ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் முன்னணி மருந்துப் பொருட்கள் இறக்குமதியாளரும் விநியோகத்தருமாகத் திகழும் ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ், இலங்கையில் OPPO எலும்பியல் மறுசீரமைப்பு தயாரிப்புகளை விநியோகிக்கும் புதிய உத்தியோகபூர்வ விநியோகத்தராக நியமிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பிரசன்னத்தைக் கொண்ட அமெரிக்க நிறுவனமான OPPO, 2007 ஆம் ஆண்டில் உள்நாட்டு சந்தையில் பிரவேசித்தது முதல் எலும்பியல் மறுசீரமைப்பு மருந்துப் பொருட்கள் பிரிவில் சந்தை முன்னோடியாகத் திகழ்கின்றது. இலங்கையினுள் OPPO தயாரிப்புகளை விநியோகிக்கும் உத்தியோகபூர்வ விநியோகத்தராக ஹேமாஸ் இயங்கும் என்பதுடன், மருந்துப் பொருள் உற்பத்தியாளருக்கு சந்தையில் காணப்படும் கேள்வியை நிவர்த்தி செய்வதற்கு பரந்தளவு சென்றடைவையும், உறுதியான பிரசன்னத்தையும் வழங்கும்.
ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ் மற்றும் ஹேமாஸ் சேர்ஜிகல்ஸ் அன்ட் டயக்னொஸ்டிக்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் ஜுட் பெர்னான்டோ இந்தப் பங்காண்மை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “எலும்பியல் மறுசீரமைப்பு மருந்துப் பொருட்கள் விற்பனையில் சந்தையில் முன்னோடியாக OPPO திகழ்வதுடன், தொழிற்துறையில் உறுதியான தலைமைத்துவத்தை ஹேமாஸ் கொண்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் அவர்களின் உற்பத்திகளை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான நம்பகமான விநியோகத்தராகவும் திகழ்கின்றது. இந்தப் பங்காண்மையினூடாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒன்றிணைவுகள், சுகாதார பராமரிப்பு சேவைகள் வழங்குநர்களுடன் நாம் கொண்டுள்ள உறவுகளுடன் பொருந்துவதாக அமைந்துள்ளதுடன், OPPO இன் பரந்தளவு தயாரிப்புகளை நோயாளர்களுக்கு விநியோகிப்பதற்கு எமக்கு வாய்ப்பை வழங்கியுள்ளது.” என்றார்.
OPPO தெரிவுகளில் 81 பிரிவுகள் மற்றும் 473 வெவ்வேறான தயாரிப்புகள் காணப்படுகின்றன. இவற்றில் எலும்பியல் மற்றும் மறுசீரமைப்பு பிரிவு, விளையாட்டு சார் மருந்துப் பொருட்கள் பிரிவு, காயங்கள் தவிர்ப்பு மற்றும் சத்திரசிகிச்சை பிரிவு போன்றன இவற்றில் அடங்குகின்றன. பரிபூரண எலும்பியல் மறுசீரமைப்பு தயாரிப்புகளுடன், இந்த பங்காண்மையினூடாக விளையாட்டு வீரர்கள் மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையில் ஈடுபடும் ஏனைய நுகர்வோருக்கு காயங்களை தவிர்த்துக் கொள்வது மற்றும் மறுசீரமைப்புக்கு உதவுவதுடன், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை முன்னெடுப்பதற்கும் உதவியாக அமைந்திருக்கும்.
OPPO இன் ஆசிய பசுபிக் பிராந்திய வர்த்தக நாம விருத்தி உப தலைவர் சாம் சியாங் கருத்துத் தெரிவிக்கையில், “புத்தாக்கமான எலும்பியல் மற்றும் மறுசீரமைப்பு தயாரிப்புகளை அறிமுகம் செய்வதனூடாக, நோயாளர்களின் சுமைகளை தணிப்பது OPPO இன் முன்னுரிமையாக அமைந்துள்ளது. பல தசாப்த காலமாக சுகாதார நிபுணர்கள் மற்றும் நோயாளர்களுடன் இணைந்து பணியாற்றி சிறந்த தீர்வுகளை வழங்குவதில் அனுபவத்தைக் கொண்டுள்ள ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ் உடன் கைகோர்ப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். ஹேமாஸ் சேர்ஜிகல்ஸ் மற்றும் டயக்னொஸ்டிக்ஸ் அணியினர் கொண்டுள்ள ஆழமான அனுபவம் மற்றும் அறிவுடன், உயர்ந்தமட்ட ஒழுக்க விதிமுறைகளினூடாக, OPPO தயாரிப்புகளை நோயாளர்களுக்கு மிகவும் சமீபப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பதுடன், சந்தையில் முன்னோடி எனும் எமது நிலையை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ளவும் உதவியாக அமைந்திருக்கும் என நம்புகின்றேன்.” என்றார்.
ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் முழு உரிமையாண்மையில் இயங்கும் துணை நிறுவனமான ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ், தன்வசம் கொண்டுள்ள திறன் மற்றும் புத்தாக்கம் போன்றவற்றினூடாக, தேசத்தின் தொழிற்துறையில் முன்னிலையில் திகழ்வதற்கு ஏதுவாக அமைந்திருப்பதுடன், ஒப்பற்ற விற்பனை மற்றும் விநியோக செயற்பாடுகளையும் தன்வசம் கொண்டுள்ளது. வியாபார பங்காளர்களுக்கு அவசியமான தீர்வுகளை வழங்கும் வகையில் வினைத்திறனாக இயங்கும் ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ், இலங்கையின் மருந்துப் பொருட்கள் விநியோகத்தில் 30 சதவீதத்துக்கும் அதிகமான சந்தைப் பங்கை தன்வசம் கொண்டுள்ளது.