“சிஎம்ஏ விசேட ஒருங்கிணைந்த அறிக்கையிடல் விருதுகள் – 2022″இல் மீண்டும் ஒருமுறை இரண்டு விருதுகளை பீப்பள்ஸ் லீசிங் வெற்றிகொண்டுள்ளது 

Share with your friend

முன்னணி வங்கி அல்லாத நிதித் தீர்வுகள் வழங்குநரான பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி (பீப்பள்ஸ் லீசிங்), ஒருங்கிணைந்த அறிக்கைகளைத் தயாரிக்கும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் வகையில் நடத்தப்பட்ட “சிஎம்ஏ விசேட ஒருங்கிணைந்த அறிக்கையிடல் விருதுகள் – 2022″இல் இரண்டு முக்கிய விருதுகளை வென்றுள்ளது. 

நாட்டின் முதன்மையான முகாமைத்துவ கணக்கியல் அமைப்பான, இலங்கை சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர்களின் (சிஎம்ஏ)  நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த நிகழ்வின் எட்டாவது பதிப்பு 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் 31ஆம் திகதி கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.

“Linked” என்பது ஒன்பதாவது ஒருங்கிணைந்த ஆண்டறிக்கையின் கருப்பொருளாக இருந்ததோடு, நிறுவனத்தின் மூலோபாயம், நீடித்த நிலைத்தன்மையின் அடிப்படைகளை கடைபிடிக்கும் அதேவேளையில், டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு மேம்பட்ட முறைகளில் வியாபார நாமத்தை (brand) விரிவுபடுத்தும் பணியைச் சுற்றியே காணப்படுகிறது என்பதை வலியுறுத்தியுள்ளது. 

நிறுவனத்தின் 2021/22 வருடாந்த அறிக்கையானது “அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள்: நிதி மற்றும் குத்தகை” பிரிவில் சிறந்த ஒருங்கிணைந்த அறிக்கை மற்றும் “சிஎம்ஏ விசேட ஒருங்கிணைந்த அறிக்கையிடல் விருதுகள் – 2022”,  “மெரிட் விருது” ஆகியவற்றை தனதாக்கியது. பல வருடங்களாக வருடாந்த அறிக்கைக்கு உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் கிடைத்த அங்கீகாரம், நிதி அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றுக்கான நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை இது பிரதிபலிக்கிறது. மேலும் இந்த வருட விருதுகள் தேவையான தரநிலைகளை பின்பற்றுவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டின் சான்றாகவும் அமைந்துள்ளது. 

பீப்பள்ஸ் லீசிங் என்பது நாட்டின் அரசுக்கு சொந்தமான மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகும். 1996ஆம் ஆண்டு விசேட குத்தகை நிறுவனமாக செயற்படத் தொடங்கிய பீப்பள்ஸ் லீசிங் 2011ஆம் ஆண்டு கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. பீப்பள்ஸ் லீசிங் என்பது பங்களாதேஷில் வெளிநாட்டு முயற்சி உட்பட நிபுணத்துவம் வாய்ந்த ஆறு துணை நிறுவனங்களைக் கொண்ட ஒரு நிதி அதிகார மையமாகும்.

புகைப்பட விளக்கம்

பீப்பள்ஸ் லீசிங்கின் பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு. உதேஷ் குணவர்தன (வலமிருந்து ஐந்தாவது), திரு. ஏ.என் ராமன் சிஎம்ஏ ஸ்ரீலங்கா ஆலோசனைக் குழு உறுப்பினர் மற்றும் கணக்காளர்களின் தெற்காசிய கூட்டமைப்பின் முன்னாள் தலைவரிடமிருந்து (இடமிருந்து நான்காவது) அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள்; நிதி  மற்றும் குத்தகை பிரிவின் சிறந்த ஒருங்கிணைந்த அறிக்கை விருதைப் பெறுவதைப் படம் சித்தரிக்கிறது. திருமதி. பிரசாதி லீலாரத்ன சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி – பீப்பள்ஸ் லீசிங் நிதிப் பிரிவு (இடமிருந்து முதலாவது), திருமதி ஹசங்க கத்ரியாராச்சி – பீப்பள்ஸ் லீசிங் நிதிப் பிரிவின் பிரதி முகாமையாளர் (இடமிருந்து இரண்டாவது), திரு. ரஜீவ பண்டாரநாயக்க பிரதம நிறைவேற்று அதிகாரி – கொழும்பு பங்குச் சந்தை (இடமிருந்து மூன்றாவது), பேராசிரியர் லக்ஷ்மன் வட்டவல தலைவர் மற்றும் சிஎம்ஏ ஸ்ரீலங்கா நிறுவனர் (வலமிருந்து நான்காவது), டில்ஷான் வீரசேகர தலைவர் – கொழும்பு பங்குச் சந்தை (வலமிருந்து மூன்றாவது), திரு. டேனியல் பூட் இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் (வலமிருந்து இரண்டாவது),திரு. ஹென்நாயக்க பண்டார பிரதித் தலைவர் சிஎம்ஏ ஸ்ரீலங்கா மற்றும் கணக்காளர்களின் தெற்காசிய கூட்டமைப்பு (வலமிருந்து முதலாவது) ஆகியோரும் படத்தில் உள்ளனர்.


Share with your friend