சுழற்சிப் பொருளாதாரத்தின் தேவையை எடுத்துக் காட்டிய ‘ஆசியாவில் பொதியிடலில் நிலைபேறுதன்மை 2024’ மாநாடு

Share with your friend

ஆசியாவில் பொதியிடலில் நிலைபேறுதன்மை 2024’ (Sustainability in Packaging Asia 2024) மாநாடு ஜன் மாதம் 04ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை சிங்கப்பூரில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த உயர்மட்ட மாநாட்டில் பொதியிடல் துறையில் முன்னணியில் உள்ள விநியோகத்தர்கள் கலந்துகொண்டு, தம்மால் தயாரிக்கப்பட்ட நிலைபேறுதன்மை கொண்ட புதிய பொதியிடல் தீர்வுகளைக் காட்சிப்படுத்தினர். இதன் ஊடாக ஈடு இணையற்ற உள்ளீடுகள், ஒன்றிணைந்த ஆய்வுகள், முன்னணியான குழுக் கலந்துரையாடல்கள், புதிய போக்குகள் மற்றும் நிலைபேறான பொதியிடல் சந்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் முழுமையான புரிதலை பொதியிடல் துறையில் உள்ள தொழில்வல்லுணர்கள் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக் கிடைத்தது. 

பொதியிடலில் ஆய்வுகள், ஆலோசனைகள், தகவல்கள் மற்றும் குறித்த சேவைகளை வழங்குவதில் முன்னணியாகத் திகழும் பல்தேசிய நிறுவனமான ஸ்மித்தேர்ஸ் (Smithers) இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. இந்த மாநாடானது பிளாஸ்டிக் கழிவுப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும், ஒட்டுமொத்த பொதியிடலில் நிலைபேறுதன்மையை மேம்படுத்துவது தொடர்பான மாநாடாக ஆசிய மற்றும் தென்பசுபிக் பிராந்திய நாடுகளின் நாட்டிகாட்டியில் பதிவாகியுள்ளது. 

இலங்கையில் நாளொன்றுக்கு 400 மெட்ரிக் தொன் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளடங்கலாக 7500 மெட்ரிக் தொன் திடக்கழிவுகள் சேர்வதுடன்,  இதில் பிளாஸ்டிக் கழிவுகளுக்காக 5 % முதல் 20 % வரை குறைந்தளவான கழிவுகளே மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன.  அண்மைய வருடங்களில் மாநகரப் பிரதேசங்களில் திண்மக்கழிவு முகாமைத்துவப் பிரச்சினைகளுக்கு இலங்கை முகங்கொடுத்திருப்பதுடன், இந்து  சமுத்திரத்தை அதிகம் மாசுபடுத்தும் நாடு என்ற குற்றச்சாட்டுக்கும் இலக்காகியுள்ளது.

இந்த மாநாட்டில் பேச்சாளர்களில் ஒருவரான Kiwi Strategy Consultants Sri Lanka நிறுவனத்தின் பிரதான ஆலோசகர் திரு.கித்சிறி விஜேசுந்தர இலங்கையைப் பிரதிநிதித்துவுப்படுத்தி இம்மாநாட்டில் கலந்துகொண்டார். ‘இலங்கையில் விரிவாக்கப்பட்ட தயாரிப்பாளர் பொறுப்பின் (EPR) முன்னேற்றம் மற்றும் உள்நாட்டுத் தொழில்துறையில் அதன் நன்மைகள்’ என்ற தலைப்பில் ஆய்வுப் பத்திரிகையொன்றைத் தாக்கல் செய்து பொதியிடலில் நிலைபேறுதன்மையின் சவால்கள் மற்றும் சாதனைகள் குறித்து உரையாற்றினார். 

என்பது, வர்த்தக நாம உரிமையாளர்கள் தமது தயாரிப்புக்கள் முதல் வாடிக்கையாளர்களின் நுகர்வின் பின்னர் இறுதியாக அதன் பொதிகள் கழிவுகளாக அகற்றப்படும்வரை அவற்றை மீள்சுழற்சி செய்யும்வரை பொறுப்புக் கூறும் கொள்கையை உள்ளடக்கியதாகும். பொறுப்புடன் கூடிய உற்பத்திகளில் பொதியிடல் முறையை சான்றிதழ் அளிப்பது முதல் இந்த முறைமையின் ஊடாக பொருட்களின் பயன்பாட்டின் பின்னர் உரிய முறையில் சேகரித்தல் மற்றும் அகற்றுவதை செயற்படுத்தல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான பாதிப்பை குறைப்பதை ஊக்கப்படுத்துவதை தொடர்ச்சியாக முன்னெடுப்பதில் பங்களிப்பை உறுதிப்படுத்துவது இந்த மாநாட்டின் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டார்.

பொதியிடல் செயற்பாட்டின் மூலம் வர்த்தக நாம உரிமையாளர்களின் பொறுப்பு, தரம், பொதியிடல் மீள்சுழற்சிக்குப் பொருத்தமாக இருந்தல் மற்றும் அகற்றப்படும் பிளாஸ்டிக் பொதியிடல் கழிவுகளை வேறுபடுத்தி மீள்சுழற்சிக்கு அனுப்புதல் போன்ற பல விடயங்கள் குறித்து இம்மாநாட்டில் கலந்துகொண்டிருந்த ஏனைய வர்த்தகநாம உரிமையாளர்களின் கவனத்தை அவர் ஈர்த்தார்.

திரு.கித்சிறி விஜேசுந்தர, முன்னணி FMCG இன் சந்தைப்படுத்தல், ஏற்றுமதி மற்றும் சர்வதேச விற்பனை நிறுவனங்கள் பலவற்றில் பிரதானியாகச் செயற்பட்டுள்ளார். அவரின் தலைமையின் கீழ் சுழற்சிப் பொருளாதாரக் கொள்கை தொடர்பில் உள்நாட்டு பொதியிடல் சமூகத்தை விழிப்புணர்வூட்டியுள்ளார். இவர் தற்போது இலங்கை பொதியிடல் நிறுவனத்துடன் இணைந்து EPR அடிப்படையிலான தொழிற்துறை மூலோபாயத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பணியாற்றி வருகிறார்.

இலங்கையில் விரிவாக்கப்பட்ட தயாரிப்பாளர் பொறுப்பின் கட்டமைப்பு மற்றும் உள்நாட்டுத் தொழில்துறையில் இவற்றை நடைமுறைப்படுத்துவது குறித்து இவர் தனது உரையின் போது வெளிப்படுத்தினார். சுழற்சிப் பொருளாதாரத்தின் தேவையை வலியுறுத்திய அவர், பொதியிடலுக்குப் பயன்படுத்தும் பொருட்கள் தொடர்பில் இலங்கையில் காணப்படும் ஒழுங்குவிதிகள், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைப்படுத்துவதில் பங்குதாரர்களின் ஈடுபாடு தொடர்பில் அவருடைய இந்த ஆய்வுக் கட்டுரையில் ஆராய்ந்துள்ளார். போட்டி நிறைந்த உலகளாவிய சந்தையில் கொள்வனவு செய்பவர்கள் நிலைபேறுதன்மை கொண்ட பொதியிடல் ஒருங்கிணைக்கப்பட்டிக்க வேண்டும் என்பதை எதிர்பார்ப்பது குறித்து இலங்கையின் பொதியிடல் தொழில்துறையில் உள்ள விநியோகஸ்தர்கள் புரிந்துகொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் இதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வருட மாநாட்டில் கலந்துகொண்ட ஏனைய நிபுணர்கள் தமது ஆய்வுகளில் கீழ்வரும் தலைப்புக்கள் பற்றி ஆய்வுசெய்திருந்தனர். பொருளாதாரமும் கார்பன் வெளியேற்றமும், நிலைபேறான பொதியிடலில் தொழில்நுட்ப முன்னேற்றம், பெறுமதிச் சங்கிலிகளில் ஆய்வுகள் மற்றும் சிறந்த நடைமுறைகள், பொதியிடலில் மேம்படுத்தப்பட்ட மீற்சுழற்சி போன்ற தலைப்புக்கள் உள்ளடங்கியிருந்தன.  ஆசியப் பசுபிக் பிராந்தியத்தில் உள்ள முன்னணி வர்த்தக நாமங்களின் பிரதிநிதிகள் குறிப்பாக, Coca-cola, Mars Wrigley, WestRock, Haleon, Friesland Campina, UPM Speciality papers, Metsa Group, Borouge,  BOBST, CCC Label, Henkel, Mitsui Chemicals, DOW Chemicals, SCG Chemicals, Fonterra மற்றும் Danone உள்ளிட்ட வர்த்தக நாமங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அத்துடன், பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பது தொடர்பான ஒன்றியம் (Alliance to End Plastic Waste),  வணிக நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் பயிர்ச்செய்கைகளுக்கான சான்றிதழ்களை வழங்கும் PEFC மற்றும் நிலைபேறு தன்மைக்கான சான்றிதழை வழங்கும் ISCC போன்ற அமைப்புக்களும் இந்த மாநாட்டில் முன்வைப்புக்களை மேற்கொண்டன. 


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply