ஏறாவூர் Fabric Park, இலங்கையில் நிலைத்தகு தன்மையான ஆடை உற்பத்தியை மாற்றுகிறது

Share with your friend

ஜூன் 2020இல் முதலாவது அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து, இலங்கை ஆடை மற்றும் ஆடைத் தொழிலில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் சாத்தியம் குறித்து ஏறாவூர் Fabric Parkஇன்  எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தன.

அத்துடன் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு மற்றும் இலங்கை முதலீட்டு சபை (BOI) வழங்கிய அனுசரணைப் போன்றே ஒன்றிணைந்த  ஆடைத் தொழில் சங்கங்களின் மன்றம் (JAAF) உடன் இணைந்து ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதனால் ஏறாவூர் Fabric Park உட்பார்வை மேலும் வலுவடைந்தது.

சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பில் அதிநவீன ஆடைத் தொழிற்சாலையை அமைக்க Fabric Parkல் ஆரம்ப முதலீடாக 35 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதிக்காக பெரிய அளவிலான முதலீடுகளைச் செய்ய இரண்டு சர்வதேச நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதன்மூலம் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பிராந்தியத்தில் துணிகளுக்கு சாயமிடுதல், கழுவுதல், பின்னல், நெசவு மற்றும் பிற தொடர்புடைய மற்றும் துணை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

மூலோபாய மேம்பாட்டு திட்டங்கள் சட்டத்தின் கீழ் இப்பகுதியை வகைப்படுத்த அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது, இது வரி மற்றும் இதர சலுகைகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஊக்கத்தொகைகளை நீடிப்பதற்கு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

விரைவான முன்னேற்றத்திற்கு ஒருங்கிணைந்ததன் முக்கியத்துவம்

“அடுத்த ஆறு மாதங்களில் இருந்து ஒரு வருடத்திற்குள் நிறுவனத்தின் தொழில் நடவடிக்கைகளை ஆரம்பிக்க நாங்கள் விரும்புகிறோம்.” என முதலீட்டு சபையின் தலைவர் சஞ்ஜய மொஹோட்டலா கூறினார். “உருவாக்கக்கூடிய குறிப்பிடத்தக்க தேசிய மதிப்பு குறித்த தெளிவான ஒருமித்த கருத்துடன் நாங்கள் மிக விரைவாக இங்கு நகர்கிறோம்,” என்று அவர் கூறினார். தற்போது அனைத்து நிலங்களும் ஒதுக்கப்பட்டு, தண்ணீர் மற்றும் மின்சார விநியோக வசதிகள் ஆகிய நடவடிக்கைகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. வணிக நிலத்தில் அரைவாசிக்கும் மேற்பட்டவை ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கு மிகப்பெரிய தேவை இருப்பதை நாங்கள் காண்கிறோம். இங்குள்ள சிறப்புத் திறனைப் பற்றி உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் தெளிவான அங்கீகாரம் உள்ளது. தேவைப்பட்டால், நாங்கள் இப்பகுதியை விரிவாக்கவும் முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

நெறிமுறை, நிலையான உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப அனுபவத்திற்கான உலகளாவிய தரங்களால் தொடர்ந்து குறிக்கப்பட்டுள்ள இலங்கையின் மிகவும் வளர்ந்த ஆடை உற்பத்தித் துறையை அங்கீகரித்து, ஏறாவூரின் விளம்பரதாரர்கள் இந்த திட்டத்தை காண்பது இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளுக்கு நிலைத்தகு தன்மை குறித்து உலகளாவிய தரத்திற்கு எடுத்துச் செல்ல ஒரு சிறந்த வாய்ப்பாக கருதுகின்றனர். 

Fabric Park அமைப்பதன் உடனடி நன்மைகள் உள்நாட்டு விநியோகச் சங்கிலிகளை செங்குத்தாக ஒருங்கிணைப்பதன் மூலம் திறனை விரிவுபடுத்துவது மற்றும் லாபம் மற்றும் அளவிலான பொருளாதாரங்களை மேம்படுத்துவது என்று மொஹோட்டலா கூறினார்.

தற்போது இலங்கை முழுவதும் சுமார் 300 ஆடைத் தொழிற்சாலைகள் உள்ளன. கூடுதலாக, ஏற்றுமதிக்கு ஆடை மற்றும் ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு 7 தொழிற்சாலைகள் மட்டுமே உள்ளன. அதன் உச்ச நிலையில், இது ஏற்றுமதி சார்ந்த ஆடை உற்பத்தி மற்றும் 2019இல் உள்நாட்டு நுகர்வு ஆகியவற்றில் 250,000 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியது. இலங்கை 2.2 பில்லியன் டொலர் செலவில் அதிக அளவு ஆடைகளை இறக்குமதி செய்தது.

நிலைத்தகு தன்மைக்கான முன்னோடி தேசிய பயணத்தின் உச்சம்

ஏறாவூரில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் முழு ஆசியப் பிராந்தியத்திலும் மிகவும் நிலையான வணிகமாக மாறும் திறனால் வலுப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் உள்ளூர் பங்குதாரர்கள் ஏற்கனவே வலுவான புத்தாக்கமான ஆற்றல் வசதிகள், நீர் மீள்சுழற்சி வசதிகள், அறிவியல் அடிப்படையிலான இலக்குகள் மற்றும் திட்ட மாதிரிகளை நிறுவுவதில் உறுதியாக உள்ளனர்.

மைக்ரோ மட்டத்தில், உள்ளூர் ஆடை விநியோகச் சங்கிலியை ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை குறைப்பதன் மூலம் உள்நாட்டு உற்பத்தித் திறனை அதிகரிப்பது இந்த அனைத்து இலக்குகளுக்கும் கணிசமாக பங்களிக்கும். இது, மேலும் வலுவான ஒருங்கிணைப்பு மற்றும் குறைந்த கார்பன் வெளியேற்றத்திற்கு வழிவகுக்கும்.

ஆரம்பத்தில் இருந்து இறுதி வரையிலான வாய்ப்புகளின் தொகுப்பு

ஏறாவூரின் மற்றொரு குறிப்பிடத்தக்க நன்மை என்னவென்றால், இது மிகவும் மேம்பட்ட சூழல் நட்பு தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ளது. இது ஆற்றல் மற்றும் நீர் நுகர்வு செயல்திறனை மேம்படுத்துவதோடு, நீர் மீள்சுழற்சி மற்றும் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மீட்புக்கான உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டாளர்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், ஏறாவூரில் அதிக அளவு சூரிய ஒளி மற்றும் நிலையான காற்று வீசும் சூழல் உள்ளது, இதனால் அந்த பகுதியில் நிறுவப்பட்ட எந்த உற்பத்தி வசதியும் சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்திக்கு ஏற்றதாக இருக்கும்.

ஏறாவூர் ஆடை வலயத்தின் மிக முக்கியமான பங்களிப்பு மட்டக்களப்பில் வாழும் இலங்கையர்களின் வாழ்வில் அதன் அதிகாரம் ஆகும். தற்போது, ​​மாவட்டத்தில் 6,21,887 மக்கள் தொகை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, அதில் 60,912 பேர் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர். 2019க்குள், பிராந்தியத்தில் தொற்றுநோய்க்கு முந்தைய காலப் பகுதியில் வேலையின்மை 6.4%ஆக இருந்தது.

“இப்பகுதியின் வளர்ச்சியுடன், நிலையான மற்றும் நல்ல ஊதியம் பெறும் ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைகளை உருவாக்க முடியும். இது சமீபத்திய வரலாற்றில் கிழக்கு மாகாணத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.” என மொஹோட்டலா தெரிவித்தார்.


Share with your friend