இலங்கையின் ஆடைத் துறையானது பெண்களை வலுவூட்டுவதில் ஒரு பலம் வாய்ந்த சக்தியாக உருவெடுத்துள்ளதுடன், இத்துறையில் பெண்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு பாராட்டத்தக்கது. இருப்பினும், பணியாளர்களில் 80% க்கும் அதிகமான பெண்கள் இருந்தாலும், மேற்பார்வை மற்றும் நிர்வாகப் பணிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது. இந்த ஏற்றத்தாழ்வுக்கு தீர்வுகாணும் வகையில், சர்வதேச நிதி நிறுவனம் (IFC) மற்றும் சர்வதேச தொழிலாளர் தாபனம்; (ILO) ஆகியவை பால்நிலை சமத்துவம் மற்றும் நன்மைகள் (GEAR) திட்டத்தைத் தொடங்குவதற்கு சிறந்த வேலை முயற்சியின் கீழ் ஒன்றிணைந்தன. பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை உயர்த்தும் நோக்கில், இந்த முன்னோடித் திட்டம் 10 ஆடைத் தொழிற்சாலைகளில் செயல்படுத்தப்பட்டு 106 நபர்கள்; பயனடைந்தனர்.
GEAR திட்டத்தை வெற்றிகரமாக முடித்ததைக் குறிக்கும் வகையில், Vogue Tex” Orit Apparels மற்றும் Hela Clothing வழங்கும் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களை அங்கீகரிக்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இலங்கையின் ஆடைத் தொழிலில் பெண்களை வலுவூட்டுவதற்கான ஒன்றிணைந்த சூழலை உருவாக்கி, படித்த மற்றும் புத்திசாலித்தனமான தலைமுறையை உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஒன்றிணைந்த கூட்டு ஆடைச் சங்கங்களின் மன்றம், இலங்கை முதலாளிமார் சம்மேளனம் மற்றும் முகாமைத்துவத்தில் பெண்கள் – Women in Management (இலங்கை மற்றும் மாலைதீவுகள்) ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்குபற்றினர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) தூதுக்குழுவின் கூட்டுத் தலைவர் Johann Hess, இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான GEAR திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இக்கூட்டத்தின் போது கருத்து தெரிவிக்கையில், “இந்தக் கோட்பாடுகள் மற்றும் கொள்கைகளை பணியிடத்தில் நடைமுறைப்படுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது. பங்கேற்பாளர்களின் சாதனைகள் எங்கள் கூட்டு முயற்சிகளின் நேர்மறையான தாக்கத்திற்கு ஒரு சான்றாகும் அமைவதோடு பிரகாசமான எதிர்காலத்திற்கான நம்பிக்கையை அளிக்கிறது.” என தெரிவித்தார்.
இதேவேளை, IFC இன் சிரேஷ்ட வதிவிட அதிகாரி விக்டர் என்டனிபிள்ளை ஆடைத் துறையின் முக்கியத்துவம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “உலகளவில் 19 மில்லியன் மக்கள் பணியாற்றும் 1.7 டிரில்லியன் அமெரிக்க டொலர் தொழில்துறையில், இவ்வளவு பெரிய திட்டத்தைத் ஆரம்பிப்பதற்கான காரணம் வெளிப்படையானது. மேலும், இலங்கையின் ஆடைத் துறையானது நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பாளராக விளங்குகிறது. IFC உலகளவில் உற்பத்தித் தொழிலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது, குறிப்பாக பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் பங்கேற்பின் அடிப்படையில் அதன் திறன்களை மேம்படுத்துவதற்கு நாங்கள் முழு மனதுடன் ஈடுபட்டுள்ளோம்.” என தெரிவித்தார்.
Better Work திட்டத்தின் பிரதானி கேசவ முரளி கணபதி, விருது பெற்றவர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, “GEAR என்பது ஒரு திட்டத்தை விட மேலானது, இது எதிர்காலத்தை மாற்றும் ஒரு மாற்றத்தக்க கற்றல் பாதையாகும். இது ஆரம்பம் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் பலவற்றை எதிர்பார்க்கிறோம். இந்தத் திட்டத்தை முடித்த சான்றிதழ் வைத்திருப்பவர்கள் இப்போது ஆடைத் துறையில் உண்மையான மாற்றத்திற்கான முகவர்களாக மாறத் தயாராக உள்ளனர். நாட்டின் மக்கள் தொகையில் 52% பெண்கள் இருந்தாலும், நிர்வாகப் பணித் துறைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதால், அதை அதிகரிப்பது மிகவும் அவசியம். இந்த திட்டம் அதற்கு ஒரு ஊக்கியாக உள்ளது, மேலும் அவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் முடிந்துள்ளது.” என தெரிவித்தார்.
GEAR திட்டம் ஆடைத் தொழிலாளர்களை அவர்களின் முன்னேற்றத்திற்கும் தலைமைப் பதவிகளில் வெற்றி பெறுவதற்கும் தேவையான தொழில்நுட்ப மற்றும் பிற திறன்களைக் கொண்டுள்ளது. இலக்கு பயிற்சி அமர்வுகள் மூலம், பங்கேற்பாளர்கள் கலாச்சார மற்றும் நிறுவன மாற்றத்தை வளர்ப்பதற்கும், பால்நிலை சமத்துவத்தை நிவர்த்தி செய்வதற்கும், பெண்களின் திறமைகளை அடையாளம் கண்டு, ஊக்குவித்து, தக்கவைத்துக்கொள்வதற்கும் முகாமையாளர்களுடன் ஈடுபட்டுள்ளனர். மேலும், பணியில் இருக்கும் நடைமுறை பயிற்சி மற்றும் பயிற்சி அமர்வுகள் மூலம் பயிற்சியாளர்களின் நம்பிக்கையை தலைவர்களாக வளர்ப்பதில் இத்திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்கள் தங்கள் திறமைகளை மிகவும் திறம்பட பயன்படுத்த முடியும் மற்றும் தொடர்ந்து மேம்படுத்த முடியும்.
இந்தத் திட்டத்தின் முடிவுகளை முன்வைத்து, IFCக்கான GEAR திட்டத்தின் தலைவரான திருமதி. Raquael Scarapi, ஆடைத் துறையில் தொழில்முறை முன்னேற்றத்தில் திட்ட முடிவுகள் ஏற்படுத்திய குறிப்பிடத்தக்க தாக்கத்தை வலியுறுத்தினார். வியட்நாம் மற்றும் பங்களாதேஷில் காணப்பட்ட வெற்றி விகிதத்தை விஞ்சி, இலங்கையில் செயற்பாட்டுத் திட்டத்தின் விதிவிலக்கான செயல்திறன் மற்றும் மாற்றத்தக்க முடிவுகளை அவர் எடுத்துரைத்தார். பங்கேற்பாளர்களில் 70% க்கும் அதிகமானோர் இயந்திர இயக்குனர்களின்; நிலையிலிருந்து மேற்பார்வை மற்றும் நிர்வாக நிலை பதவிகளுக்கு பதவி உயர்வு பெற முடிந்தது என்று அவர் கூறுகிறார்.
இந்த நிகழ்வின்போது இடம்பெற்ற கலந்துரையாடலில், அந்தந்த நிறுவனங்களின் பயிற்சியாளர்கள் மற்றும் தொழிற்சாலை முகாமையாளர்கள் GEAR திட்டத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்த முன்முயற்சியானது கற்றலுக்கான ஒரு முக்கிய வழி என்றும், தலைமைப் பதவிகளுக்கான பெண்களின் பயணத்தில் உள்ள தடைகளுக்கான தீர்வுகளைக் கண்டறிவதில் குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தப்பட்டது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். Better Work (BW) திட்டத்தின் படி, அக்டோபர் 2023 க்கு முன் மற்றொரு தொகுதி பயிற்சியாளர்களை அறிவாற்றலுடன் மேம்படுத்துவதற்கு அவர்கள் உறுதியளித்துள்ளனர்.