இந்த ஆண்டின் சிறுவர் தினம், மொனராகலை SOS சிறுவர் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்கு நினைவிலிருக்கும் தினமாக அமைந்திருந்தது. இலங்கையில் டியுலக்ஸ் பெயின்ட் வகைகளின் உற்பத்தியாளரான AkzoNobel, சிறுவர் தினத்தை முன்னிட்டு மொனராகலை SOS சிறுவர் கிராமத்தில் களிப்பூட்டும் விளையாட்டுகள், விநோத அம்சங்கள் மற்றும் வர்ணந்தீட்டும் செயற்பாடுகள் போன்றவற்றை முன்னெடுத்திருந்தது.
இந்த ஆண்டு AkzoNobel இன் தன்னார்வ ஊழியர்கள் மொனராகலை SOS கிராமத்துக்கு விஜயம் செய்திருந்ததுடன், அங்கிருந்த சிறுவர்களுடன் இணைந்து, களிப்பூட்டும் அம்சங்கள் நிறைந்த செயற்பாடுகளில் ஈடுபட்டனர். சிறுவர்களுக்கு போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டதுடன், ஊக்கமளிக்கும் மற்றும் ஆலோசனை வழங்கும் அமர்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. மேலும், இசை மற்றும் களிப்பூட்டும் அம்சங்களினூடாக அவர்களுக்கு குதூகலத்தையும் வழங்கியிருந்தனர். ஒவ்வொரு சிறுவருக்கும் விசேட அன்பளிப்பும் வழங்கப்பட்டிருந்தது.
இரு ஸ்தாபனங்களுக்குமிடையே நீண்ட காலமாக நிலைத்திருக்கும் உறவுகளுக்கான பல எடுத்துக்காட்டுதல்களில் ஒன்றாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. AkzoNobel இன் சர்வதேச Let’s Colour சமூக செயற்பாட்டின் அங்கமாக, 2019 ஆம் ஆண்டு பங்காண்மை ஏற்படுத்தப்பட்டிருந்தது.
Global YouthCan வலையமைப்பின் அங்கமாக திகழும் AkzoNobel, SOS சிறுவர் கிராமங்களுடன் இணைந்து, இளைஞர் தொழில் வாய்ப்பின்மையை இல்லாமல் செய்து, நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக புனரமைப்பு மற்றும் கல்வியறிவூட்டல் போன்றவற்றை பயன்படுத்துகின்றது. இந்த நோக்கத்துக்கமைய, AkzoNobel இனால் இளைஞர்களுக்கு பயிற்சிகள் மற்றும் பிரயோக அனுபவம் போன்றவற்றுடன், தமது நிபுணத்துவ மற்றும் பிரத்தியேக திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பும் வழங்கப்படுகின்றது. பங்குபற்றுனர்களுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளக்கூடிய நபர்களாக திகழும் அறிவையும் திறனையும் வழங்குவதாக அமைந்துள்ளது. எனவே, நீண்ட கால அடிப்படையில், அவர்களுக்கு மதிப்பிற்குரிய மற்றும் நிரந்தரமான தொழில் வாய்ப்பை பெற்றுக் கொண்டு, தமக்கும் தமது சமூகத்துக்கும் நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.
இந்த சிறுவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் அரவணைப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் பாரிய இலக்கின் அங்கமாக, சர்வதேச ரீதியில் பெயின்ட் மற்றும் மேற்பூச்சு வகைகளின் முன்னோடியாகத் திகழும் AkzoNobel, இந்த சிறுவர் கிராமங்களின் உள்ளக வாழிடப் பகுதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக, சிறுவர்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்கு பொருத்தமான வகையில் வர்ணத் தெரிவுகளைக் கொண்டு தோற்ற அம்சங்களை மேம்படுத்தி வழங்க முன்வந்துள்ளது. குறிப்பாக, சிறுவர் தினத்தன்று வர்ணம் தீட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தமை சிறந்த உதாரணமாக அமைந்திருந்தது.
AkzoNobel ஸ்ரீ லங்காவின் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி உபேந்திர குணவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “சிறுவர்களின் முகங்களில் புன்னகையை கொண்டு வருவதாகவும், அவர்களின் வாழ்க்கையை மேலும் பிரகாசப்படுத்துவதாகவும் இன்றைய தின செயற்பாடுகள் அமைந்திருந்தன. SOS சிறுவர் கிராமங்களுடன் கொண்டுள்ள பங்காண்மையை நாம் உண்மையில் பெறுமதி வாய்ந்ததாக கருதுவதுடன், இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதுடன், சமூகத்தின் நலனுக்காக அவர்களை மேம்பட வைப்பது தொடர்பில் நாம் தொடர்ந்தும் கவனம் செலுத்துவோம்.” என்றார்.
#Dulux #LetsColour #AkzoNobelCares #PeoplePlanetPaint #SOSChildrensVillage