மஹரகம ஹைலன்ட்ஸ் கல்லூரியில் நடைபெற்ற ‘ட்ரைவ் த்ரூ’ ஸ்கிலோ களேர்ஸ் சாதனையாளர் தினத்தில் பங்காளராக இணைந்த CBL Nutriline

Share with your friend

கலை, ஆக்கத்திறன், விளையாட்டு, பேச்சு மற்றும் எழுத்துப் போன்ற மென்திறன் துறைகளில் பாடசாலை மாணவர்களிடமிருந்து கிடைத்த விண்ணப்பங்களிலிருந்து திறமையான 165 பேரை அங்கீகரிக்கும் வகையில் ஹைலன்ட்ஸ் கல்லூரியின் சாதனையாளர் தின – ‘ஸ்கிலோ களேர்ஸ்’ (Skillo Colours) நிகழ்வுக்கு CBL Nutriline ஆதரவு வழங்கியிருந்தது. அர்ப்பணிப்பு, ஈடுபாடு மற்றும் குழுப்பணி ஆகியவற்றின் மூலம் வெற்றிபெற வேண்டும் என்ற உணர்வை நிலைநாட்டுவதற்காக 1500 மாணவர்கள் பங்கேற்ற போட்டியாக இந்த நிகழ்வு வடிவமைக்கப்பட்டிருந்தது.

எமது எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கியத்துக்கு ஒத்துழைப்பு வழங்க போசனை குறித்த உற்பத்திகளில் கவனம் செலுத்துவதன் ஊடாக சிறுவர்களின் ஊட்டச்சத்தை அதிகரிப்பதில் CBL Nutriline சிறந்து விளங்குகிறது. இது தனது புத்தாக்கமான தயாரிப்புக்களின் மூலம் சிறுவர்களின் போசாக்கை ஊக்கப்படுத்துகிறது. கற்றல், விளையாட்டு, நல்ல மதிப்புகள் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில், இந்தச் செயற்பாடுகளுடன் நேர்மறையான தொடர்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புக்களை வழங்கும் வகையில் ‘பொடி வட்டன்ட’ பிரசாரம் அமைந்துள்ளது.

சிறார்களின் திறன்களைக் கண்டறிந்து அவற்றை அங்கீகரிப்பது மிகவும் முக்கியமானது என மஹரகம, ஹைலன்ட்ஸ் கல்லூரியின் அதிபர் திருமதி. டி.எஸ்.எம்.டி.அபேசேகர தெரிவித்தார். அவர்கள் தமது முழுமையான திறனையும் அடைவதற்கு இது நம்பிக்கையையும், ஊக்குவிப்பையும் வழங்குகிறது. CBL Nutriline இன் விஸ்தரிக்கப்பட்ட ஆதரவுடன் தனது நோக்கத்தை முழுமையாக அடைய ஸ்கிலோ களேர்ஸ் சாதனையாளர் தினம் விரும்பியது. ஏனைய கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் அதேநேரம், மஹரகம ஹைலன்ட்ஸ் கல்லூரி மாணவர்களுக்குத் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க நாம் எண்ணியுள்ளோம்” என்றார்.

“இலங்கையில் உள்ள சிறுவர்களின் திறன்களை வளர்ப்பது, ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றை அதிகரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதை  ஊக்குவிக்க ஒத்துழைப்பு வழங்குவதுமே CBL Nutriline ‘பொடி வட்டன்ட’ பிரசாரத்தின் நோக்கமாகும். இந்த மாணவர்களின் திறமைகளை அங்கீகரிப்பதற்கும், அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் மஹரகம, ஹைலன்ட்ஸ் கல்லூரியுடன் கூட்டாண்மையை ஏற்படுத்தியமையை இட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்” என உணவுக் கொத்தணியின் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் ஜயங்க பெரேரா தெரிவித்தார்.

உள்நாட்டு விவசாயிகளின் கூட்டாண்மையுடன் நவீன தொழில்நுட்பத்தில் சர்வதேச தரத்தில் உற்பத்தி செய்யப்படும் பல்தானியங்களைக் கொண்ட காலை உணவு சீரியல்கள், செயற்கை சுவையூட்டிகள் மற்றும் பதப்படுத்தல்கள் இன்றித் தயாரிக்கப்படுகின்றன. Choco Chips, Choco Blobs, Choco Grains, Honey Bee, Lemon Crunch மற்றும் Grain berry ஆகிய ஆறு வித்தியாசமான சுவைகளைக் கொண்டதாக CBL Nutriline அமைந்துள்ளது. 
CBL குழுமத்தின் உறுப்பு நிறுவனமான Convenience Foods (Lanka) PLC இனால் CBL Nutriline இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகிறது.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply