இலங்கையில் வரி முகாமைத்துவத்தை புதிதாக மாற்றியமைப்பதில் DPR முன்னணியில் உள்ளது

Share with your friend

–இலங்கையின் வரி முகாமைத்துவத்தில் சிறந்து விளங்குவதை மீள்வரையறை செய்கிறது–

2005 ஆம் ஆண்டில், இலங்கையின் வரி தொடர்பில் ஆலோசனை சேவை வழங்குநரான DPR, நாட்டின் முதல் வரி இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், இலங்கையின் தனிப்பட்ட வரி செலுத்துவோருக்கான வரி கணிப்புக்களை மாற்றியமைத்தது. அரசாங்கத்தின் வரி இணையத்தள முயற்கிகளுக்கு, ஒரு தசாப்தத்திற்கு முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அற்புதமான முன்முயற்சி, ஆன்லைன் வரி கணிப்பு மற்றும் இ-ரிட்டர்ன் தாக்கல் ஆகியவற்றில் ஒரு புதிய தரநிலையை அமைத்தது. வரி தொடர்பான விஷயங்களில் வாடிக்கையாளர்களுக்கு தெளிவுபடுத்துவதில் தொடர்ச்சியான முயற்சிகளுடன், ஆலோசனை சேவைகளை DPR வழங்குகிறது, வாடிக்கையாளர்களுடன் நிகழ்நேர வரி புதுப்பிப்புகளைப் பகிர்ந்து கொள்ள 2006 இல் SMS நுழைவாயிலை அறிமுகப்படுத்தியது.

புத்தாக்கமான பாரம்பரியத்தைத் தொடர்ந்து, DPR இன்று வரி முகாமைத்துவ வழங்கல்களை விரிவாக்கத்துடன் மேம்படுத்தப்பட்ட வரி இணையதளத்தை மீண்டும் வெளியிட்டு வரி தொடர்பான விஷயங்களில் நிபுணத்துவமான வழிகாட்டுதல் மற்றும் பிரதிநிதித்துவத்துடன் வாடிக்கையாளர்களை வழிகாட்டுகிறது. DPR வரி இணையத்தளம் www.taxsrilanka.com மூலம் இப்போது அணுகக்கூடிய புதிய சேவையானது, இலங்கையின் வரி முகாமைத்துவ பரப்பில் ஒரு முன்னோடியாக DPR இன் நீண்டகால நற்பெயரை மேலும் வலுப்படுத்துகிறது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பனி மற்றும் தனிநபர்களுக்கு ஆக்கபூர்வமான மற்றும் நம்பகமான வரித் தீர்வுகளை வழங்குதல், நேரடி மற்றும் மறைமுக வரிகளின் ஒத்திசைவு மற்றும் அறிக்கையிடலை உறுதி செய்வதற்காக, வரி திட்டமிடல், வரி ஆலோசனை மற்றும் இப்போது வரி வழக்குகள் ஆகியவற்றிற்கும் வரி முகாமைத்துவ தீர்வுகளை DPR வழங்குகிறது.

இணையத்தள வெளியீட்டு விழாவில் இலங்கையின் வரித்துறையின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் திரு. டி.ஆர்.எஸ். ஹப்புஆராச்சி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதியாக நிதி அமைச்சின் முன்னாள் அரசிறை ஆலோசகர் திரு. பி. குருகே கலந்து கொண்டார். மேலும் இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளரும் நிதியமைச்சின் வரி ஆலோசகருமான செல்வி தம்மிகா குணதிலக்க, தரச்சான்று வரி கல்வி நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட ஆணையாளருமான திரு.பிரேமரத்ன பண்டா மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ முதுகலை நிறுவனத்தின் சிரேஷ்ட பீட உறுப்பினரான கலாநிதி சமந்த ரத்நாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

திரு. ஹப்புஆராச்சி தனது சிறப்புரையின் போது, வரி நிவாரணம் மற்றும் ஊக்கத்தொகைகள் மூலம் வாடிக்கையாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில் அரசாங்கத்திற்கான துல்லியமான வரிக் கணக்கீட்டை உறுதி செய்வதில் DPR போன்ற வரி ஆலோசகர்களின் இன்றியமையாத பங்கை எடுத்துரைத்தார். திரு.பி.குருகே, நெறிமுறை வரி முகாமைத்துவ நடைமுறைகளின் முக்கியத்துவத்தை பற்றி கூறியதோடு, அத்தகைய பொறுப்புகள், அடிப்படையில் அரசாங்கத்திடம் உள்ளன என்றும் வலியுறுத்தினார்.  மேலும் வரி இணக்கத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை வளர்ப்பதில் DPR இன் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை பற்றி கூறிய அவர், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார ஆரோக்கியத்திற்கு பொறுப்பான வரி நடைமுறைகள் அவசியம் என்ற கருத்தை வலுப்படுத்தினார்.

‘அறிவு மற்றும் புத்தாக்கம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வலுவூட்டல்’ என்ற எங்கள் விஞ்ஞாபனத்தின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கையின் வரிக் கட்டமைப்பின் வளர்ந்து வரும் சிக்கல்களை, தொடர்ந்து எங்கள் வரி முகாமைத்துவ குழுவின் கூட்டு அறிவு, நிபுணத்துவம் மற்றும் அனுபவத்துடன் நிவர்த்தி செய்து வருகிறோம்,’ என DPR இன் ஸ்தாபகரும் தலைவருமான திரு. பாரத சுபசிங்க தனது உரையில் தெரிவித்தார். ‘சமீபத்திய ஆண்டுகளில் இலங்கையில் வரி சீர்திருத்தத்தின் அதிர்வெண் தற்போதைய அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெறும் தலைப்பு, எங்கள் குழுவானது வரிச் சட்டங்களை மேம்படுத்துவதை நன்கு அறிந்திருப்பதுடன், எங்கள் வாடிக்கையாளர்கள், வரி விதிமுறைகளை நன்கு அறிந்திருப்பதையும், அவற்றை திறமையாக கடைப்பிடிப்பதையும் உறுதிசெய்கிறது.’ என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

1999 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து, DPR ஆனது இலங்கையில் வரி முகாமைத்துவத்திற்கான முன்னோடியாக விளங்குகிறது, தனிநபர்கள் மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்கள் உட்பட பெருநிறுவனங்களுக்கு பரந்த அளவிலான வரி தொடர்பான சேவைகளை வழங்குகிறது. சிக்கலான வரிச் சட்டங்களை எளிதாக்குதல், அதிநவீன வரித் தீர்வுகளை வழங்குதல் மற்றும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்கள் வரி விஷயங்களில் தெளிவு, நம்பிக்கை, அறிவு மற்றும் நிபுணர் ஆலோசனையுடன் பெறுவதை உறுதிசெய்து, அதிகாரம் பெற்ற, தகவலறிந்த நிதி முடிவுகளை எடுப்பதற்கு DPR தனது பணியை வழங்க முயல்கிறது.

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை அரசாங்கம் சமீபத்தில் இலங்கை சமமான வரி முறையை அமுல்படுத்துவதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்திய நிலையில், தனிநபர்கள் மற்றும் வணிகங்கள் வரி சீர்திருத்தத்தை மேம்படுத்துதல் மற்றும் இணக்கத்தை உறுதிசெய்து, அதன் மூலம் வரி வருவாய் சேகரிப்பில் பங்களிக்க DPR உறுதிபூண்டுள்ளது. நிதி நிலைமைகளை உறுதிப்படுத்துதல் மற்றும் இலங்கையில் நிலையான பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.

DPR இன் விரிவான வரி முகாமைத்துவ சேவைக்கு அப்பால், வெளிநாட்டு நேரடி முதலீட்டு ஆலோசனை, கம்பனி பதிவு மற்றும் செயலகச் சேவைகள், கணக்கியல் சேவைகள், புலமை அறிவுசார் சொத்து தொடர்பான சேவைகள், மனிதவள முகாமைத்துவ சேவைகள் மற்றும் நிறுவன பயிற்சி போன்றவற்றையும் வழங்குகிறது. 


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply