யூனியன் அஷ்யூரன்ஸ் தனது பரிபூரண ஆரோக்கிய காப்புறுதித் தீர்வான ஹெல்த் 360க்கு உயர் கௌரவிப்பை வென்றுள்ளது

Share with your friend

தனது துறைசார் சிறப்பை மேலும் மேம்படுத்தும் வகையில், யூனியன் அஷ்யூரன்சுக்கு அதன் பரிபூரண ஆரோக்கிய காப்புறுதித் தீர்வான – ஹெல்த் 360க்கு உயர் கௌரவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விருதுகளை சுவீகரித்துள்ளமையினூடாக, துறையில் புத்தாக்கமான செயற்பாட்டாளராகத் திகழ்ந்து, தயாரிப்பு தரத்தை மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கு நிறுவனம் ஆற்றும் பங்களிப்பு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹெல்த் 360க்காக யூனியன் அஷ்யூரன்ஸ் வெற்றியீட்டியிருந்த விருதுகளில் காப்புறுதி அலேர்ட்ஸ் சிறப்பு விருதுகள் 2021 இல் வழங்கப்பட்டிருந்த, இலங்கையின் சிறந்த ஆரோக்கிய காப்புறுதித் திட்டத்துக்கான விருது மற்றும் காப்புறுதி ஆசியா விருதுகள் 2021 இன் போது ஆண்டின் சிறந்த ஆரோக்கிய காப்புறுதி நடவடிக்கைக்கான விருதும் அடங்கியிருந்தது.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், மிகவும் புத்தாக்கமான ஆரோக்கிய காப்புறுதித் தீர்வுகளை வழங்கும் வகையில் நாம் வகுத்திருந்த தந்திரோபாயத்துக்கு கிடைத்த கௌரவிப்பாக இந்த விருதுகள் அமைந்துள்ளன. ஹெல்த் 360 முக்கியத்துவம் வாய்ந்த தீர்வாக அமைந்திருப்பதுடன், குடும்பத்தின் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்தவர்களுக்கு பரிபூரண காப்புறுதியை வழங்குவதுடன், காப்புறுதிதாரரின் வாழ்க்கைத்துணை, பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களையும் பாதுகாப்பதாக அமைந்துள்ளது.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அதிகரித்துச் செல்லும் ஆரோக்கியப் பராமரிப்பு செலவுகளை இலகுவாக நிர்வகித்துக் கொள்ள உதவும் வகையிலமைந்த இந்த தீர்வுக்காக இரு பெருமைக்குரிய விருதுகள் வழங்கும் அமைப்புகளால் வழங்கப்பட்டுள்ள இந்த இரு விருதுகளினூடாக, நிறுவனத்தின் அர்ப்பணிப்பு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹெல்த் 360 இனால் காப்புறுதிதார்களுக்கும் அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் கட்டணங்கள் பற்றிய கவலையின்றி சிறந்த சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த நெருக்கடியான காலப்பகுதியில் ஆரோக்கியம் மற்றும் நலனை உறுதி செய்யும் தூர நோக்குடைய பாதுகாப்பு வலையாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது. எனக்கூறினார்.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம தொழில்நுட்ப அதிகாரி ருமேஷ் மோதரகே கருத்துத் தெரிவிக்கையில், “ஹெல்த் 360 என்பது பிரத்தியேகமான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காப்புறுதிதாரரின் வாழ்க்கைத் துணை, பிள்ளைகள் மற்றும் பெற்றோர்கள் என மூன்று தலைமுறைக்கு வரப்பிரசாதங்களை வழங்குவதாக அமைந்துள்ளது. இவ்வாறு வழங்கப்படும் வரப்பிரசாதங்களில் வைத்தியசாலைக் கட்டணங்கள், சத்திரசிகிச்சை, பல்சிகிச்சை மற்றும் மூக்குக் கண்ணாடி சார் சேவைகள், மருந்துவ சிகிச்சைகள் மற்றும் குழந்தைப் பேறு சேவைகள் போன்றன அடங்கியுள்ளன.” என்றார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “அதிகரித்துச் செல்லும் ஆரோக்கிய பராமரிப்பு செலவுகளை வாடிக்கையாளர்கள் நிர்வாகித்துக் கொள்ளும் வகையில் ஹெல்த் 360 அமைந்துள்ளது. ஹெல்த் 360 தீர்வுடன், வாடிக்கையாளர்களுக்கு தற்போது சிறந்த சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதுடன், செலவுகள் பற்றிய கவலை கொள்ள வேண்டியதில்லை.” என்றார்.

இலங்கையின் பல்வேறு ஆரோக்கியத் தேவைகளுக்கு பொருத்தமான வகையில் துறையில் பல அம்சங்களை முதன் முறையாக அறிமுகம் செய்துள்ள ஆரோக்கிய காப்புறுதித் தீர்வாக ஹெல்த் 360 அமைந்துள்ளது. 75 வயது வரை உயர் காப்புறுதி வலையமைப்பை வழங்குவதுடன், வருடமொன்றுக்கு ரூ. 60 மில்லியன் வரை காப்பீடுகளையும் வழங்குகின்றது. உள்வைக்கப்பட்ட பாரதூரமான நோய்களுக்கு எதிரான காப்பீடு, வெளிநோயாளர் சிகிச்சை மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை காப்பீடு போன்றவற்றை வழங்குவதுடன், தடுப்பூசிகள் மற்றும் நோய் இனங்காணல் பரிசோதனைகளுக்கும் காப்பீடுகளை வழங்குகின்றது.

மேலும், ஹெல்த் 360 காப்பீட்டில் காணப்படும் உயர்ந்தளவு அறவீடுகள் ரூ. 150,000 முதல் ரூ. 2,000,000 வரையானதாக அமைந்துள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு உயர் மருத்துவ பணவீக்கம் காணப்படும் சூழலில், தமது ஆயுள் காப்பீட்டை குறைந்த செலவில் அதிகரித்துக் கொண்டு, தமது குடும்பத்தாரின் பாதுகாப்பை உறுதி செய்ய முடிகின்றது.

கடந்த காலத்தில் யூனியன் அஷ்யூரன்ஸ் தனது வாடிக்கையாளர்களை மையப்படுத்திய தந்திரோபாயம் மற்றும் தூரநோக்குடைய செயற்பாடுகளுக்காக கௌரவிப்புகளைப் பெற்றுள்ளது. புதிய தலைமுறை காப்புறுதி அனுபவத்தை வழங்குவதற்காக நிறுவனம் புத்தாக்கத்தில் கவனம் செலுத்துவதுடன், இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையை சிறந்த தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் மாற்றியமைத்த வண்ணமுள்ளது.இலங்கையின் முன்னணி பாங்கசூரன்ஸ் சேவை வழங்குநராக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. ஒன்பது முன்னணி வங்கிப் பங்காளர்களின் 600 க்கும் அதிகமான வங்கிக் கிளைகளுடனான பங்காண்மைகளினூடாக பரந்தளவு பாங்கசூரன்ஸ் வலையமைப்பைக் கொண்டுள்ளது. கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 17.9 பில்லியனைக் கொண்டுள்ளது. ஆயுள் நிதியமாக ரூ. 49.7 பில்லியனையும், 2022 மார்ச் மாதமளவில் முதலீட்டு இலாகாவாக ரூ. 58.5 பில்லியனைக் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், பல வருடங்களாக தொடர்ச்சியாக Great Place to Work© இனால் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனமாக தரப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளதுடன், இலங்கையில் மில்லியன் டொலர் வட்ட மேசையில் (MDRT) முதல்தரத்தில் திகழ்கின்றது.


Share with your friend