ஓராண்டு நிறைவில் – MAS மெய்வல்லுனர் பயிற்சிக் கழகத்தின் (Athlete Training Academy) மூலம் சிறந்த அடைவுகளைப் பெற்றிருப்பதுடன், எதிர்கால ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கான ஒத்துழைப்புக்களையும் விரிவுபடுத்துகின்றது

Share with your friend

  • கல்விப் பங்காளராக இலங்கை தகவல் தொழிநுட்ப நிறுவகம் (SLIIT) இணைகின்றது – மெய்வல்லுனர் விளையாட்டு வீரர்களுக்கான வருடாந்த 05 புலமைப்பரிசில்கள் வழங்கப்படுவதுடன், 2025 இல் 02 புலமைப்பரிசில்கள்.
  • தேசிய மட்டத்திலான விளைவுகள் – இலங்கை கனிஸ்ட அணியினர் 60% வீதத்திற்கு மேற்பட்டவர்கள் பயிற்சிக் கழகத்தில் பயிற்சி பெற்றுக்கொண்ட விளையாட்டு வீரர்களாகவும், 70% வீதம் பதக்கங்களை வெற்றியீட்டிய பிரதான வீரவீராங்கனைகள் 
  • செயலாற்றுகை அடிப்படையிலான தரப்படுத்தல் – A+ தரத்திலுள்ள விளையாட்டு வீரர்கள் மேம்படுத்தப்பட்ட உயிரியக்க பரிசோதனை, மற்றும் சர்வதேச அனுபவங்களையும் பெற்றுக் கொள்வர். அனைத்து விளையாட்டு வீரர்களும் புதிய சுகாதார காப்புறுதித் திட்டத்தின் மூலம் காப்பீடு செய்யப்பட்டுள்ளனர்.
  • உலகளாவிய கல்வி ஒத்துழைப்புக்கள் – இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பயிற்சிகளின் போது வெளிநாட்டுப் பட்டப்படிப்புக்களை தொடரும் விளையாட்டு வீரர்களுக்கான நிதியுதவிகள்.  

MAS மெய்வல்லுனர் பயிற்சிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்திற்குப் பின்னர்,  இலங்கையின் மெய்வல்லுனர் விளையாட்டுத் துறையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. இது இரத்மலான, CEWAS, பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் MAS ஹோல்டிங்ஸ் இன் இணைத்தாபகர்  மற்றும் தலைவர் மகேஷ் அமலீன், தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் சுரேஷ் சுப்பிரமணியம், பயிற்சிக் கழகத்தின் பயிற்றுவிப்பாளர்கள், முகாமைத்துவக் குழு, மெய்வல்லுனர் விளையாட்டு வீரவீராங்கனைகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர் பங்குபற்றியிருந்தனர். 

இந்நிகழ்வின் போது, இலங்கை தகவல் தொழிநுட்ப நிறுவகம் பயிற்சிக் கழகத்தின் உயர் கல்விப் பங்காளராக அறிவிக்கப்பட்டதுடன், ஆண்டுதோறும் தகமைபெறும் ஐந்து விளையாட்டு வீரர்களுக்கு பட்டப்படிப்பு புலமைப்பரிசில்களை வழங்கவுள்ளது. 2025 ஆம் ஆண்டில், இரண்டு மெய்வல்லுனர் விளையாட்டு வீரர்கள், தமது பயிற்சிகளுடன் இணையாக கல்விச் செயற்பாடுகளையும் தொடர்வதற்கான வாய்ப்புக்களுக்கு தகைமை பெற்றுள்ளனர்.  

தேசிய செயலாற்றுகைக்கான விளைவுகள்

முதலாவது ஆண்டில், பயிற்சிக் கழகத்தின் கனிஸ்ட அணியினர் சிறப்பாக செயலாற்றியுள்ளதுடன், பதக்கங்களை வென்றெடுக்கும் திறன்களையும் வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் ஆசிய மற்றும் உலகளாவிய போட்டிகளில் கனிஸ்ட அணியினர் தேசிய அணியில் 60% இற்கு மேற்பட்டவர்கள் அங்கத்துவம் வகிக்கின்றனர். மற்றும் 70% வீதமானவர்கள் பதக்கங்களை வெற்றியீட்டி உள்ளனர். சிரேஷ்ட அணியின் (19 வயதுக்குட்பட்ட) விளையாட்டு வீரர்கள் ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் இருபத்தைந்து வீதமானவர்கள் அங்கத்துவம் வகிக்கின்றனர். அத்துடன் முக்கிய ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை வீரர்கள் 33% வீதமான பதக்கங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இப்பெறுபேறுகள் மூலம் உயர்மட்டங்களில் போட்டியிட்டு வெற்றியீட்டக்கூடிய விளையாட்டு வீரர்கள் பயிற்சியளிக்கும் பயிற்சிக் கழகத்தின் தூநோக்கத்தை எடுத்துக்காட்டுகின்றது. 

செயலாற்றுகையை அடிப்படையிலான மெய்வல்லுனர் தரப்படுத்தல்

பயிற்சிக் கழக்கத்தின் வளங்களை அதிக ஆற்றல்களைக் கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு பயனுள்ளதாகச் செலவிடுவதற்கு புதிய செயலாற்றுகை அடிப்படையிலான தரப்படுத்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்தரப்படுத்தல்கள் A+ (உயர் மட்டம்), A (உயர் செயலாற்றுகை) தொடக்கம் B மற்றும் C (அபிவிருத்தி மட்டம்) வரை, அவர்களுடைய செயலாற்றுகை ஆசியாவின் முதற்தர 10 தரவரிசைகளுடன் இணங்கியொழுகின்றது. அதற்கமைய, A+ தரத்திலுள்ள விளையாட்டு வீரர்கள் முன்னேற்றமான விளையாட்டு விஞ்ஞான சேவைகள், உயிரியக்கப் பகுப்பாய்வுகள், உளநல செயலாற்றுகைப் பயிற்சிகள் மற்றும் சர்வதேச பரிமாற்ற நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அதிகமான ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வர்.

இம்முறைமை வளங்களை மிகவும் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதுடன், விளையாட்டு வீரர்களின் குறிக்கோள்களை அடைவதற்கும் வழிவகுக்கும்.

பயிற்சியின் போது விளையாட்டு வீரர்களுக்கும் வழங்கப்படும் அனுகூலங்களுக்கு மேலதிகமாக, தரப்படுத்தல் அடிப்படையிலான அனுகூலங்கள் வழங்கப்படும். இதில் பயிற்சிகள், உடை மற்றும் மெய்வல்லுனர் விளையாட்டு உபகரணங்கள், ஊட்டச்சத்து உதவிகள், விளையாட்டு வீரர்களுக்கும் பயிற்றுவிப்பாளர்களுக்குமான நேரடி உதவி, மற்றும் விளையாட்டு விஞ்ஞானம் மற்றும் ஊக்கமருந்து தடைக் கல்வி போன்றவற்றைப் பெற்றுக் கொள்வதற்குமான ஒத்துழைப்புக்களும் உள்ளடங்கும்.

அனைத்துவித பராமரிப்பு மற்றும் காப்பீடுகளை உறுதி செய்து, தற்போது அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் புதிய சுகாதாரக் காப்புறுதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு காப்புறுதி அனுகூலங்களைப் பெறுகின்றனர்,

உலகளாவிய கல்விக்கான ஒத்துழைப்புக்கள் 

விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு வாய்ப்புக்களுடன் கல்விக்கான வாய்ப்புகளும் தேவையென அடையாளங் காணப்பட்டு, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற்றவர்களுக்கு பயிற்சிக் கழகம் உதவிகளை விரிவுபடுத்தியுள்ளது. இந்நிதியுதவி, வெளிநாட்டில் தமது கற்கைகளைத் தொடரவும், அத்துடன், பயிற்சியில் முழுமையாக ஈடுபட்டு, இலங்கையை உயர் மட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தவும் வழிவகுக்கின்றது.

ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய மகேஷ் அமலீன் அவர்கள், ‘MAS மெய்வல்லுனர் விளையாட்டுப் பயிற்சிக் கழகத்தின் முதலாவது ஆண்டு, இலங்கையின் திறமைக்கான அதிவிசேட ஆற்றவளத்தை வெளிப்படுத்தியுள்ளது. சரியான ஒத்துழைப்புக்கள் வழங்கப்பட்டால், இவ்விளையாட்டு வீரர்கள் அடுத்த தலைமுறைக்கான சாத்தியங்களை மறுபரிசீலனை செய்ய முடியும். எங்கள் கனவு வெறும் பதக்கங்களை வென்றெடுப்பது மாத்திரமன்றி ஒழுக்கம், பொறுமை, மற்றும் மற்றவர்களை ஊக்கமளிக்கும் குணாதிசயங்களை கொண்டவர்களை உருவாக்குவதாகும். அவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பார்கள். விளையாட்டு வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் நிறுவனங்கள் இணைந்து செயற்படும் இம்முயற்சி, எங்களையும் கடந்து நீடித்து, பல தசாப்தங்கள் வரை வெற்றிவாகை சூடுவார்களென நாங்கள் நம்புகிறோம்.’ எனத்தெரிவித்தார்.

இலங்கையின் எதிர்கால ஒலிம்பிக் போட்டியாளர்களை உருவாக்குவதற்காக அர்ப்பணித்துள்ள, நாட்டின் முதலாவது மற்றும் மிகப்பெரிய அரச-தனியார் பங்குடமை MAS மெய்வல்லுனர் விளையாட்டு பயிற்சிக் கழகம், 2028 லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் 2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெற்றியீட்டுவதற்கான இலங்கை அணியை உருவாக்கும் குறிக்கோளை நோக்கி தொடர்ந்து செயலாற்றி வருகின்றது.


Share with your friend