உப தலைப்பு : இந்த கிரிகெட் பருவகாலத்தில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கிரிகெட் வீரர்களான பானுக ராஜபக்ஷ, பங்களாதேஷின் வேகப்பந்து வீச்சாளர் டஸ்கின் அஹமட், அனைவராலும் எப்பொழுதும் விரும்பப்படும் முன்னாள் கிரிகெட் வீரரும், பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளருமான லசித் மலிங்க ஆகியோரை Viber இன் தனித்துவமான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து இந்தப் பருவ காலத்தைக் கொண்டாடுவதற்கு பர்வீஸ் மஹரூப் மற்றும் அரிப் ரோனி Rakuten Viber உடன் அணி சேர்ந்துள்ளனர்.
![](https://eyeviewsl.com/wp-content/uploads/2022/06/Viber-Cricket-Talks.jpg)
Rakuten Viber ஆனது தனது பிரபலமான குறுஞ்செய்தித் தளத்தில் சிறந்த செயற்பாடுகள் மற்றும் அற்புதமான அம்சங்களை அறிமுகப்படுத்தி தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த கிரிகெட் பருவகாலத்தின் அனுபவத்தை சிறப்புறச் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த வருடத்தில் கொண்டாடப்பட்ட Cricket Fiesta இன் தொடர்சியாக ஈடுபாட்டை அதிகரிப்பதன் ஊடாக கிரிகெட் விளையாட்டை விரும்பும் ரசிகர்களின் ஆர்வத்தை Viber தொடர்ந்தும் மேம்படுத்திவருகிறது. எனவே, கிரிகெட் போட்டிகள் குறித்த செய்திகள் மற்றும் தகவல்கள் மாத்திரமன்றி உங்களுக்குப் பிடித்தமான கிரிகெட் வீரர்களிடமிருந்து நேரடியான விடயங்களைப் பெற்றுக் கொள்ளத் தனித்துவமான அணுகலைக் கொண்ட Cricket Vibes சனல் ஊடாக முன்னெப்போதும் இல்லாதளவு அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளத் தயாராக இருங்கள்.
முன்னாள் இலங்கை கிரிகெட் வீரரும், வர்ணனையாளருமான பர்வேஸ் மஹரூப் மற்றும் பங்களாதேஷின் விளையாட்டுத்துறை ஊடகவியலாளர் அரிப் ரொனி ஆகியோர் இணைந்து Cricket Vibes சனலில் இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை நடத்தும் தனித்துவமான கிரிகெட் கலந்துரையாடல் நிகழ்ச்சி உள்ளிட்டவை இம்முறை விசேட அம்சங்களாக உள்ளடங்கியுள்ளன. இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கிரிகெட் வீரர்களான பானுக ராஜபக்ஷ, பங்களாதேஷின் வேகப்பந்து வீச்சாளர் டஸ்கின் அஹமட், அனைவராலும் எப்பொழுதும் விரும்பப்படும் முன்னாள் கிரிகெட் வீரரும், பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளருமான லசித் மலிங்க ஆகியோர் விசேட விருந்தினர்களாகக் கலந்துகொள்ளவுள்ளிமை தனித்துவமானதாகும். அண்மைய கிரிகெட் போட்டிகள், சுற்றுப் போட்டிகள் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு அதிகமானவர்களால் விரும்பப்படும் இலங்கை, பங்களாதேஷ் வீரர்கள் விசேட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார்கள்.
“Viber இல் உள்ள கிரிகெட் ஆர்வலர்களின் விருப்புக்கள் மற்றும் வெறுப்புக்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்கு கடந்த வருட Viber Cricket Fiesta மிகவும் உதவியாக அமைந்தது. எமது தெற்காசிய ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் விளையாட்டின் ஆர்வத்தை நாம் மீண்டும் ஒருமுறை தூண்டிவிட்டுள்ளோம். AR ஐ கொண்ட Viber Lenses, மிகவும் விரும்பப்படும் கிரிகெட் வீரர்களுடன் வாடிக்கையாளர்கள் நிகழ்நேரத்தில் ஈடுபாடுகளை வெளிப்படுத்தக் கூடிய Viber சனல், தனித்துவமான பரிசுகள் மற்றும் மிகவும் பொழுதுபோக்கு நிறைந்த அனுபவம் என்பவற்றை நாம் மீண்டும் கொண்டுவந்துள்ளோம்” என Rakuten Viber இன் சிரேஷ்ட பணிப்பாளர் டேவிட் ரிசே தெரிவித்தார்.
நடைபெறவிருக்கும் போட்டிகள் பற்றிய தகவல்கள், நடைபெறும் போட்டிகளின் ஓட்டங்கள் குறித்த செய்திகள், போட்டி முடிவுகள் பற்றி ஊகிக்கும் வாய்ப்புக்களை Cricket Vibes சனல் வழங்குவதுடன், வேடிக்கையான விடயங்கள், பகிரக்கூடிய மிமீஸ் உள்ளிட்ட மேலும் பல்வேறு சம்வங்களுடன் பரந்தளவிலான பரிசுகளை வெல்லும் வாய்ப்புக்களும் காணப்படுகின்றன. விவாதங்கள் முடிவற்றவை, இந்திய லீக்கின் ஆரவாரம் குறைவதற்கு முன்பே கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான எதிர்பார்ப்பு ஏற்கனவே உருவாகி வருகிறது! உற்சாகம் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், பிந்திய தகவல்களைப் பெற விரும்பும் ரசிகர்களாக இருந்தால் இந்தக் கிரிகெட் பருவகாலத்தில் தவறவிடாத ஒன்றாக Cricket Vibes சனல் அமையும்.
பிரபலமான குறுஞ்செய்தித் தகவல் தளத்தில் அதன் வாடிக்கையாளர்களின் அனுபவத்தை உயர்ந்த நிலையில் வைத்திருப்பதே பல ஆண்டுகளாக Viber பின்பற்றிவரும் தனித்துவமான விடயமாகும். ஒவ்வொரு குறிப்பிடத்தக்க சந்தர்ப்பத்திலும் தனிப்பட்ட பயன்பாட்டுக்கு ஏற்ற வகையிலான ஸ்டிக்கர்களை உருவாக்குவது முதல் AR உடனான லென்ஸ்கள் மூலம் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பது வரையிலான அம்சங்களை வழங்குவதுடன், கால்பந்து வீரர்கள், டென்னிஸ் வீரர்கள் அல்லது பிற விளையாட்டுப் பிரமுகர்களை அவர்களுக்கு மிகவும் பிடித்தமான ரசிகர்களுடன் நெருக்கமான தொடர்புகளை மேற்கொள்ளும் வாய்ப்புக்களை வழங்குதிலும் கவனம் செலுத்துகிறது. Viber எப்பொழுதும் தனது வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்குவதில் அக்கறை காண்பித்து வருகிறது.
எனவே, தெற்காசியாவில் அதிகம் பின்பற்றப்படும் மற்றும் பிரபலமான விளையாட்டான கிரிக்கெட்டை Cricket Vibes சனல் ஊடாக இந்தப் பருவகாலத்தில் உங்களுக்குப் பிடித்தமான குறுஞ்செய்தித் தளத்தில் நம்பமுடியாத அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்.
Rakuten Viber பற்றி :
Rakuten Viber நாங்கள் மக்களை இணைக்கிறோம். அவர்கள் யார், அல்லது அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது முக்கியமல்ல. எங்கள் உலகளாவிய பயனர் தளம் ஒருவருக்கொருவர் அரட்டைகள், வீடியோ அழைப்புகள், குழு செய்தி அனுப்புதல் மற்றும் அவர்களுக்கு பிடித்த வர்த்தகநாமங்கள் மற்றும் பிரபலங்களுடன் புதுப்பிப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் போன்ற பல அம்சங்களுக்கான அணுகலைக் கொண்டுள்ளது. எங்கள் பயனர்களின் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ள பாதுகாப்பான மற்றும் இலவச சூழல் இருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம்.
Rakuten Viber, Rakuten Inc இன் ஒரு பகுதியாகும். ஈ-வர்த்தகம் மற்றும் நிதிச் சேவையில் உலகின் முன்னணியாளராகும். இது FC Barcelona வின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு சனல் என்பதுடன் Golden State Warriors அதிகாரப்பூர்வ உடனடி செய்தி மற்றும் அழைப்பு பயன்பாட்டுப் பங்காளராகும்.
மேலதிக தகவல்களைப் பெற lana@viber.com இன் ஊடாக எம்மைத் தொடர்புகொள்ளவும்.