ஜோன் கீல்ஸ் குழுமம் நவம்பர் 25 ஆம் திகதி பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் (JKF) நிறுவன சமூகப் பொறுப்புணர்வால் (CSR) மேற்கொள்ளப்பட்ட நீடித்த முன்முயற்சிகள் மற்றும் குறியிலக்கு கொண்ட பிரச்சாரங்கள் மூலம் நினைவுகூர்ந்ததன் ஊடாக பாலின அடிப்படையிலான வன்முறையை (GBV) எதிர்த்துப் போராடுவதற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது. இந்த ஆண்டின் நிகழ்வுகளில் ஜேகேஎஃப் இன் புரொஜெக்ட் வேவ் (கல்வியின் மூலம் வன்முறைக்கு எதிராக செயல்படுதல்) மூலம் எட்டாவது ஆண்டு பொது பிரச்சாரம், குழுவில் உள்ள மனித வள நிபுணர்களுக்கான கொள்கை விழிப்புணர்வு அமர்வுகள் மற்றும் மின்னணு மற்றும் சமூக ஊடக தளங்கள் மூலம் பொதுமக்களை அணுகுதல் போன்ற செயல்பாடுகளுடன் ‘எழுந்து நில், வெளிப்படையாக பேசு, வன்முறை சுழற்சியை முடிவுக்குக் கொண்டுவருதல்’ என்ற கருப்பொருளின் கீழ் உள்ளடக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்களுக்கான விழிப்புணர்வு அமர்வுகளும் திட்டமிடப்பட்டிருந்தன ஆனால் தேர்தல்கள் காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டன. இந்த முயற்சிகள் பணியிடங்கள் மற்றும் சமூகங்களுக்குள் பாதுகாப்பான, மேலும் உள்ளடக்கிய சூழலை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவரான கிருஷான் பாலேந்திரா ஒரு உள்ளக பணித்துறை அறிவிப்பில், “மக்கள்தொகையில், ஏறக்குறைய 52% பெண்களாக இருந்த போதும் தொழிலாளர் சக்தியில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே பெண்கள் இன்னும் கொண்டுள்ளனர் என்பது மிகவும் கவலைக்குரியதாக உள்ளது, ஆழமாக வேரூன்றிய மனப்பான்மைகள் பெண்களின் திறனைக் கட்டுப்படுத்துவதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. அதே சமயம் பாலின அடிப்படையிலான வன்முறை சம்பவங்கள் மற்றும் கவலைகள் பலரை வேலை அல்லது தொழில்முனைவில் நுழைவதிலிருந்து அல்லது தொடர்வதிலிருந்து தடுக்கின்றன. ஜோன் கீல்ஸ் குழுவின் நன்னடத்தைக் கோட்பாடு விதிகளில் பாலின அடிப்படையிலான வன்முறையைத் தடுப்பது மற்றும் அதைக் குறித்து பேசுவது, குழுமத்தின் பாகுபாடில்லாக் கொள்கை, பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான கொள்கை ஆகியவற்றால் வலுப்படுத்தப்பட்டுள்ளது. பணியிடத்தில் எந்தவொரு பாலியல் துன்புறுத்தலுக்கும் பூச்சிய சகிப்புத்தன்மை கொள்கையுடன் குழுமம் செயல்படுகிறது மற்றும் அதன் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான சூழலை வழங்க உறுதிபூண்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற பரவலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட புரொஜெக்ட் வேவ் (கல்வி மூலம் வன்முறைக்கு எதிராக செயல்படுதல்) அதன் 10வது ஆண்டை இந்த ஆண்டு நிறைவு செய்தது. இத் தசாப்த கால தாக்கத்தைப் பற்றி, ஜோன் கீல்ஸ் குழுமத்தின் பெருநிறுவன சமூக பொறுப்பின் தலைவர் கார்மலீன் ஜெயசூர்யா கருத்து தெரிவிக்கையில், “எங்கள் பெருநிறுவன சமூக பொறுப்பு முயற்சிகள், பெருநிறுவனக் கொள்கைகளை உள்வாங்கும் செயல்முறையை நிறைவு செய்துள்ளன, மேலும் இலக்குகள் கொண்ட வெளிக்கள நிகழ்ச்சிகள் மற்றும் பொது பிரச்சாரங்கள் மூலம் விழிப்புணர்வு உருவாக்கத்தை விரிவுபடுத்தியுள்ளன. வன்முறைச் சுழற்சிகளை முடிவுக்குக் கொண்டுவர கல்வியும் விழிப்புணர்வும் முக்கியம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நிறுவப்பட்ட புரொஜெக்ட் வேவ், நவம்பர் 2014 இல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஜோன் கீல்ஸ் குழுமத்தின் ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை சிறார்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் போன்ற இலக்குக் குழுக்களையும் பொது போக்குவரத்து மற்றும் பிற பொது இடங்களில் பாலியல் துன்புறுத்தல், வீட்டு மற்றும் குடும்ப வன்முறை, சிறுவர் பாதுகாப்பு குறித்த பிரச்சாரங்கள் மற்றும் பிரச்சினைகளை எடுத்துரைத்தல் மற்றும் இலங்கை பொலீஸாருக்கு வளங்கள் மற்றும் பயிற்சி வசதிகள் உட்பட 4.9 மில்லியன் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.’
பாலின அடிப்படையிலான வன்முறையை நிவர்த்தி செய்வதற்கு மேலதிகமாக, சிறுவர் பாதுகாப்பிற்கான காரணியையும் புரொஜெக்ட் வேவ் ஆதரிக்கின்றது. தேசிய குழந்தைகள் தினத்தை நினைவுகூரும் வகையில் ஜேகேஎஃப் “ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சிறந்த எதிர்காலம்” மற்றும் “எங்கள் எதிர்காலத்தில் முதலீடு செய்வதன் அர்த்தம் நமது குழந்தைகளில் முதலீடு செய்வது” என்ற கருப்பொருளுக்கு பயனுள்ள முன்முயற்சிகள் மூலம் ஆதரவு அளித்தது. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை சினமன் கிராண்ட் கொழும்பு மற்றும் சினமன் சிட்டடேல் கண்டி ஆகிய இடங்களில் ECPAT ஸ்ரீலங்காவின் ஆதரவுடன் பவர் ஆஃப் ப்ளேயின் பொம்மலாட்ட நிகழ்ச்சியைக் கொண்ட கூட்டு விழிப்புணர்வு அமர்வுகள் ஆகும். இந்த ஒருவருடன் ஒருவர் இடைப்படும் அமர்வுகள், 11 பாடசாலைகளைச் சேர்ந்த 160க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் துஷ்பிரயோகத்தைத் தடுப்பது குறித்துக் கற்பித்தன. இந்த முயற்சிகளை நிறைவு செய்யும் வகையில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் லீட்ஸ் உடன் இணைந்து ஜேகேஎஃப் இன் பிரஜா சக்தி இடங்களான கொழும்பு 2 மற்றும் ரணால ஆகிய இடங்களில் இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இது 535 மாணவர்கள் மற்றும் 145 பெற்றோர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிகழ்சிகளை ஜா-எல மற்றும் மொரட்டுவையில் நடத்துவதற்கு திட்டமிட்டமிடப்பட்டுள்ளது.
ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை கவனம் செலுத்தும் நான்கு பகுதிகளில் சமூக ஆரோக்கியம் மற்றும் ஒருங்கிணைப்பு ஒன்றாகும் – ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (ஜேகேஎச்), கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள மிகப் பெரிய கூட்டு நிறுவனமாகும். இது 7 வகையான பரந்துபட்ட தொழில் துறைகளில் 70 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களை இயங்குகிறது. 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ள ஜோன் கீல்ஸ் குழுமம் 14,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிப்பதோடு, எல்.எம்.டி இதழால் கடந்த 19 ஆண்டுகளாக இலங்கையின் ‘மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனம்‘ என்று தரப்படுத்தப்பட்டுள்ளது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவின் ‘நிறுவன அறிக்கையிடல் மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மை‘யில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தைப் பெற்றுள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் முழு அங்கத்தவராக இருக்கும் அதே வேளை, ஐ.நா குளோபல் கொம்பக்டின் அங்கத்துவத்தையும் கொண்ட ஜே.கே.எச், ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை ஊடாக அதன் கூட்டாண்மை சமூக பொறுப்பாக ‘எதிர்காலத்திற்கான நாட்டினை கட்டியெழுப்புதல்‘ என்பதை நோக்கி பயணிக்கின்றதுடன் இலங்கையில் பிளாஸ்டிக் மாசினை குறைக்க ஒரு வினையூக்கியாக ‘பிளாஸ்டிக்சைக்கிள்‘ ஊடாக செயற்படுகின்றது.
—————————————————————————————————————————-