யூனியன் அஷ்யூரன்ஸ் அரையாண்டு விருதுகள் வழங்கும் நிகழ்வில் சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு கௌரவிப்பு

Home » யூனியன் அஷ்யூரன்ஸ் அரையாண்டு விருதுகள் வழங்கும் நிகழ்வில் சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு கௌரவிப்பு
Share with your friend

யூனியன் அஷ்யூரன்ஸ், தனது சிறந்த சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில், 2021 அரையாண்டு விருதுகள் வழங்கும் நிகழ்வை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வின் போது முகவர் செயலணி, பாங்கசூரன்ஸ் மற்றும் கூட்டாண்மை விற்பனை பிரிவுகளைச் சேர்ந்த 300க்கும் அதிகமான ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்து விருதுகளை வெற்றியீட்டியருந்தவர்களுக்கு யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் வாழ்த்துகளை தெரிவித்தார். “2021 ஆம் ஆண்டு சவால்கள் நிறைந்த ஆண்டாக அமைந்திருந்த நிலையில், அவர்களின் சாதனைகள் உண்மையில் பாராட்டத்தக்கது.” என அவர் குறிப்பிட்டார்.

ஜுட் குறிப்பிட்டதன் பிரகாரம், அணியினர் தொடர்ந்தும் உயர்ந்த நிலையை எய்துவதற்கு முயற்சி செய்வதுடன், அதன் போது இலங்கையில் ஆயுள் காப்புறுதித் துறையில் அதிகளவு ஈடுபாட்டையும் ஏற்படுத்துகின்றது.     

தொழில்நிலை முன்னேற்றத்துக்காக சிறந்த பயிற்சிகள் மற்றும் நிபுணத்துவ விருத்தியை வழங்குவதில் யூனியன் அஷ்யூரன்ஸ் கவனம் செலுத்துகின்றது. அணி அங்கத்தவர்களுக்கு அதிகளவு வெகுமதிகள் வழங்கப்படுவதுடன், உயர்ந்த வாடிக்கையாளர் சேவையை பெற்றுக் கொடுப்பதற்காக ஊக்குவிக்கப்படுகின்றனர்.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம விநியோக அதிகாரி செனத் ஜயதிலக கருத்துத் தெரிவிக்கையில், சிறந்த சாதனையாளர்கள் வெற்றிகரமாக இயங்குவதற்கு அவர்களின் நிபுணத்துவம் மற்றும் சேவைச் சிறப்பு போன்றன முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன.

அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாடு உண்மையில் பாராட்டுதலுக்குரியது. எமது அணி தொடர்பில் நான் அதிகம் பெருமை கொள்கின்றேன். கடின உழைப்பு மற்றும் பின்தொடர்கை போன்றன வெற்றியின் அடையாளங்களாக அமைந்துள்ளன என்பதை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.” என்றார்.

வெண்கலம், வெள்ளி, தங்கம், டயமன்ட் மற்றும் பிளாட்டினம் என ஐந்து பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. FYPN (First Year Premium New), NOP (Number of Policies), Premium Persistency மற்றும் தலைவர் பிரிவுகளில் வருடாந்த விருது வெற்றியாளர் தயாரிப்பு போன்றவற்றில் வெற்றியாளர்களின் வினைத்திறனின் பிரகாரம் அவர்கள் வகைப்படுத்தப்பட்டிருந்தனர். மெய்நிகர் நிகழ்வாக இடம்பெற்ற இந்த வைபவத்தில், இசைக் கலைஞரான ஃபலன் அன்ட்ரியாவின் நேரலை இசை நிகழ்வும் இடம்பெற்றது.

ஒவ்வொரு வலயத்திலிருந்தும் அதியுயர் ANBP (Annualized New Business Premium) சாதனையாளர்கள் வலயத்தின் புதிய வியாபார சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர். யூனியன் அஷ்யூரன்ஸின் சகல ஆயுள் காப்புறுதி ஆலோசகர்கள் மத்தியிலிருந்தும் புதிய வியாபார சாதனைக்கு பங்களிப்பு வழங்கியிருந்தவர்களிலிருந்து தேசிய புதிய வியாபார சம்பியன்  தெரிவு செய்யப்பட்டிருந்தார். சிலாபம் பிராந்தியத்தைச் சேர்ந்த சானக அப்புஹாமி வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். Sprinter விருதுகளில் இரு பிரிவுகள் அடங்கியிருந்தன – வேகமாக வளர்ந்து வரும் அலகுகள் மற்றும் அணிக் கட்டியெழுப்புனர். சிறந்த வலயத்துக்கான விருது ஜா-எல வலயத்துக்கு வழங்கப்பட்டதுடன், சிறந்த பிராந்தியத்துக்கான விருது, வட பிராந்தியத்துக்கு வழங்கப்பட்டிருந்தது.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 15.9 பில்லியனைக் கொண்டுள்ளது. ஆயுள் நிதியமாக ரூ. 47.5 பில்லியனையும், 2021 செப்டெம்பர் மாதமளவில் மூலதன போதுமை விகிதமாக (CAR) 250% ஐக் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளதுடன், மாற்றமடைந்து வரும் ஆயுள் காப்புறுதித் துறையில் கவனம் செலுத்துகின்றது.


Share with your friend

Leave a Reply

%d