மேம்பட்ட CT Simulator மூலம் புற்றுநோய் சிகிச்சை தரத்தை உயர்த்த ஒன்றிணையும் DIMO Healthcare மற்றும் Siemens Healthineers

Share with your friend

இலங்கையின் முன்னணியில் உள்ள பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான DIMO நிறுவனத்தின் சுகாதாரப் பிரிவான DIMO Healthcare மற்றும் Simens Healthineers ஆகியன இலங்கையில் புற்றுநோய் சிகிச்சையை மேலும் மேம்படுத்துவதற்கான தங்கள் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன. AI தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் சமீபத்திய Siemens CT Simulator உபகரணமான SOMATOM go.Sim அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் இது நிலைநாட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் புற்றுநோய் சிகிச்சைத் துறையில் பாரிய முன்னேற்றத்தை பதிவு செய்யும் வகையில், தனியார் துறை புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சையின் முன்னோடி மையமான செலிங்கோ புற்றுநோய் மையத்தில் இந்த அதிநவீன CT Simulator நிறுவப்பட்டுள்ளது. செலிங்கோ புற்றுநோய் மையமானது 2007 ஆம் ஆண்டு DIMO Healthcare நிறுவனத்துடன் இணைந்து கதிரியக்க சிகிச்சைப் பிரிவை நிறுவியது. அப்போதிருந்து, DIMO Healthcare நிறுவனத்தின் ஒப்பிட முடியாத விற்பனைக்குப் பிந்தைய சேவையானது இந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளதோடு, செலிங்கோ புற்றுநோய் மையத்தில் சமீபத்திய CT Simulator இயந்திரத்தை நிறுவுவதற்கு DIMO Healthcare நிறுவனத்தை தெரிவு செய்வதற்கான முக்கிய காரணியாக இது அமைந்தது.

SOMATOM go.Sim ஆனது ஒரு ஒருங்கிணைந்த மென்பொருள் மற்றும் வன்பொருள் தீர்வாகும். SOMATOM go.Sim மிகவும் சிறந்த தரத்திலான புகைப்படங்களை வழங்குவதோடு, AI தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதன் மூலம், சரியான சிகிச்சை முறைகளைத் திட்டமிடுவதற்கும், தொடக்கத்திலேயே சிக்கல்களை கண்டறிந்து நீக்கவும் உதவுகின்றது.

இந்த Siemens Healthineers SOMATOM go.Sim CT Simulator ஆனது, நோயாளியின் உடலின் விரிவான 3D புகைப்படங்களை எடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளை துல்லியமாக அடையாளம் காண மருத்துவர்களுக்கு உதவுகிறது. பின்னர் சிகிச்சைக்கு இந்த புகைப்படங்கள் பயன்படுத்தப்படுவதோடு, Varian Clinac iX  Linac இன் கதிர்வீச்சு மூலம் ஆரோக்கியமான திசுக்களிடையே காணப்படும் புற்றுநோய் திசுக்களை அதிக துல்லியத்துடன் அடையாளப்படுத்துகிறது. இங்குள்ள dual-energy imaging அம்சம் மூலம், சிக்கலான சந்தர்ப்பங்களின் போதான சிகிச்சையைத் திட்டமிடுவதில் இன்றியமையாத, பல்வேறு திசு வகைகளை சிறப்பாக வேறுபடுத்தி அறிய மருத்துவர்களுக்கு உதவுகிறது. நோயாளி தொடர்பான கட்டமைப்பு ரீதியான மற்றும் விரிவான முப்பரிமாண புகைப்படங்கள் மற்றும் காட்சிப்படுத்தல்களைப் பெற Cinematic Rendering அம்சம் பெரும் உதவியாக உள்ளது.

மேம்பட்ட AI தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் தன்னியக்க கருவிகளுடன் பொருத்தப்பட்டிருக்கும் SOMATOM go.Sim CT Simulator ஆனது, புகைப்படம் எடுத்தல் மற்றும் சிகிச்சை திட்டமிடுதல் தொடர்பான மருத்துவர்களின் பணிச்சுமையை தொடர்பில் சிறப்பான உதவியை வழங்குவதோடு, அதிக துல்லியத்தையும் உறுதி செய்கிறது.

SOMATOM go.Sim CT Simulator ஆனது நோயாளியின் சுகவாழ்வில் வலுவான கவனம் செலுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, ALARA அடிப்படைக் கொள்கைகளின்படி நோயாளிகள் உரிய கதிர்வீச்சு அளவுகளுக்கு அதிகமாக வெளிப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது. அத்துடன், இந்த CT Simulator ஆனது சிறுவர் நோயாளிகளுக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்களின் எடை மற்றும் வயதுக்கு ஏற்ப சிகிச்சையை மாற்றியமைக்கவும் அதிகப்படியான கதிர்வீச்சு செல்வதை கணிசமாக குறைக்கவும் உதவுகின்றது.

AI அடிப்படையிலான myExam Companion உதவியாள்கை மூலம் ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்ற வகையில், உயர் செயற்றிறனை வழங்குவதன் ஊடாக ஸ்கேன் செய்யும் செயன்முறை மூலம், உபகரணத்தை செயற்படுத்துபவருக்கு வழிகாட்டுகிறது. அதன் மூலம் மீண்டும் மீண்டும் ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியத்தை வெகுவாகக் குறைக்கிறது. iMAR மற்றும் SAFFIRE போன்ற விசேட மென்பொருள்கள் மூலம், மீளமைக்கப்பட்ட புகைப்படங்களில் metal artifacts மற்றும் electronic noise ஆகியவற்றைக் குறைப்பதோடு, அதன் மூலம் பெறப்படும் உயர்தர புகைப்படங்களை, பயனுள்ள கதிரியக்க சிகிச்சைத் திட்டங்களுக்கு பயன்படுத்துவதற்கன சிறந்த சேவையை வழங்குகிறது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் DIMO Healthcare பிரிவின் தலைவருமான விஜித் புஷ்பவெல, “தற்போது தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மூலம் மக்களின் வாழ்வில் பெரும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த முடிந்துள்ளது. DIMO Healthcare எனும் வகையில், சுகாதாரத் துறையின் முக்கியமான பகுதியான புற்றுநோய் முகாமைத்துவத்திற்கு நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு வர நாம் உறுதிபூண்டுள்ளோம். புற்றுநோய்த் துறையில் தற்போது காணப்படும் புகைப்படவியலின் தரத்தை அதிகரிப்பதற்காக நாம் கொண்டுள்ள உறுதிப்பாட்டிற்கு ஒரு சிறந்த சான்றாக இந்த Siemens Healthineers SOMATOM go.Sim CT Simulator விளங்குகின்றது. Siemens Healthineers உடன் இணைந்து, ஆரோக்கியமான தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான இலங்கையர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளுக்கு வலுவூட்டக்கூடிய வெற்றிகரமான மற்றும் இலக்குடன் கூடிய வைத்திய சிகிச்சைகளை வழங்குவதே எமது நோக்கமாகும்.” என்றார்.

DIMO Healthcare இன் மருத்துவ பொறியியல் நிபுணத்துவம் மற்றும் அதிநவீன தொழில்நுட்பம், நீண்டகால நம்பகமான சேவை மற்றும் பராமரிப்பு ஆகியவற்றுடன், நாட்டின் மருத்துவத் துறையை நவீன புற்றுநோய் சிகிச்சை நுட்பங்களுடன் வலுவூட்டியுள்ளது. ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிய இலங்கையின் பயணத்தில் ஒரு முக்கியமான படியை Siemens Healthineers SOMATOM go.Sim CT Simulator உபகரணம் பிரதிபலிக்கிறது.


Share with your friend