இலங்கையின் முன்னணி online கொடுப்பனவு தீர்வு வழங்குநரான WEBXPAY, இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை ஒப்பற்ற, வரையறைகளற்ற மற்றும் சிறிய, நடுத்தரளவு வியாபாரங்களுக்கு நிலைபேறான டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஏற்றுக் கொள்ளும் தீர்வுகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் Visa உடன் கைகோர்த்துள்ளது. இந்தக் கைகோர்ப்பினூடாக WEBXPAY க்கு, நாடு முழுவதையும் சேர்ந்த சிறிய நடுத்தரளவு வியாபாரங்களுக்கு உலகளாவிய ரீதியில் காணப்படும் Visa அட்டைதாரர்களை அணுகச் செய்து, டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஏற்றுக் கொள்ளும் ஆற்றலை வழங்கி வலுவூட்டும் இலக்கை வேகமாக அணுகக்கூடியதாக இருக்கும். இந்தச் செயற்பாட்டினூடாக சிறு வியாபாரங்களுக்கான அளவீட்டை அதிகரித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதுடன், அதன் விளைவாக அதன் மீட்சிக்கு கைகொடுக்கக்கூடியதாக இருக்கும்.
ஆசிய பசுபிக் Visa Acceptance Fast Track Program இன் அங்கமாக அமைந்திருக்கும் WEBXPAY, 2025 ஆம் ஆண்டளவில் 10,000 புதிய டிஜிட்டல் இலங்கையர்களை டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய கட்டமைப்பை ஏற்படுத்த எதிர்பார்ப்பதுடன், நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 2025 ஆம் ஆண்டளவில் Gross Merchant Volume (GMV) பெறுமதியாக ரூ. 10 பில்லியனை பதிவு செய்ய எதிர்பார்த்துள்ளது. soft POS ஊடாக தொடுகையற்ற கொடுப்பனவுகளை ஏற்றுக் கொள்ளலை இது அதிகரிக்கும் என்பதுடன், soft POS தொழில்நுட்பத்தினூடாக tap to phone கொடுப்பனவுகளை செயற்படுத்தி, குறைந்த செலவிலமைந்த face to face கொடுக்கல் வாங்கல்கள் ஏற்றுக் கொள்ளலை ஏற்படுத்தும். கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு பின்னரான பொருளாதாரத்தில், விற்பனையாளர்களுக்கு மீளக் கட்டியெழுப்பிக் கொள்வதற்கும், விற்பனைகளை அதிகரித்துக் கொள்வதற்கும் உதவியாக அமைந்திருப்பதுடன், வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை மேம்படுத்திக் கொள்ளவும் உதவியாக அமைந்திருக்கும். மேலும், சொப்பிங்கில் ஈடுபடும் சகல வாடிக்கையாளர்களுக்கும் checkout பகுதியில் சிக்கல்களில்லாத டிஜிட்டல் கொடுப்பனவு அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும்.
Visa இன் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான முகாமையாளர் அவந்தி கொலம்பகே கருத்துத் தெரிவிக்கையில், “சிறு வியாபாரங்கள் தமது வியாபாரச் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்காக தொழில்நுட்பத்தை பின்பற்றுவதில் எப்போதும் ஆர்வமாக உள்ளதுடன், பெருமளவான சந்தர்ப்பங்களில் இதனைத் துரிதப்படுத்துவோர் அவசியமாக உள்ளது. Visa Acceptance Fast Track Program ஊடாக, WEBXPAY உடன் கைகோர்த்துள்ளதையிட்டு நாம் பெருமை கொள்வதுடன், நாடு முழுவதையும் சேர்ந்த ஆயிரக் கணக்கான சிறு வியாபாரங்களுக்கு உதவும் வகையில் செயலாற்றுகின்றோம். Visa தீர்வுகள் மற்றும் சிறந்த செயன்முறைகளுடன் மற்றும் WEBXPAY இன் உயர் தரம் வாய்ந்த கேட்வே தீர்வுகளுடன், சிறு வியாபாரங்களுக்கு தற்போது தொடுகையில்லாத கொடுப்பனவுகளை ஏற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், தமது மீட்சிக்கான பயணத்தின் போது விற்பனையாளர்களுக்கு துரிதமாகவும் பாதுகாப்பான வகையிலும் தமது தொலைபேசியைப் பயன்படுத்தி கொடுப்பனவுகளைப் பெறலாம்.” என்றார்.
WEBXPAY இன் ஸ்தாபகர் ஒமர் சாஹிப் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களை சென்றடைவதற்கு எமது தீர்வுகள் மற்றும் இலக்குகளை விரிவாக்கம் செய்வதற்கு Visa எம்முடன் கைகோர்த்துள்ளமைக்காக நன்றி தெரிவிக்கின்றோம். இந்தப் பங்காண்மையினூடாக, வேகமான, சௌகரியமான மற்றும் சிக்கல்களில்லாத கொடுப்பனவுகளை ஏற்றுக் கொள்ளும் செயன்முறையை மேலும் விரிவாக்கம் செய்துள்ளதுடன், உள்நாட்டு டிஜிட்டல் கொடுப்பனவுகள் கட்டமைப்பின் விரிவாக்கத்துக்கு பங்களிப்பு வழங்க எதிர்பார்க்கின்றோம். அதனூடாக இலங்கையில் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்கு புரட்சிகரமான பங்களிப்பை வழங்கக்கூடியதாக இருக்கும்.” என்றார்.
நாடு முழுவதையும் சேர்ந்த 2000க்கும் அதிகமான வியாபாரங்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள WEBXPAY இன் integrated platform ஊடாக விற்பனையகங்களுக்கு தமது ஒன்லைன் வியாபாரத்தை 3 தினங்களுக்குள் நிறுவிக் கொள்ள வாய்ப்பளிக்கப்படுகின்றது. ஒவ்வொரு வியாபார அளவுக்கமைய விற்பனையகங்களுக்கு பாதுகாப்பு, செலவுச் சிக்கன மற்றும் பரிபூரண டிஜிட்டல் கொடுப்பனவு தீர்வு கிடைப்பதுடன், ஒரு கட்டமைப்பில் முடிவில்லாத கொடுப்பனவு தெரிவுகள் வழங்கப்பட்டு, தமது வியாபார செயற்பாடுகளை இலகுவான முறையில் முன்னெடுத்துச் செல்ல உதவியுள்ளது.
அண்மையில், அவுஸ்திரேலிய வெளி விவகார மற்றும் வர்த்தக திணைக்களத்துடன் (DFAT) பங்காண்மையை WEBXPAY ஏற்படுத்தியிருந்தது. இதனூடாக கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட கிராமிய பொருளாதாரங்களுக்கு தமது டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஏற்றுக் கொள்ளலை விரிவாக்கம் செய்வதற்கும், டிஜிட்டல் புரட்சியில் சிறிய நடுத்தரளவு வியாபாரங்களை அங்கம் பெறச் செய்வதற்கும் பங்களிப்பு வழங்க எதிர்பார்க்கின்றது.
2015 ஆம் ஆண்டில் இலங்கையின் முதலாவது online கொடுப்பனவு செயற்படுத்தாளராக அறிமுகம் செய்யப்பட்டது முதல், நாட்டின் நன்மதிப்பைப் பெற்ற கொடுப்பனவு கேட்வே தீர்வுகள் வழங்குநராக WEBXPAY வளர்ச்சியடைந்துள்ளதுடன், சிறிய மற்றும் பாரியளவு வியாபாரங்களின் அதிகரித்துச் செல்லும் பிரிவுகளுக்கான பெருமளவு கொடுப்பனவுத் தெரிவுகளை ஏற்படுத்தியுள்ளது. பரிபூரண மற்றும் மையப்படுத்தப்பட்ட கொடுப்பனவுத் திட்டங்களை அறிமுகம் செய்து இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சியை நோக்காக் கொண்டுள்ள WEBXPAY, நாட்டின் சிறிய நடுத்தரளவு வியாபாரங்களுக்கு டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களை இலகுவான முறையில் மேற்கொள்வதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதில் கவனம் செலுத்துகின்றது. இந்த ஆண்டில் விற்பனையகங்களுக்கு online மற்றும் ஓஃவ்லைன் ஊடாக கொடுப்பனவுகளை ஏற்றுக் கொள்ளத்தக்க Point of Sales (POS)தீர்வுகளை அறிமுகம் செய்து, தமது பெறுமதியை மேலும் விரிவாக்கம் செய்வதற்கு நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.