பீப்பள்ஸ் லீசிங்கிடமிருந்து வாடியா தங்கப் பாதுகாப்பு வசதி

Home » பீப்பள்ஸ் லீசிங்கிடமிருந்து வாடியா தங்கப் பாதுகாப்பு வசதி
Share with your friend

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் (பிஎல்சி) புத்தளம் அல்-சஃபா, பார்க் ஸ்ட்ரீட் அல்-சஃபா மற்றும் கண்டி அல்-சஃபா ஆகிய மூன்று கிளைகளில் வாடியா தங்கப் பாதுகாப்பு வசதி அலகுகள் திறக்கப்பட்டுள்ளன.  

பிஎல்சியின் வாடியா தங்கப் பாதுகாப்பு வசதி என்பது பாரம்பரிய தங்கக் கடனுக்கு மாற்றாகவும், பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் மக்களுக்கு அவர்களுக்கு தேவைப்படும் நேரங்களில் இலகுவான தீர்வாகவும் காணப்படுகின்றது. பிஎல்சி வாடியா தங்கப் பாதுகாப்பு வசதி வாடிக்கையாளர்களுக்கு அவசரகால பணத் தேவைகளுக்காக வட்டியில்லா கடனைப் பெறுவதற்கான வசதியை வழங்குகிறது.

பிஎல்சி வாடியா தங்கப் பாதுகாப்பு வசதியானது, முதலில் நாடளாவிய ரீதியில் இயங்கும் 75 தங்கக் கடன் கிளைகளில் கிடைப்பதோடு, வாடிக்கையாளர்களின் வசதி கருதி பெப்ரவரி 2023 இறுதிக்குள் எஞ்சியுள்ள 4 இஸ்லாமிய கிளைகளிலும் இந்த வசதியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பீப்பள்ஸ் லீசிங் பினான்ஸ் பிஎல்சி என்பது இலங்கையின் முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனம் என்பதோடு நாட்டின் மிகப்பெரிய அரச வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகும். பிஎல்சியின் செயற்பாடுகள் 1996இல் ஆரம்பமாகின. பீப்பள்ஸ் லீசிங் 2011இல் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. பீப்பள்ஸ் லீசிங்கானது பங்களாதேஷில்  ஒரு வெளிநாட்டு முயற்சி உள்ளிட்ட ஆறு துணை நிறுவனங்களுடன் பல்வகைப்பட்ட வங்கி அல்லாத நிதி அதிகார மையமாக வளர்ந்துள்ளது.


Share with your friend

Leave a Reply

%d