பாரிஸ் 2024 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்கில் ரசிகர்களுக்குபுதிய அனுபவத்தை வழங்கத் தயாராகும் Samsung

Share with your friend

பாரிஸ் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டு விழாவின் உலகளாவிய பங்களாரான சாம்சங் எலெக்ட்ரோனிக்ஸ், தனது ‘Open always wins’ பிரச்சாரத்தை அண்மையில் உத்தியோகாப்பூர்வமாக ஆரம்பித்துள்ளது. அத்துடன், இம்முறை ஒலிம்பிக்கின் முக்கியத்துவத்தையும், சிறப்பையும் குறிக்கும் வகையில் பாரிஸில் Champs-Elysees 125 இல் Olympic™️ rendezvous என்ற காட்சியறை ஒன்றும் Samsung நிறுவனத்தினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு 100 நாட்கள் எஞ்சியிருக்கும் நிலையில், இம்முறை ஒலிம்பிக்கை இலக்காகக் கொண்டு ‘Open always wins’ பிரச்சாரத்தின் மூலம் Samsung மீதான நம்பிக்கையை நுகர்வோருக்குக் கொண்டு செல்வதில் அந்த நிறுவனம் வெற்றி பெற்றது. 

வீரர்கள் தங்கள் வலிமை மற்றும் திறமை மூலம் எப்படி வெற்றியைத் தொடர்கிறார்கள் என்பதை வெளிப்படுத்திய இந்த பிரச்சாரமானது, skateboarder Aurélien Giraud (பிரான்ஸ்), பாரா குறுந்தூர ஓட்ட வீரர் Johannes Floors (ஜெர்மனி) மற்றும் break-dancer Sarah Bee (பிரான்ஸ்) ஆகியோரை உள்ளடக்கிய Samsung Galaxy மெய்வல்லுனர் அணியிரால் ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக காண்பிக்கப்பட்டது.

‘பாரிஸ் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டு விழாவின் உலகளாவிய பங்காளராக, உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சுமார் 40 ஆண்டுகளாக புதுமையான தயாரிப்புகள், புதுமையான தொழில்நுட்பம் மற்றும் இணையற்ற அனுபவங்களை வழங்க முடிந்தது. விளையாட்டில் புதிய தொழில்நுட்பம் மற்றும் அனுபவங்களைப் பயன்படுத்துவதால் காலப்போக்கில் விளையாட்டை அனுபவிக்கும் விதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதை இன்னும் அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்கு பாரிஸ் 2024 ஒலிம்பிக்கின் புதிய அனுபவத்தை விளையாட்டு ரசிகர்களுக்கு எமது ‘Open always wins’ பிரச்சாரத்தின் மூலம் கொண்டு வருவதற்கு எதிர்பார்த்துள்ளோம் என Samsung Electronics இன் Mobile eXperience Business இன் பிரதானியும், தலைவருமான TM Roh தெரிவித்தார். 

பாரிஸ் ஒலிம்பிக்கிற்காக திறந்து வைக்கப்பட்ட Champs-Elysees 125 இல் உள்ள புதிய Olympic™️ rendezvous காட்சியறையின் மூலம் விளையாட்டு ரசிகர்களுக்கு AI அனுபவத்துடன் இதுவரை இல்லாத புத்தம்புதிய அனுபவத்தை வழங்க தயாராக உள்ளது. அத்துடன், Galaxy சாதனங்கள், புதிய அறிமுகங்கள் மற்றும் AI அனுபவங்களுடன், ஒலிம்பிக் போட்டிகளின் தனித்துவமான தருணங்களை அனைவரும் அனுபவிக்கும் வாய்ப்பையும் Samsung ஏற்பாடு செய்துள்ளது. அதுமாத்திரமின்றி, Pசவைணமநச விருது வென்ற கட்டிடக் கலைஞர் Pritzker இனால் வடிவமைக்கப்பட்ட இப்புதிய காட்சியறையின் மூலம் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் வீரர்களின் விளையாட்டு திறமைகளை வாடிக்கையாளர்களுக்கு வசதியான மற்றும் ஈர்க்கக்கூடிய வகையில் வழங்குவதற்கு Samsung நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

மே 03 ஆம் திகதி முதல் அக்டோபர் 31 ஆம் திகதி வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை, காலை 10 மணி முதல் மாலை வரை 8 வரை மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 8 மணி வரை Olympic™️ rendezvous காட்சியறை திறந்திருக்கும். ஒலிம்பிக் விளையாட்டு விழா நடைபெறுகின்ற காலப்பகுதியில் அனைத்து விளையாட்டு ரசிகர்களுக்கும் இந்த காட்சியறைக்குச் சென்று Samsung இன் அனுபவத்தை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

25 ஆண்டுகளுக்கு முன்பு நாகானோ 1998 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இருந்து ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் உலகளாவிய பங்குதாரராக Samsung நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. குறிப்பாக, கையடக்கத் தொலைபேசி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளையாட்டு ரசிகர்களின் நம்பிக்கையை வென்ற Samsung, ஒலிம்பிக் விளையாட்டு விழாவுடனான இந்த உறவை இன்னும் பல புதுமையான சிறப்புகளைச் சேர்த்து 2028 இல் நடைபெறவுள்ள லோஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் வரை நீட்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply