செலான் டிக்கிரியினால் WNPS Wild Kids வனஜீவராசிகள் புகைப்பட போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசுகள்

Home » செலான் டிக்கிரியினால் WNPS Wild Kids வனஜீவராசிகள் புகைப்பட போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசுகள்
Share with your friend

இயற்கையின் தருணங்களை படமெடுப்பதற்கு சிறுவர்களை ஊக்குவித்திருந்தது

வனஜீவராசிகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் (WNPS) Wild Kids திட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வனஜீவராசிகள் ஒன்லைன் புகைப்பட போட்டி அண்மையில் தொடர்ச்சியான மூன்றாவது வருடமாகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. செலான் வங்கியின் முன்னணி சிறுவர் சேமிப்புக் கணக்கான செலான் டிக்கிரி இந்தப் போட்டியின் உத்தியோகபூர்வ வங்கியியல் பங்காளராக கைகோர்த்திருந்தது. அதனூடாக நான்கு வாராந்த வெற்றியாளர்களுக்கும், மாபெரும் இறுதி வெற்றியாளருக்கும் சிறந்த வனஜீவராசிகள் மற்றும் இயற்கை புகைப்படத்துக்காக பரிசுகளை வழங்கியிருந்தது.

மூன்று மாதங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த இந்த WNPS ‘Wild Kids’ போட்டியினூடாக, சிறுவர்களுக்கு இயற்கையுடன் தொடர்பை ஏற்படுத்த ஊக்கமளிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பங்களில் பரந்தளவு இயற்கை அம்சங்கள், பறவைகள், வண்ணாத்துப்பூச்சிகள், பல்லி வகைகள், சிலந்திகள் மற்றும் பல அம்சங்கள் அடங்கியிருந்தன. 6 முதல் 12 வயது வரையான சிறுவர்களுக்காக இந்தப் போட்டி முன்னெடுக்கப்பட்டிருந்தது. 600க்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன. அன்டன் ஜுட் வினுஷன், திமாந்திரா பர்த்தொலொமியுஸ், திசானியா கருணாரட்ன, சமிரு சந்துஜ ராஜபக்ச ஆகியோர் வாராந்த வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டனர். போட்டியின் வெற்றியாளராக சமிரு சந்துஜ ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

நாட்டில் காணப்படும் முன்னணி சிறுவர் சேமிப்புக் கணக்கான செலான் டிக்கிரி, சிறுவர்களின் வயது வேறுபாட்டுடன் மாறுபடும் அவர்களின் ஈடுபாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துகின்றது. புகைப்படத்தில் சிறுவர்கள் வழமையாக அதிகளவு ஈடுபாட்டைக் காண்பிக்கின்றனர். இந்த வனஜீவராசிகள் ஒன்லைன் புகைப்பட போட்டி என்பது வங்கிக்கு கைகோர்த்து, சிறுவர்களை ஊக்குவித்து வெகுமதியளிக்கக்கூடிய சிறந்த திட்டமாக அமைந்திருந்தது.

இந்தப் போட்டி தொடர்பாக செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைகள் பிரிவின் உதவி பொது முகாமையாளர் காமிக டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “சிறுவர்களை தமது பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் ஈடுபாடுகளுடன் தொடர்பை ஏற்படுத்தும் வழிமுறைகளை கொண்டுள்ளமைக்காகவும், சேமிப்புப் பழக்கத்தை அவர்கள் மத்தியில் ஊக்குவிப்பதுடன், தமது வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளும் இதர முக்கியமான அம்சங்கள் பற்றியும் கவனம் செலுத்துவதற்காக செலான் டிக்கிரி அறியப்படுகின்றது. WNPS இன் உத்தியோகபூர்வ வங்கியியல் பங்காளர் எனும் வகையில், சிறுவர்களை இயற்கை மற்றும் வனஜீவராசிகளுடன் தொடர்புபடுத்தும் பல்வேறு திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம். சிறுவர்கள் பெருமளவு புகைப்படக் கலையில் ஈடுபாட்டைக் கொண்டிருப்பதை உணர்ந்த நாம், இந்த இரு ஈடுபாடுகளையும் ஒன்றிணைத்து, அவர்கள் மத்தியில் புகைப்பட போட்டியை ஏற்பாடு செய்யத் தீர்மானித்தோம்.” என்றார்.

‘Wild Kids’ திட்டத்தினூடாக சிறுவர்கள் மத்தியில் சூழல் தொடர்பான ஈடுபாட்டை கட்டியெழுப்ப எதிர்பார்க்கப்பட்டிருந்ததுடன், கல்வி மற்றும் களிப்பூட்டும் செயற்பாடுகளினூடாக பாதுகாப்பு தொடர்பான முக்கியத்துவம் உணர்த்தப்பட்டிருந்தது.

வனஜீவராசிகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ஜெஹான் கனகரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “இயற்கை மற்றும் வனஜீவராசிகளுடன் தொடர்பை ஏற்படுத்துவது என்பது, பின்தங்கிய பகுதிகளில் காணப்படும் அரிய உயிரினங்களை தேடிச் செல்லும் வனாந்தர விஜயங்கள் என பொருள்படாது. உங்களின் வீட்டின் பின்புறத்திலும் இது காணப்படுகின்றது. இயற்கை தொடர்பில் நன்கு கவனம் செலுத்துவதனூடாக, பரந்தளவு வனஜீவராசிகள் புகைப்படங்களை எடுத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். எமது Wild Kids திட்டத்துடன், சிறுவர்களின் ஈடுபாடுகள் மற்றும் பொழுதுபோக்குகளை முன்னெடுப்பதற்கான சகல வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்க எதிர்பார்ப்பதுடன், அதனூடாக சிறுவர்களை இயற்கையுடன் இணைத்து, எம்மைச் சூழ காணப்படுகின்றவற்றை வரவேற்பது தொடர்பில் பயில வாய்ப்பளிக்க எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

சிறுவர்களை தமது எதிர்காலத்துக்காக சேமிப்பதற்கு ஊக்குவிக்கும் முன்னணி சேமிப்புக் கணக்காக செலான் டிக்கிரி அமைந்துள்ளது. அத்துடன் சிறுவர்களின் ஆர்வத்தை இனங்காண்பதற்காக பல்வேறு ஈடுபாட்டுத் திட்டங்களையும் முன்னெடுக்கின்றது. இவற்றில் நாடு முழுவதையும் உள்வாங்கிய பல்வேறு போட்டிகள், பயிற்சிப்பட்டறைகள், நிகழ்வுகள் மற்றும் பங்காண்மைகள் போன்றன அடங்கியுள்ளன. செலான் டிக்கிரி சேமிப்புக் கணக்கை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ளவர்கள் செலான் வங்கியின் Facebook பக்கத்தை பார்வையிட்டு, வங்கியின் இணையத்தளமான  www.seylan.lk க்கு விஜயம் செய்து அல்லது 0112 00 88 88 உடன் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: