ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்ரேஷன் ஜெனரல் லிமிடட் நிறுவத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கலாநிதி.சமீர தர்மசேன நியமனம் பெற்றுள்ளார்

Share with your friend

2025 ஒக்டோபர் 01ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் கலாநிதி. சமீர தர்மசேன அவர்களை பிரதம நிறைவேற்று அதிகாரியாக நியமித்திருப்பதாக ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்ரேஷன் ஜெனரல் லிமிடட் நிறுவனம் அறிவித்துள்ளது.

மூலோபாய மாற்றங்கள், செயற்பாட்டுத் திறமை மற்றும் தொழில்துறை கண்டுபிடிப்புக்கள் போன்றவற்றில் நிரூபிக்கப்பட்ட சாதனைகளைப் பதிவுசெய்துள்ள கலாநிதி தர்மசேன, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான தலைமைத்துவ அனுபவத்தைக் கொண்ட ஒரு புகழ்பெற்ற காப்புறுதி நிபுணராவார்.

சிறந்த கல்வி மற்றும் துறைசார் அனுபவத்தைக் கொண்ட கலாநிதி தர்மசேனவின் இந்த நியமனம் நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கான தலைமைத்துவம், வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்குப் பெறுமதியான சேவையை வழங்குதல், இலங்கையின் காப்புறுதித் துறையில் துறைசார்தன்மை, கல்வி மற்றும் புத்தாக்கத்தை மேம்படுத்துவதற்கு பக்கபலமாக அமையும். 

கலாநிதி.தர்மசேன தனது தொழில்வாழ்க்கையை ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்ரேஷனில் ஆரம்பித்திருந்தார். இவர் இந்தப் பதவியைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னர் முன்னணி காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் இலங்கையிலுள்ள பெருநிறுவனங்களின் உறுப்பு நிறுவனங்களில்  சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரியாகப் பதவிகளை வகித்துள்ளார். இவர் Allianz Life Insurance Lanka நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவத்தையும் உள்ளடக்கிய பன்னாட்டு அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்ட பட்டய காப்பறுதி நிறுவனத்துடன் (CII) இணைப்பைக் கொண்டுள்ள இலங்கையிலுள்ள ஒரேயோரு காப்புறுதி கற்கை அமைப்பான இலங்கை காப்புறுதி நிறுவனத்தின் தலைவராகவும் இவர் தெரிவுசெய்யப்பட்டார். 

இவர் சைப்ரஸ், கிர்னே அமெரிக்க பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவத்தில் PhD பட்டத்தைப் பெற்றிருப்பதுடன், கொழும்பு பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவ முதுமானி, களனி பல்கலைக்கழகத்தில் உயிரியல் விஞ்ஞானத்தில் இளமானிப் பட்டத்தையும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமானிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் இந்திய காப்புறுதி நிறுவனத்தில்  இணை உறுப்பினராகவும், ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள பட்டய காப்புறுதி நிறுவனத்தின் (FCII) சக உறுப்பினராகவும், பட்டய காப்புறுதி நிபுணராகவும் விளங்குகிறார்.

இத்துறையில் இவரது உலகளாவிய அங்கீகாரம், கல்வி சார்ந்த நுண்ணறிவையும் தொழில்துறை நிபுணத்துவத்தையும் இணைக்கும் கலவையாக அமைந்திருப்பதுடன், இது பெருநிறுவன மற்றும் நிறுவனத் திறன்களை வழிநடத்த அவருக்கு உதவியாக இருக்கிறது.

நாட்டின் பொதுக் காப்புறுதியில்  ஒரு முக்கியப் பங்கு வகிக்கும் ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்ரேஷன் ஜெனரல் லிமிடட் நிறுவனம், நம்பிக்கை மற்றும் சேவையின் சிறப்பு ஆகிய மரபுகளை தொடர்ந்து நிலைநிறுத்துகிறது. மோட்டார், ஆரோக்கியம், ஆதனம் மற்றும் பெருநிறுவன காப்புறுதித் தீர்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான காப்புறுதித் திட்டங்களைக் கொண்டுள்ளது. ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்ரேஷன் ஜெனரல் நிறுவனம் இலங்கை முழுவதும் உயிர்கள், சொத்துகள் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதில் தொடர்ந்து உறுதியாக உள்ளது.

கலாநிதி தர்மசேனாவின் தலைமையில், அவரின் பல்துறை பின்னணி மற்றும் கல்விச் சிறப்பின் மூலம், நிறுவனம் நீண்டகால வளர்ச்சியை வேகப்படுத்தி, வாடிக்கையாளர் ஈடுபாட்டை மேம்படுத்தி, நம்பகமான தேசிய காப்பீட்டாளராக தனது நிலையை மேலும் வலுப்படுத்தத் தயாராக உள்ளது.


Share with your friend