பெருநிறுவனப் பகுப்பாய்வில் புதிய தலைமுறை கல்வியலாளர்களை வெளிக்கொண்டுவந்த SLIIT பிஸ்னஸ் ஸ்கூல் மாணவர் ஆய்வு மாநாடு

Share with your friend

பெருநிறுவன கலாசாரத்தை முன்கொண்டு செல்வதற்கு உருவாகிவரும் புதிய தலைமுறையை வெளிப்படுத்துவதற்காக, மாணவர் சமூகத்துடன் இணைந்து SLIIT பிஸ்னஸ் ஸ்கூல் நடத்திய 14வது SLIIT பிஸ்னஸ் ஸ்கூல் மாணவர் ஆய்வு மாநாடு கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. 

கல்வி தொடர்பான ஆய்வுகளில் மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிப்பது மற்றும் ஆய்வுகளை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிப்பதே இந்த வருடாந்த மாநாட்டை ஏற்பாடு செய்வதன் நோக்கமாகும். இலங்கையில் உள்ள வணிக ஆய்வில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் இந்நிகழ்வு பகிரங்கமானதாகும். இலங்கையில் உள்ள ஏனைய உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர்களுடன் புலமைப் பணிகளை வெளிக்கொணரவும் கலந்துரையாடல்கள் மற்றும் பல்துறை ஆராய்ச்சி தலைப்புகளில் பங்குபற்றவும் மாணவர்களுக்கு சிறந்த தளமாக இந்த மாநாடு அமைந்தது. இலங்கையில் உள்ள ஏனைய உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர்களுடன் புலமைப் பணிகளை வெளிக்கொணரவும், கலந்துரையாடல்கள் மற்றும் பல்துறை ஆராய்ச்சி தலைப்புகளில் பங்குபற்றவும் மாணவர்களுக்கு சிறந்த தளமாக இந்த மாநாடு அமைந்தது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகப் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி.ஹர்ஷ.டி.சில்வா கலந்துகொண்டார். அமர்வில் ஜோர்ஸ் ஸ்டுவேர்ட் குழுமத்தின் தலைவர் டிலித் ஜயவீர, ஸ்பெரா லப்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி சஹான் யாபா ஆகியோர் பிரதான உரைகளை நிகழ்த்தியிருந்தனர். RHODA பிரதம நிறைவேற்று அதிகாரி எயாஸ் ஃபசூல், செரன்டீப் மியூசிக் குழுவின் தலைவர் சந்துன் விஜேமான்ன ஆகியோர் குழுக் கலந்துரையாடலில் கலந்துகொண்டதுடன், SBSSC இன் தலைவர் ரொசான சில்வா நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். ‘நாளைய அதிபர்கள்’ என்ற கருப்பொருளின் கீழ் சிந்தனையைத் தூண்டும் காலை அமர்வுகள் நடைபெற்றன.  

பிற்பகல் அமர்வில் மலேசியா மொனாஷ் பல்கலைக்கழகத்தின் வர்த்தகத் திணைக்களத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அவ் வீ சாங், இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமான ‘தொற்றுநோய் சூழலில் பணிக்கால வாழ்க்கைச் சமநிலை’ என்ற தொனிப்பொருளில் பிரதான உரையை நிகழ்த்தினார்.

இலங்கையின் தேசிய பல்கலைக்கழகங்களைச் சார்ந்த சிரேஷ்ட கல்வியியலாளர்கள் தலைமைதாங்கிய பங்கேற்பாளர்கள் சமர்ப்பித்த ஐந்து மாநாட்டு தடங்கள் அன்றைய நாளின் சிறப்பம்சமாகும்.

SLIIT இன் முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பேராசிரியர் லலித் கமகே, SLIIT இன் தலைவர் பேராசிரியர் லக்ஷ்மன் ரத்னாயக, கல்விப் பிரிவின் பிரதித் துணைவேந்தர் பேராசிரியர் நிமல் ராஜபக்ஷ, பிஸ்னஸ் ஸ்கூல் பீடாதிபதி பேராசிரியர் சமந்த தெலிஜ்ஜகொட மற்றும் இன் சிரேஷ்ட பணியாளர்கள், 600ற்கும் அதிகமான மாணவர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர். 

மாநாட்டுத் தலைவராக திருமதி உதனி சமரசிங்க, மாநாட்டு இணைத் தலைவர்களான அனுபமா திஸாநாயக்க மற்றும் நடுனி மாதாவிகா ஆகியோர் இதனை மறக்க முடியாத நிகழ்வாக ஏற்பாடு செய்திருந்தனர். SBSSRC செயலாளர் நில்மினி ரத்நாயக்க அவர்களின் நன்றியுரையுடன் அன்றைய நிகழ்வுகள் நிறைவுற்றன.


Share with your friend