எதிர்கால சந்ததியை வலப்படுத்தும் நோக்கில் Educate Lanka Foundation நிறுவனத்துடனான கூட்டாண்மையை நிலைநிறுத்திய Sysco LABS

Share with your friend

-இளைஞர் மாற்ற முகவர் திட்டத்தில் சுறுசுறுப்புடன் பங்கேற்று வழிகாட்டலை வழங்குகிறது-

உணவுச்சேவையின் முன்னணியாளராகத் திகளும் Sysco இன் கண்டுபிடிப்புப் பிரிவான Sysco LABS Sri Lanka, இளம் தலைமுறையினர் உலகளாவிய ரீதியில் நனவான மாற்றத்தை ஏற்படுத்துபவர்களாக விளங்குவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற இலாபநோக்கற்ற கல்வியை வழங்கும் Educate Lanka Foundation (ELF) நிறுவனத்துடன் ஏறத்தாழ அரை தசாப்தகாலமாக கூட்டாண்மையைத் தொடர்ந்து வருகிறது.   

2007ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ELF, இலங்கையில் சமூக-பொருளாதார ரீதியில் பின்னடைவுகளைச் சந்தித்துள்ள சிறுவர்கள் மற்றும் இளையோருக்கு தரமான மற்றும் சமமான கல்வி வாய்ப்புக்களுக்கான அணுகலை மேம்படுத்தி வருகிறது. சகா-சகா நீண்டகால ஒன்லைன் புலமைப்பரிசில்கள், இலக்கைக் கொண்ட வழிகாட்டல்கள் மற்றும் எதிர்கால பணியாளர் சக்தியில் வேலைகளைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் இளைஞர்களின் அடிப்படைத் திறமைகளை மெருகூட்டுதல் என்பனவே ELF நிறுவனத்தின் தனித்துவமான தலையீட்டு மாதிரிகளாகும்.

இந்த வருடம் ELF இன் இளைஞர் மாற்ற முகவர் திட்டத்தில் Sysco LABS இணைந்து கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் ஒத்துழைப்புடன், இலங்கையின் ஐந்து பிரதான மாவட்டங்களில் பல்வேறு சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆர்வமுள்ள இளைஞர்/மாணவர் தலைவர்கள் 30 பேர் கொண்ட குழுவை ஊக்குவிக்க முயற்சியெடுக்கப்பட்டுள்ளது. தனித்துவமான மெய்நிகர் தளங்களின் ஊடாக அவர்கள் தமது தலைமைத்துவப் பண்புகளை வெளிப்படுத்துவதை இத்திட்டம் நோக்காகக் கொண்டிருப்பதுடன், இது வளங்கள் தொடர்பில் கற்கும் அதேநேரம்  துறைசார் திறன் பயிற்சியாளர்கள், பெருநிறுவன பயிற்சியாளர்கள்/பங்குதாரர்கள் மற்றும் உலகளாவிய சகாக்களுடனும் இணைக்கிறது.

எதிர்கால சந்ததியை வலுப்படுத்துவதில் பெருமையான ஆதாவரளர் என்ற ரீதியில்  வளங்கள், அனுமானங்கள் மற்றும் வெளிப்புறக் காரணிகள் உள்ளிட்ட இடர்முகாமைத்துவ செயற்பாடகள் தொடர்பில் “அறியப்படாத நீரில் நீச்சலடிப்போம்: நிச்சயமற்ற தன்மையை கணக்கிடுதல் மற்றும் முகாமைத்துவம் செய்தல்“ என்ற தலைப்பில் Sysco LABS மெய்நிகர் வழிகாட்டல் அமர்வொன்றை நடத்தியது.

”முதலில் நாம் வரையறையற்ற எதிர்காலத்தைத் தழுவுவதற்கு மாணவர்களை ஊக்குவிப்பதுடன், அவர்கள் அடையக் கூடிய வெற்றிக்கு அவர்களின் கல்வி நோக்காக உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். Educate Lanka Foundation நிறுவனத்துடன் Sysco LABS கொண்டுள்ள கூட்டாண்மை ஊடாக தகவல்கள் மற்றும் வளங்களைப் பகிர்வதற்கும், நவீன பணியாளர் சக்தியில் வெற்றிபெறுவதற்குத் தேவையான அடிப்படைத் திறன்களை மேம்படுத்துவதற்கு இந்த இளைஞர்களுக்கு நாம் உதவுகின்றோம்” Sysco LABS என இன் திட்ட முகாமையாளரும், தன்னார்வ பிரதிநிதியுமான ஷோன் லீ தெரிவித்தார்.

இத்திட்டத்தின்  மற்றுமொரு  வழிகாட்டியான Sysco LABS Sri Lanka நிறுவனத்தின் வர்த்தக ஆலோசகர் ஹசினி அதிகாரி தெரிவிக்கையில், ” பெரும்பாலான இளைஞர்கள் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களில் நுழைய பயப்படுகிறார்கள், ஏனெனில் இந்த துறைகளில் எவ்வாறு ஒரு தொழிலை உருவாக்க முடியும் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. இந்த அமர்வின் ஊடாக Educate Lanka நிறுவனத்தின் கூட்டாண்மையுடன்  அவர்களின் கேள்விகளைத் தீர்த்துவைப்பதுடன், நிபுணத்துவம் சார்ந்த சூழலில் செயற்படுவதற்கான தயார்ப்படுத்தல் மற்றும் உள்விடயங்கள் பற்றிய ஆலோசனைகளை நாம் வழங்கி வருகின்றோம். இதன் காரணமாக  புதிய சந்ததிக்கான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கும், ஊக்குவிப்பதற்கும், எதிர்காலத்தின் திறன்களாக மாற்றுவதற்கான குழாயாகவும் விளங்குவதற்கும் எமக்குப் பாக்கியம் கிடைத்துள்ளது” என்றார்.

Educate Lanka Foundation நிறுவனத்தின் ஸ்தாபப் பணிப்பாளர் மஞ்சுல திசாநாயக்க  கருத்துத் தெரிவிக்கையில், ” ஆக்கமுள்ள இளம் தலைவர்ளை பயிற்சி மற்றும் வழிகாட்டல்கள் மூலம் தங்களைப் பற்றியும், சமூகம், மனிதாபிமானம், சுற்றுச்சூழல் மற்றும் உலகத்தைப் பற்றிய விழிப்புணர்வு கொண்ட சுறுசுறுப்பான மற்றும் பரிவுணர்வுகொண்ட மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய இளம் தலைவர்களாக மாற்றுவதே எமது எமது இந்த இளைஞர் மாற்ற முகவர் திட்டத்தின் நோக்கமாகும். இந்த வருடமும் Sysco LABS நிறுவனத்துடன் இணைந்து எமது செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதில் மகிழ்ச்சியடைவதுடன், இந்த முக்கியமான முயற்சியில் அவர்கள் தமது நேரம், திறன் மற்றும் அனுபவம் என்பவற்றைப் பகிர்ந்து கொள்வதுடன், எமது இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கையையும், ஊக்கத்தையும் கொண்டு வருவதுடன், அவர்களின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்வதற்கும் ஆதரவாக இருக்கின்றனர்” என்றார்.

Educate Lanka நிறுவனம் மற்றும் அதன் நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள இலங்கைக்கான பணிப்பாளர் தனு அமரசிங்கவை dhanu@educatelanka.org என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாகவும், வழிகா்டடல் திட்டத்தின் முகாமையாளர் சீவலி ரத்னகாரவை seevali@educatelanka.org என்ற மின்னிஞ்சல் முகவரியின் ஊடாகவும் தொடர்புகொள்ளவும். 


Share with your friend