கிரி-லா கொழும்பு மற்றும் மாஸ்டர் கார்ட் ஆகிய நிறுவனங்களால் நடத்தப்பட்ட கூட்டு செய்தியாளர் சந்திப்பின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வுகள், உடற்திறன் மற்றும் நலவாழ்வுத் துறையில் செயல்படும் நபர்கள், வணிகத் துறையினர் மற்றும் ஸ்பா சிலோனின் நம்பிக்கையுள்ள வாடிக்கையாளர்கள் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இந்த செய்தியாளர் சந்திப்பில், ஸ்பா சிலோன் நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் குழும இயக்குநர் திரு. ஷலின் பாலசூரிய, ஷாங்கிரி-லா கொழும்பு ஹோட்டலின் பொதுமேலாளர் திரு. ஹெர்வே டுபாஸ்க் மற்றும் மாஸ்டர் கார்ட் – இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான நாட்டுப் பிரதிநிதி திரு. சந்துன் ஹபுகொட ஆகியோர் ஊடகங்களுக்கு உரையாற்றினர்.
ஆண்டின் நடுப்பகுதியில் தங்களது நலத்தையும் நல்வாழ்வையும் சுயமாக மதிப்பீடு செய்யும் கருத்தை மையமாகக் கொண்டுதான் இந்த “வெல்னஸ் மாதம்” நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. உலகளாவிய பொறுப்பு உடைய நலவாழ்வு வர்த்தக நாமமாக ஸ்பா சிலோன், இந்த அனுபவத் தொடரை முன்னெடுத்து வருகின்றது. இது நவீன வாழ்க்கைமுறைக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட பல்வேறு உணர்வுப்பூர்வமான நலவாழ்வு முயற்சிகளை உள்ளடக்கியுள்ளது. இந்த ஆண்டின் நிகழ்ச்சிகள் “Disconnect to Reconnect” எனும் தலைப்பில் நடைபெறுகின்றன.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஸ்பா சிலோன் நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் குழும இயக்குநர் திரு. ஷலின் பாலசூரிய, “நலத்திற்கான அக்கறை இன்று உலகளாவிய அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. இயற்கையின் தாக்கம் நம்முடைய நலத்திலும் தனிநபர் நல்வாழ்விலும் ஏற்படுத்தும் மாற்றத்தை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். வெல்னஸ் மாதம் முழுவதும், நாம் மக்களை அன்றாட வாழ்க்கையின் சஞ்சலங்கள் மற்றும் குழப்பத்திலிருந்து விலகி, இயற்கையுடனும், தங்களுக்கு நெருங்கியவர்களுடனும், சமூகத்துடனும், அதைவிட முக்கியமாக தங்களுடனேயும் ஆழமாகக் மீண்டும் இணைவதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கும் வகையில் ஊக்குவிக்கிறோம். உலகளாவிய அளவில் விருதுகள் பெற்ற நலவாழ்வு வர்த்தக நாமமாக, நாங்கள் இந்த பார்வையை ஆயுர்வேதத்தின் ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான ஞானத்தையும், நவீன அறிவியலையும் இணைக்கும் நமது நலவாழ்வு சூத்திரங்கள் மூலமாகக் கூர்மையாகத் தாங்கிக் கொண்டு, உலகம் முழுவதிலும் உள்ள நவீன வாழ்க்கைமுறைக்கு ஏற்ற ஒருங்கிணைந்த நலவாழ்வு அணுகுமுறையை வழங்குகிறோம்” எனக் குறிப்பிட்டார்.
வெல்னஸ் மாத நிகழ்வுகள், தினசரி வாழ்க்கையின் பல்வேறு தருணங்களில் நலத்தைப் பிரதிபலிக்கும் வகையில் “வெல்னஸ் தருணங்களை” (wellness moments) கொண்டாடுகின்றன. இவை நகர்வு, ஒருமைப்பாடு, மற்றும் ஓய்வு போன்ற கூறுகளில் வாழ்க்கையை சிறப்பாக வாழ்வது எப்படி தொடர்ச்சியாக வேரூன்றிக் கொண்டிருக்கிறது என்பதை அடையாளம் காட்டுகின்றன.
இந்த ஆண்டுக்கான பிரத்யேக நிகழ்வுகள் வரிசையில், சூரியோதய யோகா சடங்கு, மன அழுத்தம் குறைக்கும் கலை மூலமான சிகிச்சை, உறக்கத்திற்கான சிகிச்சை, தோல் பராமரிப்பு முறையிலான சிகிச்சை மற்றும் உணர்வுகளை ஊட்டும் ஐம்புல உணவுணர்வுப் பயண அனுபவங்கள் (Immersive Dining Experiences) உள்ளிட்டவை, ஷாங்கிரி-லா கொழும்புவின் செழிப்பான சூழலில் நடைபெறவிருக்கின்றன.


இவ்விழாவில் உரையாற்றிய ஷாங்கிரி-லா கொழும்பு ஹோட்டலின் பொதுமேலாளர் திரு. ஹெர்வே டுபாஸ்க் கூறுகையில், “ஸ்பா சிலோன் உடனான எங்கள் கூட்டணி இந்த ஆண்டும் தொடரும் என்பது மகிழ்ச்சிக்குரியது. இது ஆசிய பாரம்பரியத்தின் வளத்தையும், முழுமையான நலவாழ்வையும், ஆயுர்வேத சிகிச்சை கலைவளத்தையும் கொண்டாடும் ஒரு தூண்டுதலான முயற்சி. இந்த ஆண்டில் Mastercard இணைவதன் மூலம் இந்த ஒத்துழைப்பு மேலும் ஆழமடைந்து, நலத்திற்கான பயணத்தை பரந்த சமூகத்திற்கு விரிவுபடுத்துகிறது. ஷாங்கிரி-லா கொழும்புவில், உண்மையான விருந்தோம்பல் என்பது உடலுக்கு ஊட்டமளிக்கிறது, மனதை அமைதியாக்குகிறது, மற்றும் உள்ளத்தையும் மேம்படுத்துகிறது. இந்த கூட்டணி, பாரம்பரிய ஞானமும் நவீன ஆடம்பரமும் ஒன்றாக கூடும் ஒரு தெய்வீக அமைதித் தலத்தை உருவாக்க உதவுகிறது. இங்குள்ள ஒவ்வொரு தருணமும், ஷாங்கிரி-லா நிறுவனத்தின் உள்ளார்ந்த உளவுயிரான ஆசிய விருந்தோம்பல் உணர்வை பிரதிபலிக்கும்படி அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது” எனக் கூறினார்.
மாஸ்டர் கார்ட் – இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான நாட்டுப் பிரதிநிதியான திரு. சந்துன் ஹபுகொட கூறுகையில்:
“உலக நல தினத்தைக் கொண்டாடும் நோக்குடன், வெல்னஸ் மாதம் 2025-க்காக Spa Ceylon மற்றும் ஷாங்கிரி-லா கொழும்பு ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதில் மாஸ்டர் கார்ட் பெருமிதம் கொள்கிறது. நலவாழ்வை முழுமையான அணுகுமுறையை ஊக்குவிக்கும் ஒருங்கிணைந்த எதிர்பார்ப்பை இந்த கூட்டணி பிரதிபலிக்கிறது. இது நாளாந்த வாழ்வை மேம்படுத்துவதோடு, தனிநபர்கள் தங்களது உடல் நலத்தையும் சமநிலையையும் முன்னிலைப்படுத்தச் செய்யும் வலிமையையும் வழங்குகிறது. உண்மையான நலத்துவம் என்பது ஒருவரது வாழ்வின் அடித்தள சுவையாகும். இந்த கூட்டணியின் மூலம் மக்கள் தங்களுடன் மீண்டும் தொடர்பு கொள்ளும் அனுபவங்களும், மேலும் சிந்தனையுடன் வாழும் சூழ்நிலைகளும் உருவாக்கப்படும்.” என விளக்கமளித்தார்.