இலவச ஒன்லைன் தேகாரோக்கிய வகுப்புக்களை நடாத்துவதற்கு Fitzky உடன் கைகோர்த்துள்ள AIA இன்ஷூரன்ஸ்!

Home » இலவச ஒன்லைன் தேகாரோக்கிய வகுப்புக்களை நடாத்துவதற்கு Fitzky உடன் கைகோர்த்துள்ள AIA இன்ஷூரன்ஸ்!
Share with your friend

கோவிட் பெருந்தொற்று உண்மையில் நாம் மேற்கொள்ளும் அனைத்து விடயங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது மட்டுமின்றி நாம் எவ்வாறு உடற்தகுதி மற்றும் ஆரோக்கியமுடன் இருக்க வேண்டுமென சில சவால்களையும் எமக்கு முன்வைத்திருந்தது. கோவிட் காரணமாக நாம் சாதாரணமாக மேற்கொள்ளும் உடற்பயிற்சி மற்றும் செயற்பாடுகளைத் தவிர்த்து வேறுபட்டதொரு வாழ்க்கை முறைக்கு மாறியிருப்பதனால் எம்மில் பலர் நிச்சயமாக நிறை அதிகரிப்பு ஒன்றை உணர்ந்திருப்போம். எவ்வாறாயினும் தற்போது AIA இன்ஷூரன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு இவை அனைத்தையும் தற்போது மாற்ற முடியுமாகவே இருக்கும். மக்கள் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடன், சிறந்த வாழ்க்கையினை வாழ்வதற்கு உதவும் AIA இனுடைய வாக்குறுதியை நிஜமாகப் பேணுவதற்காக AIA இன்ஷூரன்ஸ் புத்தம் புதிய தேகாரோக்கிய உடற்பயிற்சித் தீர்வுகளையே வாடிக்கையாளர்களுக்கு தற்போது அறிமுகம் செய்திருக்கின்றது.  

AIA இன் அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களது வீட்டில் மிகவும் பாதுகாப்பாகவும், சௌகரியமாகவும் இருந்தவாறே முற்றிலும் இலவசமான ஒன்லைன் தேகாரோக்கிய உடற்பயிற்சி வகுப்புக்களைப் பெறுவதற்காக இலங்கையின் முன்னணி ஒன்லைன் தேகாரோக்கிய உடற்பயிற்சி வழங்குநரான Fitzky உடன் AIA கைகோர்த்துள்ளது. AIA இன் அனைத்து வாடிக்கையாளர்களும் இலங்கையின் மிகச்சிறந்த பயிற்சியாளர்களுடன் ஒவ்வொரு மாதமும் முற்றிலும் இலவசமான 12 ஒன்லைன் தேகாரோக்கிய உடற்பயிற்சி வகுப்புக்களில் கலந்து கொள்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஜும்பா, யோகா, HIIT, கார்டியோ, வலிமை மற்றும் சீரமைப்புப் பயிற்சி, Abs பயிற்சி மற்றும் உடல் நிறைப் பயிற்சி உள்ளடங்கலாக பல்வேறு வகையான தேகாரோக்கிய உடற்பயிற்சி வகுப்புக்களை காணொளி வடிவிலான வழிகாட்டல் அமர்வுகளாக Fitzky வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். இத்தீர்வின் அறிமுகத்தின் ஊடாக மக்கள் தங்களது ஆரோக்கிய மற்றும் நல்வாழ்வு இலக்குகளை அடைவதற்கும் மற்றும் அவர்களுடைய வாழ்க்கையில் மிகவும் உறுதியான வேறுபாட்டை ஏற்படுத்துவதற்கும் AIA இனால் உதவ முடியுமாகவே உள்ளது. 

AIA இன் பிரதான நிறைவேற்று அதிகாரி நிகில் அத்வானி கருத்துத் தெரிவிக்கையில், ‘இலங்கையின் மிகச்சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக (2019, 2020 இல் குளோபல் பேங்கிங் எண்ட் பைனான்ஸ் ரிவியு சஞ்சிகையினால் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ள) AIA ஸ்ரீலங்கா தனது வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த ஆரோக்கிய மற்றும் நல்வாழ்வுத் தீர்வுகளை வழங்குவதற்காக விசேட பிரயத்தனங்களையே மேற்கொண்டு வருகின்றது. கோவிட் பெருந்தொற்று அச்சுறுத்தல் தற்போது வரை தொடர்ச்சியாக நிலவுகின்ற போதும் எமது நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை இதற்காக விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும் என நினைக்க வேண்டியதில்லை. அதனாலேயே எங்களது வாடிக்கையாளர்கள் தங்களது வீடுகளில் இருந்தவாறே அவர்களின் காப்புறுதித் திட்டங்களுக்கான முற்றிலும் இலவசமான தேகாரோக்கிய உடற்பயிற்சி வகுப்புக்களை வழங்கும் பாரிய மாற்றத்திற்கான அணுகுமுறையினையே Fitzky இன் உதவியுடன் நாங்கள் முன்னெடுத்திருக்கின்றோம். மக்கள் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும், சிறந்த வாழ்க்கையினை வாழ்வதற்கு உதவும் அர்ப்பணிப்புமிக்க நிறுவனமாக ‘நீங்கள் மரணியுங்கள் நாங்கள் செலுத்துகின்றோம்’ என்பதிலிருந்து ‘நீங்கள் வாழ்வதற்கு நாங்கள் உதவுகின்றோம்’ எனும் காப்புறுதித் திட்ட மாதிரியின் மாற்றத்திற்கான மற்றுமொரு உதாரணமாகவே இது அமைந்துள்ளது’ எனத் தெரிவித்திருந்தார்.

AIA இன் சந்தைப்படுத்தல் உதவிப் பொது முகாமையாளர் சிவந்தி டீ அல்விஸ் கருத்துத் தெரிவிக்கையில், ‘நாம் தற்போது வாழும் இவ்வுலகிற்குப் பொருத்தமான காப்புறுதியின் புதிய யுகத்தினை வழங்குவதற்காக AIA தனது பங்காளர்களுடன் இணைந்து தொடர்ச்சியாகத் தனது எல்லைகளை விரிவுபடுத்துவதுடன், தடைகளையும் தகர்த்தெறிகின்றது. எங்களுடைய ஆரோக்கிய நல்வாழ்வுத் தீர்வுகள் முழுக் காப்புறுதித் துறையிலும் ஒரு வேறுபட்ட போக்கை அமைத்துள்ளதுடன் நிறுவனத்தின் வியாபார முறையையும் மாற்றி அமைத்துள்ளது’ எனத் தெரிவித்திருந்தார். 

‘ஆரோக்கிய வாழ்க்கை முறைத் தெரிவுகளை இலங்கையர்கள் விளங்கிக் கொள்கின்ற போதிலும் அதனைச் செயல்படுத்துவதில் மந்தமான போக்கையே பின்பற்றுகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது உண்மையில் இப்பெருந்தொற்று காரணமாக மேலும் மோசமான நிலைக்கே உள்ளாகியிருக்கின்றது. அதனாலேயே AIA எங்கள் வாடிக்கையாளர்கள் ஆரோக்கியம் மற்றும் கட்டுக்கோப்பான தேகத்தைப் பெறுவதற்காக இலவசமான மற்றும் இலகுவாக அணுகக்கூடிய நல்வாழ்வுத் தீர்வுகளை உருவாக்குவதில் மிகவும் கவனம் செலுத்துகின்றது. பெருந்தொற்றுக்கு முன்னர் இருந்தே இலங்கையின் முன்னோடியான டெலிமெடிசின் சேவை வழங்குநரான oDoc உடன் கைகோர்த்து டெலிமெடிசின் சேவையினை இலங்கையில் வழங்கியிருந்த முதலாவது காப்புறுதி வழங்குநராகவும் நாங்களே திகழ்கின்றோம். அத்துடன் நாங்கள் காப்புறுதித் துறையில் முதல் முயற்சியாக oDoc செயலியின் ஊடாக இலங்கை மருத்துவச் சபையில் பதிவுசெய்துள்ள ஆரோக்கிய நல்வாழ்வு விசேட நிபுணர்களை முற்றிலும் இலவசமாக அணுகக்கூடிய வசதியினையும் எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு மேலும் விரிவுபடுத்தியிருந்தோம். எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு இணையற்ற ஒன்லைன் தேகாரோக்கிய உடற்பயிற்சி அனுபவத்தை வழங்குவதற்காக நாங்கள் தற்போது Fitzky உடன் கைகோர்த்திருக்கின்றோம். மேலும் எங்கள் வாடிக்கையாளர்கள் இன்னும் ஆரோக்கியத்தைப் பெறுவதற்காக மென்மேலும் வாய்ப்புக்களை அவர்களுக்கு வழங்குவதற்கு எங்கள் வணிக வலையமைப்பை நாங்கள் தொடர்ச்சியாகவே விரிவுபடுத்துவோம்’ என சிவந்தி மேலும் கருத்துத் தெரிவித்திருந்தார். 

Fitzky இன் நிறுவனர்/பிரதான நிறைவேற்று அதிகாரி செஹான் அதிகாரி கருத்துத் தெரிவிக்கையில், ‘AIA இனுடைய வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே தேகாரோக்கிய மற்றும் நல்வாழ்வுத் தீர்வுகளை வழங்குவதற்காக AIA போன்ற முதன்மையான நிறுவனத்துடன் கைகோர்ப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். இலங்கையிலுள்ள அனைவருக்கும் குறைந்த விலையில் இலகுவில் அணுகக்கூடிய தேகாரோக்கிய உடற்பயிற்சித் தீர்வுகளை வழங்குவதே எங்களின் ஒரே நோக்கமும், குறிக்கோளுமாக அமைந்துள்ளது. இது உண்மையில் மக்கள் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடன், சிறந்த வாழ்க்கையினை வாழ்வதற்கு உதவும் AIA யின் முதன்மையான நோக்கத்துடனேயே எதிரொலிக்கின்றது. எங்களுடைய நிறுவனப் பயணத்தில் இக்கூட்டாண்மை நிச்சயமாக பாரிய மைல்கல்லாக அமைந்துள்ளதுடன்; ஆரோக்கியமான ஒரு தேசமாக இலங்கையினை உருவாக்குவதற்கு AIA உடன் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதற்கும் நாங்கள் மிகவும் உற்சாகமாகவே இருக்கின்றோம்’ எனத் தெரிவித்திருந்தார். 

மேலதிக விபரங்களுக்கு AIA இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை 011 2310 310 ஊடாகவோ அல்லது Fitzky இனை 077 444 0121 இனூடாகவோ அழையுங்கள்.  


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: